TA/Prabhupada 0089 - கிருஷ்ணரின் சுடரொளியே அனைத்திற்கும் மூலாதாரம்

Revision as of 04:23, 27 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 4.24 -- August 4, 1976, New Mayapur (French farm)

பிரான்சு பக்தர்: "நான் அவர்களுக்குள் இல்லை" என்று கிருஷ்ணர் சொல்லுவதன் பொருள் என்ன?

பிரபுபத: "நான் அவர்களுக்குள் இல்லை" ஏனென்றால் நீங்கள் அங்கு காண முடியாது. கிருஷ்ணா அங்கு தான் இருக்கிறார். ஆனால் உங்களால் அவரை பார்க்க முடியாது. நீங்கள் இன்னும் முன்னிலை அடையவில்லை. மற்றுமொரு உதாரணத்தை போல, இங்கு சூரிய வெளிச்சம் இருக்கிறது. அனைவரும் அதை உணருக்கிறோம். ஆனால் சூரியன் இங்கு இருப்பதாக அர்த்தம் ஆகாது. இது தெளிவாக புரிகிறதா? சூரியன் இங்கு இருக்கிறது என்பதன் அர்த்தம்.. சூரிய வெளிச்சம் இங்கு இருக்கிறது என்பதன் பொருள் சூரியன் இங்கு இருப்பது என்பதாகும். ஆனாலும் நீங்கள் சூரிய வெளிச்சத்தில் இருப்பதால், "நான் இப்பொழுது சூரியனை பிடித்து விட்டேன்" என்று சொல்ல முடியாது. சூரிய வெளிச்சம் சூரியனில் இருந்து வருகிறது. ஆனால் சூரியன் சூரிய வெளிச்சத்தில் இருப்பதில்லை. சூரியன் இல்லாமல் சூரிய வெளிச்சம் இல்லை. ஆனால் அதற்காக சூரிய வெளிச்சம் தான் சூரியன் என்று அர்த்தம் ஆகாது. அதே நேரத்தில், சூரிய வெளிச்சம் என்றால் சூரியன் என்று சொல்லலாம். இது அசிந்திய-பேட்āபேத எனப்படும். அதே நேரத்தில் ஒன்று மற்றும் மாறுபட்டது. சூரிய வெளிச்சத்தில் நீங்கள் சூரியன் இருப்பதை உணரலாம், சூரிய மண்டலத்தில் நீங்கள் நுழைய முடியுமானால், நீங்கள் சூரிய பகவானை பார்க்க முடியும். உண்மையில் சூரிய வெளிச்சம் என்பது சூரிய மண்டலத்தில் வாசிக்கும் மனித உடல் கதிர்கள் மட்டுமே. இது பிரஹ்மா-சம்ஹித்தவில் விளக்கப்பட்டுள்ளது. யாசிய .ā . .-அṇḍஅ-கோṭஇ (.. 5.40). கிருஷ்ணாவின் கணக்கில்... கிருஷ்ணருடய ஜோதி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதுவே அனைத்திற்கும் மூலமானது. அந்த ஒளிக்கு விரிவான விளக்கம் என்பது பிரஹ்மாஜோதி, மேலும் அந்த பிரஹ்மாஜோதியில், எண்ணற்ற ஆன்மீக கோள்கள், லௌகிக கோள்கள் உருவாக்க படுகின்றன. அந்த ஒவ்வொரு கோள்களிலும் விதவிதமான காட்சி அமைப்பு உள்ளது. உண்மையில், கிருஷ்ண கதிர்களின் உடல் மற்றும் கதிர்களை உருவாக்கும் உடலின் மூலம் அனைத்தும் கிருஷ்ணா.