TA/Prabhupada 0230 - வேத கால அடிப்படையில் நான்கு வகையான சமுதாயம் இருந்தது

Revision as of 18:44, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.1-5 -- Germany, June 16, 1974

ஆக இது அர்ஜுனருக்கும், கிருஷ்ணருக்கும் இடையே, குருக்ஷேத்திர போர்களத்தில் நடந்த ஒரு உரையாடல். அதில் விஷயம் என்னவென்றால், போர் என்பது நிச்சயம் ஆனப்பிறகும், " எதிர்கட்சியில் நிற்பவர்கள் அனைவரும் என் உறவினர்கள்," என்பதை அர்ஜுனர் உணர்ந்தவுடன், அவர்களை எப்படி அவரால் வதம் செய்ய இயலும்? என அர்ஜுனர் நினைத்தார். கிருஷ்ணர் அறிவுரை கூறுகிறார், "அவரவர் கடமையை அவரவர் செய்து தான் ஆகவேண்டும். சுய லாப நஷ்டங்கள் பற்றிய சிந்தனை இல்லாமல் கடமையை நிறைவேற்ற வேண்டும். " வேத நாகரீகத்தின்படி மனித சமுதாயத்தில் நான்கு பிரிவினைகள் உள்ளன. உலகெங்கும் இதே நான்கு பிரிவுகள் இருக்கின்றன. இது மிகவும் இயல்பான விஷயம். எப்படி நம் உடலில் தலை, கைகள், வயிறு, கால்கள் இருக்கின்றதோ, அதுபோலவே மனித சமுதாயத்தின் மூளையாக செயல்படுபவர்களின் வர்க்கம் ஒன்று இருக்கவேண்டும், மற்றொரு வர்க்கத்தினர், இந்த சமூகத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுபவர்களாக இருக்க வேண்டும், மற்றொரு வர்க்கத்தினர், தானியங்களை பயிர் செய்து, பசுக்களை பாதுகாத்து, வணிகம் செய்வதில் வல்லுனர்களாக இருப்பார்கள். மற்றும் மீதி இருக்கும் சமூகத்தினர், அதாவது சமுதாயத்தின் மூளையாக செயல்படமுடியாதவர்கள், அல்லது மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற இயலாதவர்கள், அல்லது தானியங்களை விளைவிக்க முடியாதவர்கள், அல்லது பசுக்களுக்கு பாதுகாப்பு தர முடியாதவர்கள் , அவர்களுக்கு சூத்திரர்கள் எனப் பெயர்: எப்படி உடல் முழுமையாக செயல்படுவதற்கு, அறிவுத் துறை, கைகள் துறை, வயிறு துறை, கால்கள் அதாவது உழைப்பாளர்கள் துறை என தேவைப்படுகிறதோ அப்படித்தான். அர்ஜுனர் சமுதாயத்தை காக்கும் வர்கத்தைச் சேர்ந்தவர். ஆக அர்ஜுனர் போர் செய்ய மறுத்தபொது, கிருஷ்ணர் அர்ஜுனருக்கு அறிவுரை கூறுகிறார், "போர் புரியவேண்டியது உன் கடமை". பொதுவாக, கொலை என்பது நல்ல விஷயம் அல்ல, ஆனால், எதிரி ஒரு ஆக்கிரமிப்பாளராக இருக்கும்போது, அப்பேர்பட்ட ஆக்கிரமிப்பாளரை கொலை செய்வது பாவமில்லை . குருஷேத்திர போர்க்களத்தில் எதிரணியைச் சேர்ந்தவர்கள், அர்ஜுனரின் கட்சியை பொறுத்தவரை ஆக்கிரமிப்பாளராக இருந்தனர். இது தான் பகவத் கீதையின் சூழ்நிலை. அர்ஜுனருக்கு ஆன்மீக புரிதலை போதிப்பதே இதன் உள்நோக்கம். ஆன்மா என்றால் என்னவென்பதை புரிந்துகொள்வது தான் ஆன்மீக புரிதலின் முதல் படி. ஆன்மா என்னவென்பதே உங்களுக்கு தெரியாத பட்சத்தில் எப்படி உங்களிடம் ஆன்மீக புரிதல் இருக்க முடியும்? மக்கள், இந்த உடலின்மீது ஆழ்ந்த பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதற்குப்பெயர் தான் பௌதீகம். ஆனால், ஆன்மா என்னவென்பதை புரிந்து கொண்டு, அதன் படி நடந்தால், அதற்கு பெயர் தான் ஆன்மீகம். ஆக, அர்ஜுனர் , எதிரணியுடன் போரிட தயங்கியதற்கு காரணம், அவர்களுடன் இருந்த உடல் ரீதியான உறவு தான். அர்ஜுனருக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல் நட்பார்ந்தது. ஆனால் நட்பார்ந்த உரையாடலால் இந்த பிரச்னையை தீர்க்க முடியாது என்பதை அர்ஜுனர் உணர்ந்தவுடன், அவர் கிருஷ்ணரின் சீடர் ஆகிறார். அர்ஜுனர் கிருஷ்ணரிடம் சரணடைந்துவிட்டார், ஷிஷ்யாஸ் தே அஹம் ஷாதி மாம் ப்ரபன்னம் (பகவத் கீதை 2.7). "என் அன்பு கிருஷ்ணா, இவ்வளவு நேரம் நாம் நண்பர்களாக பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் இப்போது என்னை உன் சீடனாக ஏற்றுக்கொள். " "எனக்கு அறிவுரை கூறி காப்பாற்று. நான் என்ன செய்யவேண்டும்." எனவே, இந்த நிலை வந்தவுடன் , கிருஷ்ணர் அர்ஜுனருக்கு அறிவுரை கூறுகிறார் : ஸ்ரீ பகவான் உவாச. இங்கு, யார் அர்ஜுனருக்கு சொன்னது ?... என்பது கூறப்பட்டிருக்கிறது. பகவத் கீதை கிருஷ்ணரால் சொல்லப்பட்டது. இது கிருஷ்ணருக்கும் , அர்ஜுனருக்கும் இடையே நடந்த உரையாடல். அதை வேத வியாசர் பதிவு செய்தார். பிறகு அது புத்தக வடிவில் வழங்கப்பட்டது. எப்படி என்றால், நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பது பதிவு செய்யப்படுகிறது, பின்னர் புத்தகமாக வெளியிடப்படுகிறது. அப்படி தான். எனவே இந்த புத்தகத்தில், 'பகவான் உவாச' என்று கூறப்பட்டுள்ளது. வியாச தேவர் தான் இதனை எழுதியவர். "நான் கூறுகிறேன்" என்று அவர் எழுதவில்லை. அவர், பகவான் உவாச - "பரமபுருஷரான முழுமுதற் கடவுள் கூறினார்," என்று கூறுகிறார் .