TA/Prabhupada 0452 - கிருஷ்ணர் இந்த பூமிக்கு பிரம்மாவின் ஒரு நாளில் வருவார்



Lecture on SB 7.9.5 -- Mayapur, February 25, 1977

ப்ரடுயம்ன: மொழிபெயர்ப்பு - "பகவான் நரசிம்ஹ தேவ் சிறுவன் ப்ரஹலாத மஹாராஜை பார்த்த பொது அவருடைய கமலாப் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குவதை, அவர் தன் பக்தனிடம் பாசத்தில் மிகவும் பரவசமடைந்தார். ப்ரஹலாதை தூக்கி, பகவான் தன் தாமரைக் கரங்களை அவன் தலையின் மேல் வைத்தார் ஏனென்றால் அவருடைய கரங்கள் எப்போதும் அவருடைய பக்தர்களுக்கு பயமற்ற நிலையை உண்டாக்க தயாராக இருக்கிறது." ஸ்வ-பாத-மூலே பதிதம் தம் அர்பகம் விலோக்ய தேவ: க்ருபயா பரிப்லுத்: உத்தாப்ய தச்-சீர்ஷ்ணி அததாத் கராம்புஜம் காலாஹி-வித்ரஸ்த-தியாம் க்ருதாபயம் (ஸ்ரீ.பா. 7.9.5) ஆகையால் ஒரு பக்தனாவதற்கும் அல்லது முழுமுதற் கடவுளுக்கு விருப்பமானவராவது மிகவும் சுலபம் . அது கடினமானதே அல்ல. இங்கு நாம் ஒரு உதாரணத்தைப் பார்க்கிறோம், ப்ரஹலாத மஹாராஜ், ஒரு ஐந்து வயது பையன் ..... ஒரு பக்தனாக, அவனுக்கு பரம புருஷனை மட்டும்தான் தெரியும், மேலும் அவன் வணக்கம் அளித்தான். அது அவனுடைய தராதரம். எவரும் அதைச் செய்யலாம். எவரும் இங்கு கோயிலுக்கு வந்து மேலும் வணக்கம் அளிக்கலாம். அதில் ஏது கஷ்டம்? வெறுமனே ஒருவருக்கு உணர்வு வேண்டும் அதாவது "இங்கு முழுமுதற் கடவுள் இருக்கிறார், க்ருஷ்ணர் அல்லது நரசிம்ஹ தேவ் அல்லது அவருடைய பல விரிவாக்கங்களில் ஏதேனும் ஒன்று." சாஸ்திரத்தில் அது சொல்லப்பட்டுள்ளது, அத்வைதம் அச்சுதம் அனாதிம் ஆனந்த-ரூபம் (பிச. 5.33). கிருஷ்ணரை ஆனந்த-ரூபமாக. அதனால் ஒவ்வொரு ரூபமும் கிருஷ்ணரின் விரிவாக்கத்தின் மூலமான ரூபமாகும். மூலமான ரூபம் கிருஷ்ணராகும். க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் (ஸ்ரீ.பா. 1.3.28). அதன்பின் அங்கே பல ரூபஸ்: ராம, நரசிம்ஹ, வராஹ, பலராம, பரசுராம, மீன, ஆமை, நரசிம்ஹ-தேவ். ராமாதி-மூர்த்திசு கலா-நியமென திஸ்ருதன் (பிச. 5.39). அவர் எப்போதும் வேறுபட்ட வடிவத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார், அவர் கிருஷ்ணர் தோற்றத்தில் மட்டும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்பதல்ல. ஒவ்வொரு வடிவமும், ராமாதி-மூர்த்திசு. அதே உதாரணம், நாம் பல முறை கொடுத்தது போல்: சூரியனைப் போல், சூரியனின் நேரம், இருபத்தி-நான்கு மணி நேரம், ஆகையால் இருபத்தி-நான்கு மணி நேரத்தில் அல்லது இருபத்தி-நான்கு அவதாரம், எந்த நேரமும் வருகை புரிவார். அது இவ்வாறல்ல, அதாவது இப்போது எட்டு மணி, பிறகு ஏழு மணி முடிவடைந்துவிடும். இல்லை. உலகின் வேறு எந்த பகுதியிலாவது அங்கு ஏழு மணியாக இருக்கும். அல்லது ஒன்பது மணி. ஒன்பது மணியாகவும் இருக்கலாம். பன்னிரண்டு மணியாகவும் நிகழலாம். நம்மிடம் ஒரு கடிகாரம் இருக்கிறது, குருக்ருபா மஹாராஜால் கொடுக்கப்பட்டது. (சிரிப்பொலி) அவர் ஜப்பானிலிருந்து கொண்டு வந்தார். அது மிகவும் அழகானது. உடனடியாக மற்ற இடங்களில் இப்போது மணி என்ன என்று நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம் - உடனடியாக. ஆகையால் எல்லாம் இருந்துக் கொண்டிருக்கிறது. ஆதலால் கிருஷ்ணருடைய லீலா நித்திய-லீலா என்று அழைக்கப்படுகிறது, ஒரு லீலா நடந்துக் கொண்டிருக்கிறது, மற்ற லீலா முடிந்துவிட்டது என்று பொருள்படாது, இல்லை. அனைத்தும் ஒரே நேரத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, ராமாதி-மூர்த்திசு. ராமாதி-மூர்த்திசு கலா-நியமென திஸ்ருதன். நியமென. நுண்மையாக சரியான நேரத்தில். சூரியனைப் போல், நுண்மையாக. முற்காலத்தில் அங்கு கடிகாரம் இல்லை, ஆனால் நிழலை வைத்து ஒருவரால் கணிக்க முடியும். நீங்கள் இப்போதும் கணிக்கலாம், இப்போதும் கூட. எங்கள் குழந்தை பருவத்தில் நாங்கள் நிழலைப் பார்த்து கணிப்போம்: "இப்போது இந்த நேரம்." - துல்லியமாக அதே நேரமாக இருக்கும். ஆகையால்கலா-நியமென திஸ்ருதன், அவ்வளவு தலைகீழாக இருக்காது - இப்போது இந்த நிழல் இங்கு ஒரு மணி, மேலும் மறுநாள், அங்கு ஒரு மணி. இல்லை. ஒரே இடத்தில, நீங்கள் காண்பிர்கள். கலா-நியமென திஸ்ருதன். அதேபோல், கிருஷ்ணரின் லீலா, நியமென திஸ்ருதன் - நுண்மையாக. அங்கு கணக்கில்லாத பேரண்டங்கள் உள்ளன. இங்கு கிருஷ்ணர் தோன்றியிருக்கிறார். இப்போது கிருஷ்ணர் வசுதேவால் விருந்தாவனத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறார். அதே மாதிரி - இங்கு பிறந்த உடனடியாக, கிருஷ்ணர் விருந்தாவனத்திற்கு சென்றுவிடுகிறார் - மற்றோரு பேரண்டத்தில் கிருஷ்ணர் அவதரிக்கிறார், கிருஷ்ணர் மறுபடியும் அவதரிக்கிறார். இவ்விதமாக அவருடைய லீலைகள் தொடர்கின்றன. அதற்கு முடிவு இல்லை, அதுவுமின்றி நேரத்தில் எந்த வித்தியாசமமும் இல்லை. நுண்மையாக. எவ்வாறு என்றால் கிருஷ்ணர் இந்த பூமிக்கு பிரம்மாவின் ஒரு நாளில் வருவார். ஆகையால், பல பத்து இலட்சம் வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணர் மறுபடியும் தோன்றுவார், நேரில் இல்லாவிட்டாலும், அவருடைய விரிவாக்கத்தின் மூலம், 'ம்சேன. சைதன்ய மஹாபிரபு கால ஓடத்தில் சரியாக தோன்றுவார். பகவான் ராமசந்திர அவதரிப்பார். ஆகையால் ராமாதி-மூர்த்திசு கலா-நியமென திஸ்ருதன் (பிச. 5.39). ஆகையால் இந்த லீலா, நரசிம்ஹ-தேவ், அதுவும் மிகச் சரியான நேரத்தோடு நடந்தது. ஆகையால் ஸ்வ-பாத-மூலே பதிதம் தம் அர்பகம். மிகவும் களங்கமில்லாத பிள்ளை. ப்ரஹலாத மஹாராஜ் போல் ஒரு களங்கமில்லாத பிள்ளை, அவர் நரசிம்ஹ-தேவின் கருணையை அதிகமாகவே பெறலாம், பகவானின் மிகவும் கொடூரமான தோற்றம் லக்ஷ்மி கூட அணுக முடியவில்லை... அஸ்ருத. அத்ருஷ்டாஸ்ருத-பூர்வ. பகவானுடைய இத்தகைய தோற்றம் இருந்ததில்லை. லக்ஷ்மிக்கு கூட தெரியாது. ஆனால் ப்ரஹலாத மஹாராஜ், அவர் அச்சம் கொள்ளவில்லை. அவருக்கு தெரியும், "என் பகவான் இதோ இருக்கிறார்." ஒரு சிங்கக் குட்டியைப்போல், அவர் சிங்கத்திற்கு அஞ்சவில்லை. அவன் உடனடியாக சிங்கத்தின் தலை மீது குதித்தான் ஏனென்றால் அவனுக்கு தெரியும், "இது என் தந்தை. இது என் தாய்." அதேப்போல், ப்ரஹலாத மஹாராஜ் பயப்படவில்லை, இருப்பினும் பிரம்மாவும் மற்றவர்களும், அனைத்து தேவர்களும், பகவானை அணுக பயந்தார்கள். அவன் வெறுமனே ஒரு களங்கமில்லாத பிள்ளையாக வந்து மேலும் வந்தனம் செலுத்தினான். தம் அர்பகம் விலோக்ய. ஆகையால், பகவான் உருவமற்றவர் அல்ல. உடனடியாக அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது, "ஓ இங்கு ஒரு களங்கமற்ற பிள்ளை இருக்கிறது. அவன் தந்தையால் அதிகமாக பலாத்காரம் செய்யப்பட்டான், மேலும் இப்போது எனக்கு தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறான்." விலோக்ய தேவ: க்ருபயா பரிப்ளுத:. அவர் மிகவும், நான் சொல்வதாவது, கருணையால் உருகிப் போனார். ஆகையால் காரியங்கள், அனைத்தும், எல்லாம் அங்கிருக்கிறது.