TA/Prabhupada 0124 - ஆன்மீக குருவின் வார்த்தைகளை நம்முடைய வாழ்க்கையாகவும் ஆத்மாவாகவும் எடுத்துக் கொள்ள வ: Difference between revisions
No edit summary |
(No difference)
|
Latest revision as of 12:01, 27 May 2021
ஆகையால் அவருடைய வாழ்க்கையில் அவர் அகண்ட பிரமச்சாரி. பக்திவினொத தாகுருக்கு இன்னும் பல புதல்வர்கள் இருந்தார்கள், அவர்களில் இவர் ஐந்தாவது புதல்வராவார். மேலும் அவருடைய மற்ற சில சகோதரர்களும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. மேலும் என் குரு மஹாராஜ், அவரும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இளம் பருவத்திலிருந்து அவர் கடுமையான பிரமச்சாரி, பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி மஹாராஜ். இந்த இயக்கத்தை, உலகளாவிய இயக்கத்தை ஆரம்பிக்க, அவர் மிகவும் கடுமையான தவத்தை மேற்கொண்டார். அது அவருடைய குறிக்கோள். பக்திவினொத தாகுர இதைச் செய்ய விரும்பினார். அவர், 1896-ல், பக்திவினொத தாகுர இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை அறிமுகப்படுத்த விரும்பினார் இந்த புத்தகத்தின் வெளியிட்டின் மூலம், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, அவருடைய வாழ்க்கையும், அதன் அறிவுரைகளும். அதிர்ஷ்டவசமாக, அது நான் பிறந்த வருடம், மேலும் கிருஷ்ணரின் ஏற்பாட்டின்படி, நாங்கள் தொடர்பு கொண்டோம். நான் வேறுபட்ட குடும்பத்தில் பிறந்தேன், என் குரு மஹாராஜ் வேறுபட்ட குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பாதுகாப்பில் நான் வருவேன் என்று யார் அறிவார்? நான் அமெரிக்காவிற்கு வருவேன் என்று யார் அறிவார்? நீங்கள், அமெரிக்க இளைஞர்கள் என்னிடம் வருவீர்கள் என்று யார் அறிவார்? இவை அனைத்தும் கிருஷ்ணரின் ஏற்பாடு. காரியங்கள் எவ்வாறு இடம் பெறுகின்றன என்று நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது.
1936-ல்.....இன்று டிசம்பர் ஒன்பது, 1938 (68). அப்படி என்றால் முப்பத்து-இரண்டு வருடங்களுக்கு முன். பம்பாயில், அந்த நேரத்தில் நான் சில தொழில் செய்துக் கொண்டிருந்தேன். திடீர் என்று, ஒரு வேளை இந்த தேதியில், 9 அல்லது 10 டிசம்பருக்கு இடைப்பட்டு. அந்த நேரத்தில், குரு மஹாராஜுக்கு சிறிது உடல் நலமில்லாமல் இருந்தது, மேலும் அவர் ஜகநாத் புரியில், கடற்கரை ஓரத்தில் வசித்து வந்தார். ஆகையால் நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன், " என் அன்புள்ள குரு, தங்கள் மற்ற சீடர்கள், பிரமச்சாரிகள், சந்நியாசிகள், அவர்கள் தங்களுக்கு பணிவுடன் நேரடிச் சேவை அளிக்கிறார்கள். மேலும் நான் ஒரு இல்லறத்தார். நான் தங்களுடன் வாழ முடியாது, தங்களுக்கு நன்கு சேவை செய்ய இயலாது. ஆகையால் எனக்குத் தெரியவில்லை. நான் தங்களுக்கு எவ்வாறு சேவை செய்ய இயலும்?" வெறுமனே ஓர் சிந்தனை, நான் அவருக்கு சேவை செய்ய நினைத்துக் கொண்டிருந்தேன், "அவருக்கு நான் மனமார எவ்வாறு சேவை செய்வது?" அவரிடமிருந்து வந்த பதிலின் தேதி 13 டிசம்பர், 1936. அந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்தார், " என் அன்புள்ள இன்னார், இன்னார், உங்களுடைய கடிதம் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நான் நினைக்கிறேன் நீங்கள் நம் இயக்கத்தை ஆங்கிலத்தில் முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டும்." அதுதான் அவருடைய பதில். "மேலும் அது உங்களுக்கும், உங்களுக்கு துணை புரிபவர்களுக்கும் நன்மை அளிக்கும்." "மேலும் நான் ஆசைப்படுவது...." அதுதான் அவருடைய ஆணை.
அதன் பிறகு 1936-ல், 31 டிசம்பரில் - அப்படியென்றால் இந்த கடிதம் எழுதி இரண்டு வாரங்களுக்கு பின்பு அவர் மறைந்தார் - அவர் காலமானார். ஆனால் என் ஆன்மீக குருவின் அணையை நான் மிக அக்கறையுடன் ஏற்றுக் கொண்டேன், ஆனால் நான் இன்னின்ன காரியங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்று சிந்திக்கவிலை. அந்த நேரத்தில் நான் ஒரு இல்லறத்தாராக இருந்தேன். ஆனால் இது கிருஷ்ணரின் ஏற்பாடாகும். நாம் நம்முடைய ஆன்மீக குருவிற்கு கவனமாக சேவை செய்ய முயற்சி செய்தால், அவர் ஆணைப்படி, பிறகு கிருஷ்ணர் நமக்கு சகல வசதிகளும் கொடுப்பார். அதுதான் அந்த இரகசியம். அதற்கு அங்கே சாத்தியமில்லை ஆயினும், நான் நினைத்துப் பார்க்கவில்லை, ஆனால் நான் அதை கொஞ்சம் அக்கறையுடன் ஏற்றுக் கொண்டேன் விஸ்வநாத் சக்கரவர்தி தாகுராவின் ஒரு வர்ணனையை பகவத்-கீதையில் படித்ததின் மூலம். பகவத்-கீதையில் இந்த பதம், வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தன (பகவத் கீதை 2.41), அந்த பதத்தின் இணைப்புடன் விஸ்வநாத் சக்கரவர்தி தாகுர அவருடைய வர்ணனையை கொடுத்தார் அதாவது நம் ஆன்மீக குருவின் வார்த்தைகளை நம்முடைய வாழ்க்கையாகவும் ஆத்மாவாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் கட்டளைகளை செய்து முடிக்க முயற்சி எடுக்க வேண்டும், ஆன்மீக குருவின் குறிப்பிட்ட கட்டளையை, மிகவும் கண்டிப்பானமுறையில், நம் சொந்த லாப நஷ்டங்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல். ஆகையால் நான் கொஞ்சம் முயற்சி செய்தேன் அந்த ஆர்வத்துடன். ஆகையால் அவர் எனக்கு அனைத்து வசதிகளையும் அவருக்கு சேவை செய்ய அளித்துள்ளார். காரியங்கள் இந்த நிலைக்கு வந்துவிட்டது, அதாவது இந்த முதுமை வயதில் நான் உங்கள் நாட்டிற்கு வந்திருக்கிறேன், நீங்களும் இந்த இயக்கத்தை அக்கறையுடன் எடுத்துக் கொண்டு, அதை புரிந்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நம்மிடம் சில புத்தகங்கள் இருக்கின்றன. ஆகையால் இந்த இயக்கத்தில் சிறிது பிடிப்பு இருக்கிறது. ஆகையால் என்னுடைய ஆன்மீக குரு மறைந்த நாளான இந்த நிகழ்ச்சியில், அவருடைய ஆசையை நான் செயல்படுத்த முயற்சிக்கிறேன், அதேபோல், நானும் உங்களிடம் அதே ஆசையை செயல்படுத்த வேண்டுகோள் இடுகிறேன். நான் ஒரு முதியவர், நானும் எந்த நிமிடத்திலும் இறக்கலாம். அது இயற்கையின் சட்டம். யாராலும் அதை மாற்ற முடியாது. ஆகையால் அது ஒன்றும் திகைப்புண்டாக்காது, ஆனால் என்னுடைய குரு மஹாராஜின் மறைந்த இந்த புனிதமான நாளில் உங்களுக்கான என்னுடைய வேண்டுகோள், என்னவென்றால் ஆகக் குறைந்தது, சிறிது அளவிற்காவது நீங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சாரத்தை புரிந்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் இதை முன்னேற்ற முயற்சிக்க வேண்டும். இந்த உணர்வை பெறுவதற்காக மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.