TA/Prabhupada 0235 - தகுதியற்ற குரு என்றால் சீடனுக்கு வழிகாட்டத் தெரியாதவர் என்று பொருள்

Revision as of 18:45, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

ஆக, குரூன் அஹத்வா. கிருஷ்ணரின் பக்தன் ஒருவன், தேவை ஏற்பட்டால், குரு தகுதியற்றவராக இருந்தால்... தகுதியற்ற குரு என்றால் சீடனுக்கு வழிகாட்ட தெரியாதவர். வழிகாட்டுவதே குருவின் கடமை. ஆக, அப்படிப்பட்ட குருவை குறைந்தபட்சம் நிராகரித்துவிடலாம். அது தான் ஜீவ கோஸ்வாமியின்... கார்ய-அகார்யம் அஜானதஹ. செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன என்பதே தெரியாத ஒரு குருவை ஒருவன் ஏற்றிருந்தால், அவன் அவரை நிராகரித்து விடலாம். அவரை நிராகரித்து, ஒரு உண்மையான தகுதியுள்ள குருவை ஏற்கலாம். ஆகவே, ஒரு குருவை கொல்வது முறையல்ல, ஆனால் அவரை நிராகரிக்கலாம். அது தான் சாஸ்திரம். ஆக பீஷ்மதேவரும் துரோணாச்சாரியரும், நிச்சயமாக குருக்கள் தான், ஆனால் கிருஷ்ணர் மறைமுகமாக, அர்ஜுனரை எச்சரித்தார், "அவர்கள் குருவின் நிலையில் இருந்தாலும், நீ அவர்களை நிராகரிக்கலாம்." கார்ய-அகார்யம் அஜாநதஹ. "அவர்களுக்கு வாஸ்தவத்தில் தெரியாது." இந்த பீஷ்மதேவர், அவர் பௌதிக ரீதியாக தனது நிலைமையை எண்ணினார். அவருக்கு ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் தெரியும், அதாவது பாண்டவர்கள் தந்தையில்லாத பிள்ளைகள், சிறு வயதிலிருந்தே அவர்களை பாசமாக வளர்த்தவர். அது மட்டுமல்ல, அவர் பாண்டவர்களின்மீது வைத்திருந்த பாசம் எவ்வளவு என்றால், அவர்களை காட்டுக்கு அனுப்பியபோது, நாட்டிலிருந்து வெளியேற்றியபோது, “இந்த ஐந்து சிறுவர்களும் மிகவும் பரிசுத்தமானவர்கள், மிக நேர்மையானவர்கள். பரிசுத்தம், நேர்மை மட்டுமல்லாமல், அர்ஜுனனும் பீமனும் மிகவும் சக்தி வாய்ந்த வீரர்கள். இந்த திரௌபதியோ சாக்ஷாத் அதிர்ஷ்ட தேவதை. மேலும் பரமபுருஷரான முழுமுதற் கடவுள், அந்த கிருஷ்ணரே அவர்களுடைய நண்பர். அப்படிப்பட்ட அவர்களுக்கா இந்தத் துன்பம்?" என்று அவர் பாசத்தில் கண்ணீர் வடித்தார். அவருக்கு அவ்வளவு பாசம் இருந்தது. எனவே அர்ஜுனர் சிந்தித்தார், "நான் எப்படி பீஷ்மரை கொல்ல முடியும்?" ஆனால் கடமை மிகவும் சக்தி வாய்ந்தது. கிருஷ்ணர் ஆலோசனை கூறுகிறார், "ஆமாம், அவரை கொன்று தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர் எதிர் கட்சிக்கு துணையாக இருக்கிறார். அவர் தனது கடமையை மறந்து விட்டார். அவர் உங்களோடு சேர்ந்திருந்திருக்க வேண்டும். எனவே அவர் உங்களுடைய குருவின் நிலையில் இப்போது இல்லை. நீ அவரை கொல்லத் தான் வேண்டும். அவர் தவறாக எதிர் கட்சிக்கு துணை புரிகிறார். எனவே அவரைக் கொல்வதால் எந்த சங்கடமும் வராது. அதுபோலவே தான் துரோணாச்சாரியாரும். அவர்கள் பெரிய மகான்கள், பெரும் பாசம் படைத்தவர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் வெறும் லௌகீக கருத்தின் அடிப்படையில் அவர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள்." அந்த லௌகீக கருத்து என்ன? பீஷ்மர் எண்ணினார், “துரியோதனன் என்னை பொருளாதார ரீதியாக பராமரிக்கிறான். துரியோதனனுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இப்போது அவன் ஆபத்தில் இருக்கிறான். இந்த நிலையில் நான் எதிர் கட்சிக்குத் துணைப் போனால், நான் நன்றி கெட்டவன் ஆகிவிடுவேன். அவன் என்னை இவ்வளவு நாள் பராமரித்திருக்கிறான். நான், அபாய நேரத்தில், போர் வந்தபிறகு, கட்சி மாறினால்...”அவர் இவ்வாறு நினைத்தார். "துரியோதனனுக்கு நான் கடமை பட்டிருக்கலாம். ஆனால் அவன் பாண்டவர்களின் சொத்தை அநியாயமாக அபகரித்தவன்,” அவர் இப்படி நினைக்கவில்லை. ஆனால், அது தான் அவருடைய பெருமை. ஏனென்றால் கிருஷ்ணர் துணையாக இருப்பதால் அர்ஜூனன் கொல்லப்பட மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். "ஆகையால் பௌதிக ரீதியாக, நான் துரியோதனனுக்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டும்," என அவர் நினைத்தார். அதே நிலையில் தான் துரோணாச்சாரியாரும் இருந்தார். அவர்கள் பராமரிக்கப்பட்டவர்கள்.