TA/Prabhupada 0148 - நாம் பகவானின் அங்க உறுப்புகள் ஆவோம்

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Lecture on SB 7.6.1 -- Madras, January 2, 1976

அது தான் தர்ம. சம்பந்த, அபிதேய, ப்ரயோஜன, இந்த மூன்று காரியங்கள். வேதங்கள் முழுவதும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சம்பந்த, கடவுளுடனான நம் தொடர்பு.அதை சம்பந்த என்று கூறுகிறோம். அதன் பிறகு அபிதேய. அந்த உறவுக்கேற்ப நாம் செயலாற்ற வேண்டும். அதை அபிதேய என்று கூறுகிறோம். மேலும் நாம் ஏன் செயலாற்ற வேண்டும்? ஏனென்றால் நமக்கு வாழ்க்கையில் குறிக்கொள் இருப்பதால் அதை அடைய வேண்டும். ஆகையால் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்றால் அதாவது, ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் வீடுபேறு அடைவதே. அதுவே வாழ்க்கையின் குறிக்கோள். நாம் பகவானின் அங்க உறுப்புகள் ஆவோம். பகவான் ஸநாதன ஆவார், மேலும் அவருக்கு சொந்தமான ஸ்தலம் உள்ளது, ஸநாதன. பரஸ்தஸ்மாத்து பாவோ'ன்யோ' வ்யக்தோ'வ் யக்த்தாத் ஸநாதன: (பகவத் கீதை 8.20). அங்கே ஓர் நித்தியமாக நிலைத்திருக்கும் இடமிருக்கிறது. இந்த பௌதிக உலகம், என்றென்றும் நிலைத்திருக்காது. அது பூத்வா பூத்வா ப்ரலீயதே (பகவத் கீதை 8.19). இது ஒரு நிச்சயக்கப்பட்ட நாளில் வெளிப்படுத்தப்பட்டது. எவ்வாறு என்றால் உங்கள் உடலும் என் உடலும், ஒரு நிச்சயக்கப்பட்ட நாளில் வெளிப்படுத்தப்பட்டது போல். அது சில காலத்திற்கு தங்கியிருக்கும். அது வளரும். அது சில உப-உற்பத்தி கொடுக்கும். பிறகு நாம் முதுமை அடைவோம், பிறகு குறைந்துக் கொண்டே போய், அதன்பின் இறந்துவிடுவோம். எந்த பொருளாயினும் பௌதிகமாக இருந்தால், இதை ஷடா-விகார என்று கூறுகிறோம். ஆனால் ஷடா-விகார அல்லாத மற்றோரு இயற்கை அங்கே இருக்கிறது. அது நித்தியமானது. ஆகையால் அதை ஸநாதன-தாம் என்று கூறுகிறோம். மேலும் இந்த ஜீவஸ், நாம் ஜீவாத்மாக்கள், நாமும் நித்தியமானவர்கள் என்று விவரிக்கப்படுகிறது. ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20). மேலும் பகவானும் ஸநாதன என்று அழைக்கப்படுகிறார். ஆகையால் நம் உண்மையான சூழ்நிலை யாதெனின் நாம் ஸநாதன, கிருஷ்ணரும் ஸநாதன, மேலும் கிருஷ்ணருக்கு அவருடைய ஸ்தலம் இருக்கிறது, ஸநாதன. நாம் அந்த ஸநாதன-தாமிற்கு பரமபதத்தை அடைந்து நித்தியமான ஸநாதன, கிருஷ்ணருடன் வாழும் போது, பிறகு நாமும் ஸநாதன. நாம் வாழ்க்கையின் உயர்ந்த இலக்கை அடைய கூடிய முறை, அதுதான் ஸநாதன-தர்ம என்று கூறப்படுகிறது. நாம் இங்கு ஸநாதன-தர்மத்தை செயலாற்றுகிறோம். ஆகையால் ஸநாதன-தர்மாவும் இந்த பாகவத-தர்மாவும், ஒரே மாதிரியானவையே. பாகவத, பகவான். பகவான் என்ற சொல்லிருந்து பாகவத வந்தது. ஆகையால் இந்த பாகவத-தர்ம ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் வர்ணிக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகிறார், ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய க்ருஷ்ண தாஸ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 20.108-109). நாம் கிருஷ்ணரின் நித்தியமான சேவகர்கள். இதுதான். ஆனால் தற்சமயத்தில், நம்முடைய பௌதிக இணைப்பால், பகவானின் அல்லது கிருஷ்ணரின் சேவகனாக இருப்பதற்கு பதிலாக, நாம் பலவிதமானவற்றிற்கும், மாயாவிற்கும், சேவகர்களாகிவிட்டோம், ஆகையினால் நாம் கஷ்டப்படுகிறோம். நாம் திருப்தியடையவில்லை. அங்கு இருக்க முடியாது. அது பொருத்தமாகாது. எவ்வாறு என்றால் நீங்கள் ஒரு திருகாணியை இயந்திரத்திலிருந்து எடுங்கள். அந்த திருகாணி எப்படியோ கீழே விழுந்துவிட்டால் அதற்கு விலைமதிப்பிலை. ஆனால் அதே திருகாணியை நீங்கள் ஒரு இயந்திரத்தில் பொருத்தினாலோ, அல்லது திருகாணி தேவைப்படுவதால் இயங்காத இயந்திரம், தடைபட்ட நிலையில் இருக்கும், ஆகையால் நீங்கள் அதே திருகாணியை எடுத்து பொருத்தினால், அந்த இயந்திரம் இயங்கத் தொடங்கும், மேலும் அந்த திருகாணி மிகவும் விலைமதிப்புள்ளதாகிறது. ஆகையால் நாம் பகவான், கிருஷ்ணரின் அங்க உறுப்புக்கள். மமைவாம்ஷோ ஜீவபூதா: (பகவத் கீதை 15.7) கிருஷ்ணர் கூறுகிறார். ஆகையால் நாம் இப்போது பிரிக்கப்பட்டுவிட்டோம். நாம் தாழ்வை அடைந்துவிட்டோம். மற்றொரு உதாரணம் எவ்வாறென்றால் பெரிய நெருப்பும் சிறிய தீப்பொறி போல். அந்த சிறிய தீப்பொறியும் நெருப்பு தான் அது நெருப்பொடு இருக்கும் வரை. வேறு எப்படியோ சிறிய தீப்பொறி நெருப்பிலிருந்து கீழே விழுந்துவிட்டால், அது அணைந்துவிடும். அங்கே நெருப்பின் தன்மை இருக்காது. ஆனால் நீங்கள் அதை மறுபடியும் எடுத்து நெருப்பில் போட்டால், மறுபடியும் அது தீப்பொறியாகும். ஆகையால் நம் நிலை அதேபோல் தான். எப்படியோ நாம் இந்த ஜட உலகத்திற்கு வந்துவிட்டோம். நாம் சிறிய துகள்களாக, முழுமுதற் கடவுளின் துண்டுப் பகுதிகளானாலும், ஏனென்றால் நாம் இந்த ஜட உலகில் இருப்பதால், நாம் பகவானுடனான் நம் உறவை மறந்துவிட்டோம், மேலும் நம்முடைய, மன: ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி (பகவத் கீதை 15.7). பௌதிக உலகத்தின் சட்டத்திர்கேதிராக நாம் போராடுகிறோம், இன்னும் வேறு பல விஷயங்கள். இங்கேயும் நாம் சேவை செய்கிறோம் ஏனென்றால் நாம் நித்தியமான சேவகர்கள். ஏனென்றால் பகவானுக்கு செய்யும் சேவையை நாம் விட்டுவிட்டோம், நாம் மற்ற பல காரியங்களை செய்யும் சேவகனாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டுவிட்டோம். ஆனால் ஒருவரும் திருப்தி அடையவில்லை, மாண்புமிகு நீதிபதி கூறுவது போல், அதாவது ஒருவரும் திருப்தியடையவில்லை. அது உண்மையே. அதில் திருப்தி அடைய முடியாது. அது திருப்தியடைய முடியாது ஏனென்றால் நாம் உடலமைப்பின்படி பகவானின் சேவகர்கள், ஆனால் நாம் இந்த ஜட உலகில் அதிகமான மற்ற பொருந்தாத காரியங்களுக்கு சேவை செய்ய இடப்பட்டிருக்கிறோம். ஆகையினால் நாமே சேவை செய்ய திட்டம் வகுக்கிறோம். அதை தான்தோன்றித்தனம் என்று கூறுகிறோம். மன: ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி (பகவத் கீதை 15.7). ஒரு போராட்டம், அது ஒரு போராட்டம்.