TA/Prabhupada 0206 - வேதகால சமுதாயத்தில் பணத்தை பற்றிய கேள்வியே இல்லை

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Morning Walk -- October 16, 1975, Johannesburg

பிரபுபாதா: அனைவரையும் பாவிகளாய் நினைத்து பயிற்சி கொடு. அது தான் இப்பொழுது தேவை அனைவரையும் பாவிகளாக கருது .. இங்கு அறிவார்ந்த மனிதன் இருக்கிறான்.. இங்கே பாவி இருக்கிறான்.. இது போன்ற கேள்விக்கே இடம் இல்லை அனைவரையுமே பாவிகளாக கருதி , பயிற்சி கொடு .. அது தான் இப்பொழுது தேவையாக இருக்கிறது அது தான் இப்பொழுதைய தேவை. இப்பொழுது இந்த தருணத்தில் உலகம் முழுவதுமே பாவிகள் நிறைந்திருக்கிறார்கள் இப்போது, அவர்கள் கிருஷ்ண உணர்வுக்கு வந்தால், அவர்களில் இருந்து தேர்ந்தெடு. நான் பயிற்சி அளிப்பது போல.. பயிற்சியின் மூலம் நீங்கள் அந்தணர்களாக ஆகி இருக்கிறீர்கள். எனவே , யார் ஒருவர் பிராமணராக பயிற்சி எடுக்க தயாராக இருக்கிறார்களோ, அவர்களை பிராமணர்களாக வகைப்படுத்து. க்ஷத்ரியனாக பயிற்சி எடுக்க விரும்புவோரை க்ஷத்ரியராக வகைப்படுத்து. இந்த வகையில் , cātur-varṇyaṁ māyā sṛṣ... ஹரிகேசா : க்ஷத்ரியரை அடிப்படையில் சூத்திரர்களாக வகைப்படுத்தி பின்னர் அவர்களிருந்து தேர்ந்தெடுக்கவேண்டுமா? பிரபுபாதா: ம்ம் ..?? ஹரிகேசா: க்ஷத்திரியர் தான் சூத்திரர்களை தேர்ந்தெடுப்பாரா? பிரபுபாதா : இல்லை இல்லை .. நீ தேர்ந்தெடு. மக்கள் அனைவரையும் சூத்திரர்களாக எடுத்துக்கொள். ஹரிகேசா : அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டுமா.? பிரபுபாதா : ஆம்., எவன் ஒருவன் பிராமணன் அல்லனோ .. எவன் ஒருவன் வைசியர் அல்லனோ , அல்லது எவன் ஒருவன் க்ஷத்திரியன் அல்லனோ,. அவன் சூத்ரன் ஆவான். அவ்வளவே, சுலபமான விஷயம் . ஒருவனை பயிற்சியின் மூலம் பொறியாளனாக ஆக்க முடியாதெனில் , அவன் சாதாரண மனிதனாக எஞ்சியிருப்பான். கட்டாயப்படுத்தல் இல்லை. இந்த சமூகத்தை சரியாக அமைக்கும் வழி இது. கட்டாயம் என்பது இல்லை .. சூத்திரர்களும் தேவை. புஷ்ட கிருஷ்ணா : இந்த நவீன சமுதாயத்தில், அதிக பணம் இருத்தால் தான் ஒருவன் பொறியாளனாகவோ, அல்லது படித்தவனாகவோ ஆகலாம். வேத அறிவிற்கு என்ன கட்டணம் செலுத்தவேண்டும்.? பிரபுபாதா: அதற்கு பணம் தேவையில்லை. பிராமணர்கள் அனைத்தையுமே இலவசமாக கற்றுக்கொடுப்பார்கள். பணத்தை பற்றிய கேள்வியே இல்லை. யார்வேண்டுமானாலும், பிராமணனாக, அல்லது க்ஷத்ரியனாக, வைசியராகவோ கல்வி கற்றுக்கொள்ளலாம் வைசியருக்கு கல்வி தேவையில்லை க்ஷத்ரியருக்கும் சிறிது கல்வி தேவைப்பட்டது. பிராமணருக்கு நல்ல கல்வி தேவை. ஆனால் அது இலவசம் தான் ஒரு பிராமண குருவை தேர்தெடுக்க வேண்டும். அவர் இலவச கல்வியை வழங்குவார். இப்பொழுதுள்ள காலகட்டத்தில் , ஒருவன் படிக்கவேண்டும் என்றால் நிச்சயம் பணம் தேவைப்படுகிறது. ஆனால் வேத கலாச்சாரத்தில் பணத்தை பற்றியே கேள்விக்கே இடம் இல்லை .. இலவச கல்வி. ஹரிகேசா : சமூகத்தின் மகிழ்ச்சி கருதி அனைத்தும் செய்யப்பட்டது. சரிதானே? பிரபுபாதா : ஆம் .. அது தான்.. எல்லோரும் மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்று தேடுகின்றனர். இது தான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் .. மக்கள் அவர்களின் வாழ்க்கை நிலையில், எப்பொழுது அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனரோ, அதுதான் சந்தோஷத்தை கொண்டுவரும். வானுயர கட்டிடம் இருந்தால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று நினைத்துக்கொண்டிருக்க கூடாது.. பிறகு அதிலிருந்தே விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது நடந்து கொண்டிருக்கிறது. அவன் என்ன நினைக்கிறான் என்றால், வானுயர கட்டிடம் என்னிடமிருந்தால் , நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று நினைக்கிறான். அவன் வெறுப்பின் உச்சத்திற்கு செல்லும்போது அதிலிருந்து குதிக்கிறான். இது நடந்துகொண்டு தான் இருக்கிறது. இது மகிழ்ச்சியா ? இது சந்தோஷம் தரும் என்றால் அனைவரும் பாவிகள் தான். அவர்களுக்கு எது சந்தோஷத்தை தரும் என்று தெரியவில்லை. எனவே அனைவருக்கும் கிருஷ்ணரின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அது தான் கிருஷ்ண உணர்வு. நீங்கள் சற்றுநேரத்திற்கு முன் , இங்கே தற்கொலைகள் அதிகம் நடக்கிறது என்று கூறினீர்கள் அல்லவா? புஷ்ட கிருஷ்ணா: ஆம்.. பிரபுபாதா : ஏன்? இந்த நாடு தங்க சுரங்கங்களை கொண்டுள்ளது . பின்னர் எதற்காக இப்படி நடக்கின்றது ?. இங்கே ஏழையாவது கஷ்டம் என்று கூறினீர்கள் அல்லவா? புஷ்ட கிருஷ்ணா: ஆமாம், இங்கே ஏழையாவதற்கு சிரமப்படவேண்டும். பிரபுபாதா: ஆம். பின்னர் ஏன் தற்கொலைகள் நடக்கின்றது ? அனைவரும் இங்கே பணம் படைத்தவர்கள் தான். அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள். உங்களால் பதில் கூற முடியுமா ? பக்தர்: அவர்களிடம் முதன்மையான மகிழ்ச்சி இல்லை. பிரபுபாதா : ஆமாம். அங்கே சந்தோஷம் இல்லை.