TA/Prabhupada 0455 - உங்களுடைய தவறான தர்க்கத்தை உங்கள் கற்பனைக்கு எட்டாத செயல்களில் பிரயோகிக்காதீர்கள்

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Lecture on SB 7.9.6 -- Mayapur, February 26, 1977

ப்ரடியும்ன: மொழிபெயர்ப்பு - பிரகலாத மஹாராஜாவின் தலையில் பகவான் நரசிம்ம-தேவின் கை தொட்ட்தும், பிரகலாத முழுமையாக பௌதிக தூய்மைக்கேடு மேலும் ஆசைகளில் இருந்து முக்தி பெற்றார், அவர் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டது போல். ஆகையினால் அவர் உடனடியாக உன்னத நிலையை அடைந்தார், மேலும் பேருவகையின் அனைத்து அறிகுறிகளும் அவர் உடலில் வெளிப்பட்டது. அவருடைய இதயத்தில் பாசம் நிறைந்திருந்தது, மேலும் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது, மேலும் இவ்வாறாக அவரால் முழுமையாக பகவானின் கமலாப் பாதங்களை அவருடைய ஆழ் இதயத்தில் கைப்பற்ற முடிந்தது." பிரபுபாதர்: ஸ தத்-கர-ஸ்பர்ச-துதாகிலாசுப: ஸபதி அபிவ்யக்த-பராத்ம்-தர்சன்: தத்-பாத-பத்மம் ஹ்ருதி நிர்வ்ருதோ ததௌ ஹ்ருஷ்யத்-தனு: க்லின்ன-ஹ்ருத்-அஸ்ரு-லோசன: (ஸ்ரீ. பா. 7.9.6) ஆகையால் ப்ரஹலாத மஹாராஜ, தத்-கர-ஸ்பர்ச, "நரசிம்ம பகவானின் தாமரை உள்ளங்கை பட்டதால்," நகங்களை உடைய அதே உள்ளங்கை. தவகர-கமல-வரே நகம் அத்புத-ஸ்ருங்கம். அதே உள்ளங்கை நகம் அத்புதவுடன் ... தாலித ஹிரண்யக்ஷிபு தனு ப்ரிங்கம். உடனடியாக, நகத்தால் மட்டுமே ... இந்த பிரமாண்டமான அரக்கனை கொல்லுவதிற்கு, பகவானுக்கு எந்த ஆயுதமும் தேவையில்லை, வெறுமனே நகமே. தவகர-கமல. உதாரணம் மிகவும் அழகாகாக உள்ளது: -கமல. கமல என்றால் தாமரை மலர். பகவானின் உள்ளங்கை தாமரை மலரைப் போன்றது. ஆகையினால் தாமரை மலரில் அது மிகவும் மென்மையாக, மிகவும் இதமாக இருக்கும், மேலும் எவ்வாறு நகங்கள் தோன்றின? ஆகையினால் அத்புத. தவகர-கமல, அத்புத. நகம் அத்புத-ஸ்ருங்கம். தாமரை மலரில், துளை போடும், முரட்டுத்தனமான நகங்கள், வளர்ப்பது நிகழக்கூடியது அல்ல. இது முரண்பாடானது. ஆகையினால் ஜெயதேவ் கூறுகிறார் அத்புத: "அது அற்புதமானது. அது திகைப்புண்டாக்குகிறது." ஆகையினால் பகவானின் சக்தி, சக்தியும் கூர்மையான நகமும் நிறைந்த காட்சி, அவை அனைத்தும் கற்பனைக்கு எட்டாதது. ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி விளக்கியுள்ளார், "நீங்கள் ஏற்றுக் கொள்வதைத் தவிர, கற்பனை செய்ய முடியாத பரம புருஷரின் சக்தியை, அங்கு புரிந்துணர்வு இல்லை." அசிந்திய. அசிந்திய-சக்தி. அசிந்திய என்றால் "கற்பனை செய்ய முடியாத." அது எவ்வாறு நடக்கிறது என்று நீங்கள் ஊகஞ்செய்ய முடியாது, எவ்வாறு தாமரை மலரில், உடனடியாக இவ்வளவு கடினமான நகம், ஒரு வினாடிக்குள், ஹிரண்யக்ஷிபு போன்ற ஒரு அசுரனை அதனால் கொல்ல முடிந்தது. ஆகையினால் அது அசிந்திய. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அசிந்திய. ஆகையினால் வேத அறிவுரை யாதெனில் அசிந்திய காலயே பாவ ந தம்ஸ தற்கெண யோஜயத் "உங்களுடைய தவறான தர்க்கத்தை உங்கள் கற்பனைக்கு எட்டாத செயல்களில் பிரயோகிக்காதீர்கள்." தாமரை மலரில் எவ்வாறு நகம் வளரும் என்பதற்கு தர்க்கம் இல்லை. அவர்கள் கூறுகிறார்கள் "புராணக்கதைகள்." என்று. ஏனென்றால் அவர்களுடைய திறமையற்ற முளையினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, காரியங்கள் எவ்வாறு அவ்வாறு நடக்கிறது என்று அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர்கள் "கதை" என்கிறார்கள்." கதையல்ல. அது உண்மைச் சம்பவம். ஆனால் அது உங்களாலோ அல்லது நம்மாலோ கற்பனை செய்ய முடியாது. அது சாத்தியமல்ல. ஆகையால் அந்த தவகர-கமல, ப்ரஹலாத மஹாராஜ் தலையின் மேல் வைக்கப்பட்டது. . ப்ரஹலாத-தாயினே. ப்ரஹலாத மஹாராஜின் உணர்வுகள், "ஓ, எத்தனை நித்திய மகிழ்ச்சி நிறைந்தது இந்த கை." உணர்வுகள் மட்டுமல்ல, ஆனால் உடனடியாக அவருடைய அனைத்து பௌதிக துன்பங்கள், வேதனைகள், திடீரென மறைந்தன. இதுதான் தெய்வீகமான செயலின் உணர்வு. இந்த யுகத்தில் நாமும் இதே போன்ற வசதியை பெறலாம். பகவானின் தாமரைக்கு கரங்களால் தொட்டவுடன் ப்ரஹலாத மஹாராஜ் உடனடியாக மயங்கிப் போனார் என்பதல்ல .... நீங்களும் இதே சலுகையை உடனடியாக பெறலாம் நாமும் ப்ரஹலாத மஹாராஜ் போல் ஆனால். பிறகு அது சாத்தியமே. கிருஷ்ணர் அத்வய-ஞான, ஆகையால் இந்த யுகத்தில் கிருஷ்ணர் ஒலி அதிர்வு உருவத்தில் தோன்றியுள்ளார்: கலியுக நாம ரூபா கிருஷ்ணாவதார (சி. சி. ஆதி-லில 17.22). இந்த யுகம் ... ஏனென்றால் இந்த யுகத்தில் தாழ்வை அடைந்த இந்த மனிதர்கள், அவர்கள் ... அவர்களுக்கு தகுதி இல்லை. மண்டா:. எல்லோரும் தீயவர்கள். ஒருவருக்கும் தகுதி இல்லை. அவர்களுக்கு ஆன்மீக அறிவு இல்லை. அக்கறை இல்லை. உங்களுடைய மேற்கத்திய நாட்டில் அவர்கள் பௌதிக அறிவில் பெருமை கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு ஆன்மீக அறிவு இல்லை. ஒரு வேளை சரித்திரத்தில், முதல் முதலாக சரித்திரத்தில், அவர்கள் ஆன்மிக அறிவைப் பற்றி சில விபரங்கள் தெரிந்துக் கொள்கிறார்கள். பக்தர்கள்: ஜெய். பிரபுபாதர்: இல்லையெனில் அங்கு ஆன்மிக அறிவே இல்லை. அவர்களுக்கு தெரியவில்லை. அதுதான் காரணம்.