TA/Prabhupada 0118 - சொற்பொழிவாற்றுதல் கடினமான வேலையல்ல



Lecture on SB 1.5.8-9 -- New Vrindaban, May 24, 1969

கிருஷ்ணரிடம், அல்லது பகவானிடம் சரணடையும் ஒருவர் மிகவும் பாக்கியவான். பஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே (பகவத் கீதை 7.19). சரணமடைந்த ஒருவர், அவர் சாதாரண மனிதரல்ல. அவர் அனைத்து கல்விமான்களைவிட, தத்துவஞானிகளைவிட, யோகிகளைவிட, கர்மீகளைவிட உயர்ந்தவர். மிக உயர்ந்த மனிதர், சரணடைந்த ஒருவர். ஆகையினால் அது மிகவும் அந்தரங்கமானது. ஆகையால் எங்கள் கற்பித்தல், கிருஷ்ண பக்தி இயக்கம், பகவத் கீதை உண்மையுருவில் வழங்குவது, கிருஷ்ணரிடம், அல்லது பகவானிடம் எவ்வாறு சரணடைவது என்பதை மக்களுக்கு கற்பிக்கும் ஒரு செயல்முறையாகும். அவ்வளவுதான். ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார் இது அந்தரங்கமானது. ஒருவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் எதையும் எதிர்கொள்ளும் ஒருவர், "தயவுசெய்து, சரணடையுங்கள்." ஆகையினால் நீங்கள் சமய போதனைக்குச் செல்லும் போது, சில சமயங்களில் நீங்கள் அறிவீர்கள், போதிப்பவர்கள் தாக்கப்படுகிறார்கள். எவ்வாறு என்றால் நித்யானந்த பிரபு ஜகாய்-மாதைய் இவர்களால் தாக்கப்பட்டது போல். மேலும் பகவான் ஏசு பிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டது போல். ஆகையால் சமய போதனையாளர்களுக்கு அந்த ஆபத்து உள்ளது. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், "பகவத்-கீதை உண்மையுருவில் போதனையளிப்பதில் ஈடுபட்டுள்ள இந்த வயல்வெளி வேலை செய்பவர்கள், எனக்கு மிகமிக அன்புக்குரியவர்கள். எனக்கு மிகமிக அன்புக்குரியவர்கள்." ந ச தஸ்மான் மனுஷ்யேஷூ கஷ்சின்மே ப்ரிய-க்ருத்தம: (பகவத் கீதை 18.69). "இந்த அந்தரங்கமான உண்மையை மக்களுக்கு போதிப்பவர்களைவிட என் அன்பிற்குரியவர்கள் வேறு யாருமில்லை."

ஆகையினால் நாம் கிருஷ்ணரை திருப்திபடுத்த வேண்டுமானால், நாம் இந்த ஆபத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணர், குரு, என் ஆன்மீக குரு சமய போதனையளிக்க இந்த ஆபத்தை ஏற்றுக் கொண்டார், மேலும் அவர் அந்த போதனையளிக்கும் வேலையை செய்ய நமக்கு ஊக்கமளித்தார். இன்னும் நாங்களும் இந்த போதனையளிக்கும் வேலையை ஏற்றுக் கொள்ள உங்களை நிர்ப்பந்திக்கிறோம். ஆகையால் இந்த போதனையளிக்கும் வேலையை, நான் சொல்வதாவது, தரம் குறைவாக நாம் செய்தால்..., தரம் குறைவாக - அது மோசமாக இல்லை, ஒரு வேளை எனக்கு சரியான படிப்பறிவு இல்லையெனில். எவ்வாறு என்றால் இந்த சிறுவனை போல். நான் அவனை போதனையளிக்கும் வேலைக்கு அனுப்பினால், அவன் தற்சமயம் அதிகம் படிக்கவில்லை. அவன் ஒரு தத்துவஞானி அல்ல, ஒரு கல்விமானல்ல. ஆனால் அவனாலும் போதனையளிக்க முடியும். அவனாலும் போதனையளிக்க முடியும். ஏனென்றால் எங்களுடைய போதனை கடினமானதல்ல. நாங்கள் வீடு வீடாக சென்று வெறுமனே மக்களிடம் வேண்டுகோளிட்டால், "என் அன்புள்ள ஐயா, நீங்கள் ஹரே கிருஷ்ண ஜெபியுங்கள்." மேலும் அவர் சிறிது முதுமையடைந்தவராக இருந்தால், " தயவுசெய்து பகவான் சைதன்யாவின் உபதேசங்களை படிக்க முயற்சி செய்யுங்கள். அது மிக நன்றாக இருக்கிறது. நீங்கள் பயனடைவீர்கள்." இந்த மூன்று நான்கு வார்த்தைகள் உங்களை ஒரு போதனையாளராக்கும். இது மிக கடினமான வேலையா? நீங்கள் சிறந்த கற்றவராக, சிறந்த கல்விமானாக, சிறந்த த்ததுவஞானியாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் வெறுமனே கூறுங்கள்..., வீடு வீடாக செல்லுங்கள்: "என் அன்பார்ந்த ஐயா, நீங்கள் சிறந்த கற்றறிந்தவர். இந்த சில நேரத்திற்கு, நீங்கள் கற்பதை நிறுத்துங்கள். வெறுமனே ஹரே கிருஷ்ண ஜேபியுங்கள்."