TA/Prabhupada 0087 - பௌதிக இயற்கையின் விதி



Sri Isopanisad Invocation Lecture -- Los Angeles, April 28, 1970

ஆம். இந்த உலகத்தில் உள்ள அனைத்திற்கும், ஒரு குறிப்பிட்ட அவகாசம் உண்டு. அந்த தீர்மானிக்கப்பட்ட காலத்தில், ஆறு விதமான மாறுதங்கள் ஏற்படுகின்றன. முதலாவது பிறப்பு, பிறகு வளர்ச்சி அடைவது, பிறகு வாழ்வது, பிறகு சந்ததிகளை உருவாக்குவது, பிறகு படிப்படியாக வலிமையை இழப்பது, இறுதியில் மறைந்து விடுவது. இதுதான் ஜட இயற்கையின் விதி. இந்த பூ பிறக்கிறது, மொட்டு விடுகிறது, பிறகு வளர்ந்து மலர்கிறது, பிறகு இரண்டு மூன்று நாட்கள் வரை வாழ்கிறது, பிறகு அதிலிருந்து விதைகள், அதாவது அதனுடைய சந்ததிகள் முளைக்கின்றன, பிறகு படிப்படியாக காய்ந்து, இறுதியில் காணாமல் போகிறது. ( அருகில் பார்த்து: ) நீ இப்படி உட்கார். இதற்கு தான் ஷட்-விகாரம் எனப் பெயர், ஆறு விதமான மாற்றங்கள். உங்கள் ஜட அறிவியலை வைத்து இதை நிறுத்த முடியாது. முடியாது. இதுதான் அவித்யா. மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள முயல்கிறார்கள், மேலும் சிலசமயங்களில் விஞ்ஞானத்தின் உதவியால் மனிதன் மரணத்தை வெல்ல முடியும் என முட்டாள்தனமாக பிதற்றுகிறார்கள். ரஷியர்கள் அப்படித்தான் கூறுகிறார்கள். ஆக அதுதான் அவித்யா, அரியாமை. ஜட இயற்கையின் விதிகளை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே பகவத் கீதையில், தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா (பகவத் கீதை 7.14). என கூறப்பட்டிருக்கிறது. ஜட இயற்கையின் சட்டம், முக்குணங்களின் இணைப்பினால் செயல்படுத்தப்படுகிறது - ஸத்வ-குணம், ரஜோ-குணம், தமோ-குணம் ... த்ரி-குண. குண என்ற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் என்றால் கயிறு. நீங்கள் கயிற்றை பார்த்திருப்பீர்கள், அவை மூன்று முறை கயிறுகளை பின்னி தயாரிக்கப்படுகின்றன. முதலில் மெல்லிய கயிறு, அப்படி மூன்று கயிறுகள், அவை பின்னப்படுகின்றன, அப்படி செய்த மூன்று கயிறுகள் மீண்டும் பின்னப்படுகின்றன, மீண்டும் மூன்று. இப்படி அது வலுவானதாக ஆகிவிடுகிறது. அதுபோலவே இந்த முக்குணங்கள், அதாவது ஸத்வம், ரஜோ-குணம், தமோ-குணம், இவை இணைந்து இருக்கின்றன. அவற்றின் கலவையால் வேறொன்று உருவாகும், மறுபடியும் வேறொரு கலவை, மறுபடியும் ஒரு கலவை. இப்படி எண்பத்தி-ஓரு முறை அவை வெவ்வேறு அளவுகளில் இணைகின்றன. ஆக குணமயீ மாயா, மேன்மேலும் உங்களை சிக்க வைக்கிறது. ஆக இந்த ஜட உலகின் கட்டுப்பாட்டிலிருந்து உங்களால் தம்மை விடுவிக்க இயலாது. பந்தம். ஆகவே அது அபவர்க என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண உணர்வு என்றால் பவர்க எனும் வாழ்க்கை முறையை நீக்குவது. நேற்று நான் இந்த பவர்க முறையை பற்றி கர்கமுனி இடம் விளக்கியிருந்தேன். பவர்க என்றால், "ப" என்ற எழுத்து முதல் உள்ள அகரவரிசை. தேவநாகரி எழுத்துகளை படித்தவர்களுக்கு இது தெரியும். क (க) ख (ஃக) ग (க') घ (ஃக') ङ (ஞ) च (ச) छ (ஃச) ज (ஜ) झ (ஃஜ) ञ (ந) இவை தேவநாகரி எழுத்துகள். இப்படி, ஒரு வரிசையில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. அப்படி, ஐந்தாம் எழுத்து கட்டு தான் प (ப) फ (ஃப) ब (ப') भ (ஃப') म (ம). ஆக இந்த பவர்கம் என்றால் ப முதல் ஆரம்பிக்கும் வரிசை. ப என்றால் பரவ, தோல்வி. பிழைப்புக்காக ஒவ்வொருவரும் கடுமையாக முயல்கிறோம், போராடுகிறோம், ஆனால் இறுதியில் தோல்வி தான் மிச்சம். முதல் பவர்கம். ப என்றால் பரவ. பிறகு ஃப, ஃப எழுத்திலிருந்து ஃபேண அதாவது நுரைகக்குதல். ஒரு குதிரையை போலவே, கடுமையாக உழைக்கும் பொழுது, வாயிலிருந்து நுரை வருவதை நீங்கள் பார்க்கலாம். நமக்கு மிகவும் களைப்பாக இருக்கும் பொழுது, கடுமையாக உழைத்தப் பிறகு, நாக்கு வறண்டு, சுற்றளவு நுரை வரும். ஆக எல்லோரும் புலன்களை திருப்திப்படுத்துவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள், ஆனால் இறுதியில் தோல்வி அடைகிறார்கள். ப, ஃப பிரகு ப' (ब / Ba). இந்த எழுத்து பந்தத்தை குறிக்கிறது. ஆக முதலில் ப, இரண்டாவது ஃப, பிறகு பந்தம் மூன்றாவது, பிறகு ஃப' (भ / Bha ). இது பயத்தை குறிக்கிறது. இறுதியில் ம. ம என்றால் ம்ருத்யு, அதாவது மரணம். ஆக இந்த கிருஷ்ண பக்தி என்பது அபவர்கத்தை அளிக்கும் முறை. அப, அ என்றால் எதிர்ச்சொல், அதாவது இல்லை. பவர்க, இவை இந்த பௌதிக உலகின் அறிகுறிகள், அத்துடன் "அ" என்ற எழுத்தை இணைக்கும் பொழுது, "அபவர்க", அதாவது அந்த அறிகுறிகள் இல்லாமல் போகின்றன என அர்த்தம்.