TA/Prabhupada 0312 - மனிதன் பகுத்தறிவு வாய்ந்தவன்



Morning Walk -- April 1, 1975, Mayapur


பிரபுபாதர்: என்னை பொருத்தவரை இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் இனிமேல் கோட்பாட்டளவில் மற்றும் அல்ல. இது யதார்த்தமானது. இதனால் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க முடியும்.


புஷ்த கிருஷ்ணன்: மக்கள் எந்தவிதமான கடும் நோம்பையும் விரும்புவதில்லை.


பிரபுபாதர்: என்ன?


புஷ்த கிருஷ்ணன்: மக்கள் எந்தவிதமான கடும் நோம்பையும் விரும்பமாட்டார்கள்.


பிரபுபாதர்: பிறகு இந்த நோயால் அவதிப்பட வேண்டியிருக்கும். உனக்கு நோய் இருந்தால், நீ அனுபவித்தே ஆகவேண்டும்... அது என்ன கடும் நோம்பு? எங்கே இருக்கிறது கடும் நோம்பு?


புஷ்த கிருஷ்ணன்: அவர்கள் மருந்தை ஏற்காவிட்டால் பிறகு குணமாக மாட்டார்கள்.


பிரபுபாதர்: அப்போது அவர்கள் துன்பப் படவேண்டியிருக்கும். நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் மருந்துகளை ஏற்க மறுத்தால், பிறகு எங்கிருந்து...? அவன் அவதிப்பட்டே ஆகவேண்டும். எப்படி குணமடைவது?


பஞ்சத்ராவிட: நாம் தான் நோயுற்றவர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.


பிரபுபாதர்: என்ன? பஞ்சத்ராவிடன்: அவர்கள் நாம் தான் நோயுற்றவர்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் நாம் ஒவ்வொருவரும் தான் நோயுற்றவர்கள், அவர்கள் அல்ல, என்று கூறுகிறார்கள்.


பிரபுபாதர்: ஆம். ஒரு செவிடன் மற்றவர்கள் எல்லாம் செவிடர்கள் என்று நினைப்பான். (சிரிப்பு) அப்படி என்றால் அவர்கள் மனிதநேயத்தை சேர்ந்தவர்கள் கூட அல்ல. மிருகங்கள். அவர்கள் விவாதம் செய்ய மறுப்பார்கள் அதாவது "நாங்கள் நோயுற்றவர்களா அல்லது நீங்கள் நோயுற்றவர்களா. உக்கார்ந்து பேசுவோம்." அதுக்கும் தயாராக இருப்பதில்லை. பிறகு? மிருகங்களுடன் நாம் என்ன செய்வது?


பஞ்சத்ராவிடன்: நாம் தற்காலத்துக்கு ஒவ்வாதவர்கள் என்கிறார்கள். நம்முடன் தொடர்பு கொள்வதில் அவர்களுக்கு மேலும் எந்த ஆர்வமும் இல்லை.


பிரபுபாதர்: பிறகு பிரச்சனைகளை தீர்ப்பதில் எதற்காக ஆர்வம் காட்டுகிறீர்கள்? எதற்காக சமுதாயத்தின் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் கவலைப்படுவீர்கள் ஆனால் தீர்வைத் தேட மாட்டீர்கள். உலகம் முழுவதும், செய்திகள் நிரம்பி இருக்கின்றன.


விஷ்ணுஜன: ஸ்ரீல பிரபுபாதரே, உங்களால் அவர்களை அறிவிற்கு ஏற்புடையவர்களாக ஆக்க முடியுமா? வாதத்திற்கு ஒத்து வராதவர்களை எப்படியாவது...


பிரபுபாதர்: அவர்கள் பகுத்தறிய கூடியவர்கள் தான். ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிய கூடியவன் தான். "மனிதன் பகுத்தறிவு வாய்ந்தவன்" எனப்படுகிறது. பகுத்தறிவு இல்லாத பட்சத்தில் அவர்கள் இன்னும் மிருகங்களாகவே இருப்பதாக அர்த்தம்.


பஞ்சத்ராவிடன்: அப்படி என்றால் மிருகங்களுடன் என்ன செய்வது?


பிரபுபாதர்: இது மிகவும் எளிதான உண்மை. விவாதத்திற்கு, நான் இந்த உடல். நான் மகிழ்ச்சியை தேடுகிறேன். நான் எதற்காக மகிழ்ச்சியை தேடுகிறேன்? வெறும் இந்த விஷயத்தை வாதித்தால், ஒரு மனிதன் பகுத்தறிவுள்ளவன் என்று அறியலாம். நான் எதற்காக சந்தோசத்தை தேடுகிறேன்? இதற்கு விடை என்ன? அது ஒரு உண்மை. எல்லோரும் சந்தோசத்தை நாடி செல்கிறார்கள். நான் எதற்காக சந்தோசத்தை தேடுகிறோம்? அதற்கு என்ன பதில்?


பஞ்சத்ராவிடன்: ஏனென்றால் எல்லோரும் துன்பத்தில் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் அதை வெறுக்கிறார்கள்.


பிரபுபாதர்: அது விளக்கத்தின் எதிர் பக்கம்.


கீர்த்தனானந்தன்: ஏனென்றால் இயல்பில் நான் மகிழ்ச்சி உடையவன்.


பிரபுபாதர்: ஆம். இயல்பில் நான் மகிழ்ச்சி உடையவன். மேலும் மகிழ்ச்சி அடைவது யார், உடலா ஆன்மாவா?


புஷ்த கிருஷ்ணன்: இல்லை, ஆன்மா.


பிரபுபாதர்: மகிழ்ச்சியை விரும்பவது யார்? நான் எந்த உடலை காக்க விரும்புகிறேன் - எதற்காக. ஏனென்றால் நான் இந்த உடலுக்குள் இருக்கிறேன். பிறகு நான் இந்த உடலை விட்டு சென்றால், இந்த உடலின் மகிழ்ச்சியை நாடிச் செல்வது யார்? இந்த எளிதான பகுத்தறிவு அவர்களுக்கு இல்லை. நான் இதற்காக மகிழ்ச்சியை தேடுகிறேன்? குளிரினால் உடல் பாதிக்காமல் இருப்பதற்காக நான் இந்த உடலை மூடிக்கொள்கிறேன். பிறகு குளிரிலும் வெப்பத்திலும் நான் எதற்காக இந்த உடலின் மகிழ்ச்சியை தேடுகிறேன்? ஏனென்றால் நான் உள்ளே... நான் இந்த உடலை விட்டு விலகிச் சென்ற பிறகு நான் அதன் மகிழ்ச்சியை நாடுவதில்லை. அதை வீதியில் வீசி எறிந்தாலோ, அது கடும் குளிரில் அல்லது சூட்டில் இருந்தாலோ, கவலை இல்லை. பிறகு மகிழ்ச்சியை தேடுவது யார்? அதை அவர் அறியமாட்டார்கள். யாருடைய மகிழ்ச்சிக்காக நீ இவ்வளவு மும்முரமாக இருக்கிறாய்? அது அவர்களுக்கு தெரியவில்லை. நாய், பூனைகளைப் போல் தான்.


புஷ்த கிருஷ்ணன்: ஆனால் திருநாமத்தை உச்சரிக்க நேரமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.


பிரபுபாதர்: ஆம்?


புஷ்த கிருஷ்ணன்: மகிழ்ச்சி அடைவதற்காக நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்பதே அவர்கள் கருத்து.


பிரபுபாதர்: உம். அது உங்கள் தத்துவம். நீங்கள் அயோக்கியர்கள், ஆனால் நாம் கடுமையாக உழைப்பதில்லை. நாங்கள் எடுத்துக்காட்டாக இல்லையா? நாங்கள் எளிமையாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.