TA/Prabhupada 0341 - புத்தி உள்ளவன் இந்த பாதையை ஏற்றுக் கொள்வான்



Lecture on BG 9.1 -- Melbourne, June 29, 1974


‌பிரபுபாதர்: என்ன?

மதுத்விசன்: கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளித்த ஞானம் என்னவென்று அவர் கேட்டார். ‌

பிரபுபாதர்: ஆம். கிருஷ்ணர் அறிவுறுத்தினார் "அடேய் அயோக்கியனே, என்னிடம் சரணடை." நீங்கள் எல்லோரும் அயோக்கியர்கள்; நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும். அப்போது தான் உங்கள் வாழ்வு வெற்றிகரமானதாகும். இதுவே கிருஷ்ணரின் உபதேசத்தின் கருத்தும் சாரமும் ஆகும்.


ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (பகவத்கீதை 18.66)


கிருஷ்ணர் அர்ஜுனனை மற்றுமே கேட்கவில்லை. அவர் நாம் எல்லோரையும், எல்லா அயோக்கியர்களையும் வனவுகிறார், "நீ சந்தோஷமாக இருப்பதற்கு பல சாதனங்களை உருவாக்குகிறாய். நிச்சயமாக இதனால் நீ எப்பொழுதும் சந்தோஷம் அடய மாட்டாய். ஆனால், என்னிடம் சரணடை, பிறகு நானே உனக்கு ஆனந்தம் அளிப்பேன்." இது தான் கிருஷ்ண உணர்வு, அவ்வளவு தான். ஒரே வரியில். அவ்விதமாய் புத்தி உள்ளவன் இந்த பாதையை ஏற்றுக் கொள்வான், அதில், "நான் சந்தோஷம் அடய கடும் முயற்சி செய்தேன், ஆனால் இறுதியில் எல்லாம் தோல்வி தான். ஆகவே நான் கிருஷ்ணரிடம் சரணடைகிறேன்." அவ்வளவுதான்.