TA/Prabhupada 0146 - நான் இல்லாதபோது, இந்த பதிவங்கள் மீண்டும் செயலாற்றப்பட்டால், அது நுண்மையாக அதே அதிர்வு: Difference between revisions

No edit summary
 
(No difference)

Latest revision as of 14:25, 27 May 2021



Lecture on BG 7.4 -- Nairobi, October 31, 1975

கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது பௌதிகத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள். பௌதிக விஞ்ஞானிகள், அவர்கள் நிலவியல் கற்கிறார்கள். என்னவென்று கூறுவார்கள்? மண் வள்ளுனர்கள். அவர்கள் மண்ணைப் பற்றி படிக்கிறார்கள்: "சுரங்கம் எங்கிருக்கிறது? தங்கம் எங்கிருக்கிறது? நிலக்கரி எங்கிருக்கிறது? இது, அது, எங்கிருக்கிறது?" அவர்கள் பல பொருள்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பொருள்கள் எங்கிருந்து வந்தது என்று அவர்களுக்கு தெரியாது. இதோ இங்கு, கிருஷ்ணர் விளக்குகிறார் அதாவது பின்னா மே ப்ரக்ருதி: "இது என்னுடைய சக்தி, என்னுடைய சக்தி." எவ்வாறு இந்த வேறுபட்ட இரசாயனப் பொருள்களும் பூமியின் கருப்பொருள்களும் தோன்றின, எல்லோரும் துருவியறியும் நிலையில் இருக்கிறார்கள், எவ்வித சிந்தனையாளரும். இதோ இருக்கிறது பதில். இதோ இருக்கிறது பதில் அதாவது, பூமிராபோ 'நலோ வாயு: கம் மனோ புத்திரேவச அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா (பகவத் கீதை 7.4).

பின்னா ப்ரக்ருதிரஷ்டதா. எவ்வாறு என்றால் நான் பேசிக் கொண்டிருக்கிறேன், அது பதிவாகிக் கொண்டிருக்கிறது, பதிவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் இல்லாதபோது, இந்த பதிவங்கள் மீண்டும் செயலாற்றப்பட்டால், அது நுண்மையாக அதே அதிர்வுடைய சத்தத்தை ஏற்படுத்தும். ஆகையால் அது என்னுடைய சக்தி அல்லது எவருடைய சக்தியாகவும் இருக்கலாம், ஆனால் பின்னா, என்னிடமிருந்து பிரிக்கப்பட்டது. நீங்கள் அவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும். ஆகையால் அனைத்தும் பகவான், கிருஷ்ணரின் சக்தி, ஆனால் இந்த பௌதிக உலகம் என்றால் நாம் கிருஷ்ணரை விட்டு பிரிந்திருக்கிறோம். எங்கிருந்து இந்த சக்தி வந்தது? அந்த கருத்தை நாம் இழக்கிறோம். பின்னா. இதை அறிந்த ஒருவர்..., எவ்வாறு என்றால், அதே உதாரணம் போல். ஒலிபதிவு செய்யப்பட்ட செய்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால் அந்த சொற்பொழிவை யார் பதிவு செய்தார்கள் என்று தெரியாதவருக்கு, கண்டுபிடிக்க முடியாது. ஆனால் குரலைப் பற்றி தெரிந்த ஒருவர், அவர் புரிந்துக் கொள்வார், "இது பிரபுபாதரிடமிருந்து, அல்லது சுவாமிஜியிடமிருந்து வருகிறது." அதேபோல், சக்தி அங்கிருக்கிறது, ஆனால் நாம் சக்தியின் தோற்றுவாயை பற்றி மறந்துவிட்டோம் அல்லது சக்தியின் மூலத்தைப் பற்றி நமக்கு தெரியாது, ஆகையினால் நாம் ஜடப் பொருள்களை இறுதியானதாக எடுத்துக்கொள்கிறோம். இது நம்முடைய அறிவின்மை. இந்த ப்ரக்ருதி, இந்த ஜட உலகம், இந்த பொருள்களால் உருவாக்கப்பட்டது: பூமிராபோ 'நலோ வாயு: கம் மனோ புத்திரேவச (பகவத் கீதை 7.4). ஆகையால் இது எங்கிருந்து வந்தது? அதை கிருஷ்ணர் விளக்குகிறார், அதாவது "அவை என்னுடைய சக்திகள்." ஏனென்றால் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும், ஆகையால்.., கிருஷ்ணரை புரிந்துக் கொள்வது என்றால், ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டியது, இந்த பூமி, தண்ணீர் என்பது என்ன, இந்த நெருப்பு என்பது என்ன, காற்று என்பது என்ன, வானம் என்பது என்ன, மனம் என்பது என்ன, தற்பெருமை என்பது என்ன. இந்த பௌதிக பொருள்கள், அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும், இந்த பொருள்கள் எங்கிருந்து வந்தது என்று. தண்ணீர், சில இரசாயானப் பொருள், நீர்வாயு, பிராணவாயுவின் கூட்டுப் பொருள் என்பதை மட்டும் அவர்கள் தத்துவ ஆராய்ச்சி ஒன்று செய்தார்கள். ஆனால் இந்த இரசாயானம், நீர்வாயு, பிராணவாயு எங்கிருந்து வந்தது? அதற்கு அவர்களால் பதில் கொடுக்க முடியவில்லை. ஆகையினால் இது அஸிந்திய-ஷக்தி என்றழைக்கப்படுகிறது. அஸிந்திய-ஷக்தி. நீங்கள் விண்ணப்பிக்காமல், நீங்கள் மறுத்தால், அஸிந்திய-ஷக்தி, பகவானிடத்தில், அஸிந்திய-ஷக்தி, நினைத்துப் பார்க்க முடியாத சக்தி, இல்லையெனில் அங்கே பகவான் இல்லை. அஸிந்திய-ஷக்தி சம்பன்ன: இப்போது உங்களுக்கு புரியும் அந்த அஸிந்திய-ஷக்தி என்னவென்று. அஸிந்திய-ஷக்தி உங்களிடமும் இருக்கிறது, அஸிந்திய-ஷக்தி, எல்லோரிடமும், ஏனென்றால் நாம் பகவானின் அங்க உறுப்புகளாவோம். ஆகையினால் மிகச் சிறிய... ஆனால் நாம், அதன் சதவிகிதம் என்ன? அதன் சதவிகிதம், சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது, அது என்ன? கேஷாகர-ஷத-பாகஸ்ய ஷடதாகல்பிதஸ்ய ச ஜீவ-பாகஹ ஸவிஞேயஹ ச சாநன்யாய கல்பதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.140). கேஷாகர-ஷத-பாகஸ்ய. சும்மா ஒரு யோசனை கொடுப்பது. அது என்ன? முடியின் நுனி, சும்மா ஒரு முற்றுப்புள்ளி, இந்த புள்ளியை நீங்கள் நூறு பகுதிகளாக பிரியுங்கள். மேலும் அந்த ஒரு பகுதியை மீண்டும் நூறு பகுதிகளாக பிரியுங்கள், அப்படியென்றால், முடியின் நுனியின் ஒரு பத்தாயிரம் பகுதிகள். அது ஒரு முற்றுப்புள்ளி போல் தோன்றுகிறது. அதுதான் ஜீவ, ஆன்மா, ஆன்மீக தீப்பொறி, பரமாணு பகுதி, அணுவைச் சார்ந்த பகுதியின் பரும அளவு. ஆகையால் கேஷாகர-ஷத-பாகஸ்ய ஷடதாகல்பிதஸ்ய ச ஜீவ-பாகஹ ஸவிஞேயஹ ச சாநன்யாய கல்பதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.140).

ஆகையால் அங்கு பரும அளவு உள்ளது, ஆனால் இந்த ஜட கண்களால் நாம் வெறுமனே மொத்தப் பொருள்களை தான் பார்க்க முடியும். இந்த ஆக்கும் பொருள்களைப் பற்றி நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் சாஸ்திரத்தின் மூலம் ஸ்ருதியிலிருந்து நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். பகவத்-கீதையில் ஒரு பதம் இருக்கிறது, இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய பரம் மன: மனஸஸ்து பரா புத்தி: (பகவத் கீதை 3.42). எவ்வாறு என்றால் இங்கு சொல்லப்பட்டுள்ளது, மனோ புத்தி: மனஸஸ்து பரா புத்தி:. மனத்தைவிட மென்மையாகவோ அல்லது தலைசிறந்தது அறிவுக் கூர்மையாகும். மற்றொரு இடத்திலும் இது விளக்கப்பட்டுள்ளது, அதாவது மோசமான காரியங்கள் என்றால் இந்த புலன்களே. இந்த்ரியாணி பராண்யாஹு: இது மோசமான தொற்றம். நான் ஒரு மனிதனை பார்க்கிறேன் என்றால், நான் அவர் உடலை, அவர் கண்களை, அவர் காதை, அவர் கையும் கால்களும் அனைத்தையும் பார்க்கிறேன். அது மோசமான தொற்றம். ஆனால் இந்த மோசமான புலன்களைவிட மென்மையாக, அங்கே மனம் புலன்களை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதை நீங்கள் பார்க்கவிலை. இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய பரம் மன: (பகவத் கீதை 3.42). பிறகு மனம் அறிவாற்றலால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனோ புத்தி: மனஸஸ்து பரா புத்தி:. ஆகையால் நீங்கள் அவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டும். வெறுமனே சாதாரண மனிதரைப் போல் நீங்கள் அதாவது "அங்கே பகவான் இல்லை, ஆன்மா இல்லை," என்று நிக்கிவிட்டால், இது அயோக்கியத்தனம், அயோக்கியத்தனம். அயோக்கியர்களாக இருக்காதீர்கள். இதோ பகவத்-கீதை. அனைத்தையும் மிக குறிப்பாக, மிக துல்லியமாக கற்றுக் கொள்ளுங்கள். அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.