TA/Prabhupada 0342 - ஒவ்வொருவரு உயிர்வாழியும் தனிப்பட்ட நபர்கள், மற்றும் கிருஷ்ணரும் தனிப்பட்ட நபர்



Lecture on CC Adi-lila 7.7 -- Mayapur, March 9, 1974

நமதில் ஒவ்வொருவரு உயிர்வாழியும் தனிப்பட்ட நபர்கள் ஆவோம், மற்றும் கிருஷ்ணரும் ஒரு தனிப்பட்ட நபர் தான். இது தான் உண்மையில் கல்வி. நித்யோ‌ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் எகோ பஹுனாம் விததாதி காமான் (கதா உபனிசத் 2.2.13). கிருஷ்ணர், அதாவது கடவுள் நித்தியமானவர். நாமும் நித்தியமானவர்கள் தான்.


ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத்-கீதை 2.20)


நாம் மரணம் அடைவதில்லை. அது தான் ஆன்மீக அறிவின் முதல் கட்டம், அதாவது "நான் இந்த உடல் அல்ல, நான் ஆன்மா, அஹம் ப்ரம்மாஸ்மி, இருப்பினும் நான் ஒரு தனிப்பட்ட நபர்." நித்யோ நித்யானாம். கிருஷ்ணர் ஒரு தனிப்பட்ட நபர்; நானும் ஒரு தனிப்பட்ட நபர்.


ஸர்வ–தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (பகவத்-கீதை 18.66)


என்று கிருஷ்ணர் கூறும்போது, அதற்கு, நான் கிருஷ்ணருடன் ஒன்றாகிவிடுவேன், அல்லது கிருஷ்ணரின் இருப்புடன் இணைந்துவிடுவேன் என்று அர்த்தம் அல்ல. என் தனித்தன்மை என்னிடம் இருக்கும், கிருஷ்ணரின் தனித்தன்மை கிருஷ்ணருடன் இருக்கும், ஆனால் நான் அவர் உத்தரவுபடி நடக்க சம்மதிக்கிறேன். ஆகையால் பகவத்-கீதையில் கிருஷ்ணர் அர்ஜீனரிடம் கூறுகிறார், "நான் உனக்கு சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன் இப்போது உன் முடிவு என்ன?" அதாவது தனித்தன்மை. கிருஷ்ணர் அர்ஜுனரை வற்புறுத்தவில்லை.


யதேச்சஸி ததா குரு (பகவத்-கீதை 18.63)


"இப்போ உனக்கு எப்படி விருப்பமோ அப்படி செய்." அது தான் தனித்தன்மை. இது தான் கடைசி கட்ட அறிவு, அதாவது இந்த மாயாவாத தத்துவம், அதாவது ஒன்று சேருவது, ஐக்கியம் அடைவது, ஐக்கியம் அடைவது என்றால் நாம் கிருஷ்ணரின் அசையுடன் ஒத்துப்போகிறோம். தற்போது நம் தனித்தன்மை என்பது மாயை, ஏனென்றால் நாம் பல விஷயங்களுக்காக திட்டம் இடுகிறோம். ஆகையால் உன் தனித்தன்மைக்கும் என்‌ தனித்தன்மைக்கும்‌ இடையே மோதல் ஏற்படுகிறது. ஆனால் "கிருஷ்ணர் தான் மையம்" என்று நாம் ஒப்புக்கொண்டு, வேறுபாடுகள் இல்லாமல் போனால் - அது தான் ஐக்கியம், நாம் நம் தனித்தன்மையை இழந்து விடுவதாக அர்த்தம ஆகாது. நாம் எல்லாரும் தனித்தன்மை உடையவர்கள் என்று எல்லா வேத இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது 


மேலும் கிருஷ்ணராலையும் கூறப்பட்டிருக்கிறது. எல்லோரும் தனிப்பட்டவர்கள். ஸ்வயம் பகவான் எகலே ஈஷ்வர. வித்தியாசம் என்னவென்றால் அவர் மீஉயர்ந்த ஆட்சியாளர், ஈஷ்வர. ஈஷ்வர என்றால் ஆட்சியாளர். வாஸ்தவத்தில், அவர் ஆட்சியாளர், நாமும் ஆட்சியாளர்கள் ஆனால் கீழ்த்தர ஆட்சியாளர்கள். ஆகையால் அவர் எகலே ஈஷ்வர, ஒரே ஆட்சியாளர். ஈஷ்வர பரம க்ருஷ்ண, பிரம்ம ஸம்ஹிதாவில், எகலே ஈஷ்வர. பலரால் ஈஷ்வரராக இருக்குமுடியாது. பிறகு அது ஈஷ்வரரே கிடையாது. எல்லாரும் கடவுள் தான் என்கிற மாயாவாத கருத்து அவ்வளவு சரியான தீர்மானம் கிடையாது. அது அயோக்கியத்தனம். கிருஷ்ணர் கூறுகிறார்,


மூட. ந மாம் ப்ரபத்யந்தே மூடா (பகவத்-கீதை 7.15)


மீயுயர்ந்த ஈஷ்வரரிடம், முழுமுதற் கடவுளிடம் யாரொருவர் சரணடைவதில்லையோ, "இவன் மூடன், அயோக்கியன்," என்று நீ நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும் ஏனென்றால் நாம் எல்லோரும் ஈஷ்வரன் ஆக முடியாது. அது சாத்தியம் இல்லை. பிறகு ஈஷ்வர என்ற சொல்லுக்கு அர்த்தமே இருக்காது. ஈஷ்வர என்றால் ஆட்சியாளர். எடுத்துக்காட்டாக நாம் ஒரு சங்கத்தில் இருக்கிறோம், நமது இந்த அகில உலக இயக்கம். எல்லோரும் ஆட்சியாளர் அதாவது ஆச்சாரியார் ஆகிவிட்டால், பிறகு எப்படி இதை நிர்வகிக்க முடியும்? முடியாது. ஒரு தலைவன் இருக்கவேண்டும். நடைமுறை வாழ்க்கையில் அது தான் முறை. நாம் நமது அரசியல் தலைஸர்களை பின்பற்றுகிறோம். நான் ஒரு தலைவனை பின்பற்றினால் ஒழிய, "நான் இந்த கட்சியை சேர்ந்தவன்" என்று சொல்லமுடியாது. அது இயல்பானது. அது தான் வேதத்தின் குறிப்பும் கூட, நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் (கதா உபனிஷத் 2.2.13). ஒரேயொரு தலைவன் இருக்கவேண்டும், அதே குணம் கொண்ட தலைவன், நித்ய. நான் நித்தியமானவன், கிருஷ்ணரும் நித்தியமானவர். கிருஷ்ணரும் உயிர்வாழி; நானும் உயிர்வாழி.

நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம். பிறகு கிருஷ்ணனுக்கும் எனக்குத் என்ன வித்தியாசம்? வித்தியாசம் என்னவென்றால் இரண்டு நித்தியங்கள் உள்ளன அல்லது இரண்டு 'சேதன' (உணர்வுகள்) உள்ளன. ஒரு முறை ஒருமையாக கூறப்பட்டிருக்கிறது மற்றும் இன்னும் ஒரு முறை பன்மையாக கூறப்பட்டிருக்கிறது. நித்யோ‌ நித்யானாம். இந்த நித்யானாம் என்பது பன்மை மற்றும் நித்ய என்பது ஒருமையை குறிக்கிறது. கடவுள் என்பவர் நித்ய, ஒருவர், மற்றும் நாம், நாம் ஆளப்படுபவர். நாம் பலர் உள்ளோம் (பன்மை). அது தான் வித்தியாசம். மேலும் எவ்வாறு அவர் பலரை ஆள்கிறார்? ஏனென்றால் எகோ யோ பஹூனாம் விததாதி காமான். அவர் இந்த பலருடைய வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அளிக்கிறார்; ஆகையால் அவர் ஈஷ்வரர், அவர் கிருஷ்ணர், அவர் தான் கடவுள். வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அளிப்பவர் தான் ஈஷ்வரர். அவர் தான் கிருஷ்ணர், அவர் தான் கடவுள். ஆக நாம் எல்லோரும் கிருஷ்ணரால் பராமரிக்கப் படுகிறோம் என்பதை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. பிறகு நாம் எதற்காக அவரால் ஆளப்படக் கூடாது? இது உண்மை.