TA/Prabhupada 0447 - பகவானைப் பற்றி கற்பனை செய்யும், அபக்தர்களுடன் சேராமல் கவனமாக இருங்கள்

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Lecture on SB 7.9.2 -- Mayapur, February 12, 1977

ஆகையால் நாம் லக்ஷ்மி-நாராயணனின் குணங்களை ஆராய்ந்தால், பிறகு நாம் தரித்திர-நாராயணன் இது அல்லது அது என்ற வார்த்தைகளை உற்பத்தி செய்வதை நிறுத்திக் கொள்வோம். இல்லை. ஆகையினால் நாம் இந்த பாஷண்டியை பின்பற்றக் கூடாது. யஸ் து நாராயணம் தேவம் ப்ரஹ்ம-ருத்ராதி-தைவதை: ஸமத்வேனைவ விக்ஷேத ஸ பாஷண்டி பவேத் த்ருவம் (சி.சி. மத்திய 18.116) பாஷண்டி என்றால் பிசாசு, அல்லது பக்தன் அல்லாதவன். அபக்தா ஹீன சர. பகவானைப் பற்றி கற்பனை செய்யும், அபக்தர்களுடன் சேராமல் கவனமாக இருங்கள். உண்மையிலேயே அவர்களுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை. இந்த பாஷண்டி என்றால் பகவானை நம்பாதவர்கள். பகவான் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் வெறுமனே சொல்கிறார்கள், " ஆம் தெய்வம் இருக்கிறார், ஆனால் பகவானுக்கு தலை இல்லை, வால் இல்லை, வாய் இல்லை, ஒன்றுமில்லை." பிறகு பகவான் என்பது என்ன? இந்த போக்கிரிகள் நிராகார என்று கூறுகிறார்கள் நிராகார என்றால் பகவான் இல்லை என்று அர்த்தம். வெளிப்படையாக அதாவது பகவான் இல்லை என்று கூறுகிறார்கள். நீங்கள் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள், "ஆம், பகவான் இருக்கிறார், ஆனால் அவருக்கு தலை இல்லை, வால் இல்லை, கால் இல்லை, கை இல்லை"? ஆகையால் அங்கு என்ன இருக்கிறது? ஆகையால் இது மற்றோரு தந்திரமாக ஏமாற்றும் முறை. நாத்திகனாக இருப்பவர்கள் அவர்கள் வெளிப்படையாக கூறுகிறார்கள், "எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை. அங்கு இல்லை..." எங்களால் அதைப் புரிந்துக்க கொள்ள முடிகிறது. ஆனால் இந்த போக்கிரிகள், அவர்கள் கூறுகிறார்கள், "பகவான் இருக்கிறார், ஆனால் நிராகார." நிராகார என்றால் பகவான் இல்லை, ஆனால் சில நேரங்களில் இந்த வார்த்தை நிராகார பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அந்த நிராகார பகவானுக்கு அகார இல்லை என்று பொருள்படாது. அந்த நிராகார என்றால் அதாவது இந்த பௌதிக அகார அல்ல. ஈஸ்வர: பரம: கிருஷ்ண-சக்-சித்-ஆனந்த-விக்ரஹ: (பி.ச. 5.1). அவருடைய உடல் சக்-சித்-ஆனந்த. அது இந்த பௌதிக உலகில் பார்ப்பது என்பது சுத்தமாக இயலாது. நம் உடல் சக் அல்ல; அது அஸத். நான் பெற்றிருக்கும் இந்த உடலும் அல்லது நீங்கள் பெற்றிருப்பதும், இந்த உயிர் உள்ள வரை இருக்கும்.... மேலும் அது முடிந்த பின், அது நித்தியமாகிவிடும். இந்த உடல் மறுபடியும் உங்களுக்கு கிடைக்காது. ஆகையினால் அஸத். ஆனால் கிருஷ்ணரின் உடல் அவ்வாறு அல்ல. கிருஷ்ணரின் உடல் ஒரேமாதிரியானது, சத்; எப்போதும் ஒரே மாதிரியானது. கிருஷ்ணரின் மற்றோரு பெயர் நரக்ருதி. நம்முடைய உடல் கிருஷ்ணரின் உடலின் போலித் தோற்றம், கிருஷ்ணரின் உடல் நம்முடைய உடலின் போலித் தோற்றம் அல்ல. இல்லை. கிருஷ்ணர் அவருடைய உடலை பெற்றிருக்கிறார், நரக்ருதி, நர-வபு. இந்த விஷயங்கள் அங்கு உள்ளது. ஆனால் அந்த வபு இந்த அசத்தைப் போல் அல்ல. நம் உடல் அஸத். அது நிலையானதல்ல. அவருடைய உடல் சக்-சித்-ஆனந்த. நம்முடைய உடல் அஸத், அசித் மேலும் நிரானந்த - நேர்மாறானது. அது நிலையற்றது, மேலும் அங்கு அறிவு இல்லை, அசித், மேலும் அங்கு நிறைவான மகிழ்ச்சி இல்லை. எப்போதும் நாம் மகிழ்ச்சியற்று இருப்போம். ஆகையால் நிராகார என்றால் இது போன்ற உடல் அல்ல. அவருடைய உடல் வேறுபட்டது. ஆனந்த சின்மாயா ரஸ ப்ரதிபவித்தபிஸ் (பிச. 5.37). ஆனந்த-சின்மாயா. அண்கானி யஸ்ய சக்லேன்றிய வ்ருத்தி-மந்தி பஸ்யந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்தி (பிச. 5.32). அவருடைய அண்கானி, அண்கானி, உடலின் உறுப்புகள், வர்ணிக்கப்பட்டுள்ளது, சக்லேன்றிய வ்ருத்தி-மந்தி. என் கண்களால் என்னால் பார்க்க முடிகிறது, என்னுடைய, இந்த சிறந்த காரியம், உடலின் இந்த பகுதி பார்ப்பதற்காக உள்ளது. ஆனால் கிருஷ்ணர்: சக்லேன்றிய வ்ருத்தி-மந்தி - அவரால் பார்க்க மட்டுமின்றி, ஆனால், அவரால் உணவு உண்ணவும் முடியும். அது முக்கியமானது. பார்ப்பதின் மூலம், நம்மால் உண்ண முடியாது, ஆனால் நாம் நெய்வேத்தியம் செய்யும் எதையும், கிருஷ்ணர் பார்த்தால், அவர் சாப்பிடவும் செய்கிறார். அண்கானி யஸ்ய சக்லேன்றிய வ்ருத்தி-மந்தி. ஆகையால் நாம் எவ்வாறு நம் உடலை கிருஷ்ணரின் உடலுடன் ஒப்பிட முடியும்? ஆனால் அவஜானந்தி மாம் மூடா: (ப.கீ. 9.11). அந்த போக்கிரிகள், அவர்கள் நினைக்கிறார்கள் அதாவது "கிருஷ்ணருக்கு இரண்டு கைகள் உள்ளன, இரண்டு கால்கள்; ஆகையினால் நானும் கிருஷ்ண. நானும்." ஆகையால் போக்கிரிகளால் தவறாக வழிநடத்தப்படாதீர்கள், பாஷண்டி. சாஸ்திரத்தில் இருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கிகாரம் பெற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், மேலும் சந்தோஷம் அடையுங்கள். மிக்க நன்றி. பக்தர்கள் : ஜெய் ஸ்ரீல பிரபுபாதா!