TA/Prabhupada 0459 - பிரகலாத மஹாராஜ் மஹாஜனங்களில் ஒருவர், அங்கீகாரம் பெற்றவர்

Revision as of 23:45, 1 October 2020 by Elad (talk | contribs) (Text replacement - "(<!-- (BEGIN|END) NAVIGATION (.*?) -->\s*){2,}" to "<!-- $2 NAVIGATION $3 -->")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.9.7 -- Mayapur, February 27, 1977

ப்ரடியும்ன: மொழிபெயர்ப்பு - "பிரகலாத மஹாராஜ் தன்னுடைய சிந்தனையும் பார்வையும் பகவான் நரசிம்ம-தேவின் மீது நிலையாக முழு கவனத்துடன, முழு மயக்கநிலையில் மூழ்கியிருந்தார். நிலையான மனத்துடன், அவர் பிரார்த்தனையை அன்புடன் தழுதழுத்த குரலில் அளிக்க தொடங்கினார்." பிரபுபாதர்: அஸ்தௌஷீத் தரிம் ஏகாக்ர-மனஸா சுஸமாஹித: ப்ரேம-கத்கதயா வாசா தன்-ன்யஸ்த-ஹ்ருதயேக்ஷண: (ஸ்ரீ. பா. 7.9.7) ஆகையால் இதுதான் செயல்முறை. இந்த செயல்முறையை நீங்கள் உடனடியாக எதிர்பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் பொது செயல்முறையை பயிற்சி செய்தால், சுலபமாக செய்துவிடலாம், பகவத் கீதையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது போல், மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (பா.கீ.18.65) பிரகலாத மஹாராஜ் நிற்கும் நிலையை உங்களால் உடனடியாக அடைய முடியாது. அது சாத்தியமில்லை. இந்த செயல்முறை, முதன் முதலில், சாதன-பக்தி. இந்த பிரகலாத மஹாராஜாவின் நிலைப்பாடு வேறுபட்டது, அவர் மஹா-பாகவத. பல சந்தர்ப்பங்களில் நாம் பார்த்துவிடடோம், அவர் நித்திய-சித்ஹா. அங்கு இரண்டு வகையான பக்தர்கள் உள்ளனர், மூன்று: நித்திய-சித்ஹா, சாதன-சித்ஹா, க்ரூப -சித்ஹா. பக்தியின் அமிர்தத்தில் இதன் விபரங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. நித்திய-சித்ஹா என்றால் அவர்கள் முழு முதற் கடவுளுடன் நித்தியமாக இணைந்தவர்கள். அவர்கள் நித்திய-சித்ஹா என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் சாதன-சித்ஹா என்றால் இந்த ஜட உலகில் இழிந்து விழுந்தவர்கள், ஆனால் பக்தி தொண்டின் விதிகள் விதிமுறைகளுக்கு ஏற்ப பயிற்சசி செய்வதன் மூலம், சாஸ்திரத்தின் கட்டளை, குருவின் மேற்பார்வை, இந்த முறையில், ஒருவர் நித்திய-சித்ஹா போன்ற நிலையை அடையலாம். இதுதான் சாதன-சித்ஹா. மேலும் மற்றோன்று இருக்கிரது. அது க்ரூப -சித்ஹா. க்ரூப -சித்ஹா என்றால் ..... எவ்வாறு என்றால் நித்யானந்த பிரபுவைப் போல், அவர் ஜகாய்-மாடாய் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். அங்கு சாதன இல்லை. அவர்கள் எந்த விதிகளையும் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. அவர்கள் திருடர்களாகவும் அயோக்கியர்களாகவும், மிகவும் தாழ்வை அடைந்த நிலையில் இருந்தனர் ஆனால் நித்யானந்த பிரபு ஒரு உதாரணம் காட்ட விரும்பினார், அதாவது "நான் இந்த இரு சகோதரர்களையும் பாவத்திலிருந்து காப்பாற்றுவேன். அவர்கள் மிகவும் தாழ்வை அடைந்தவர்களாயினும் பரவாயில்லை." அதுதான் க்ரூப -சித்ஹா என்று அழைக்கப்படுகிறது. ஆகையால் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் அங்கு மூன்று பிரிவுகள் உள்ளன: நித்திய-சித்ஹா, சாதன-சித்ஹாவும் க்ரூப -சித்ஹாவும். .ஆனால் அவர்கள் சித்ஹாவாகும் பொது, பூரணநிலை, எவ்வகை செயல்முறை ஆனாலும், அவர்கள் ஒரே நிலையில் இருப்பார்கள். அதில் வேறுபாடு இல்லை. ஆக பிரகலாத மஹாராஜாவின் நிலைப்பாடு நித்திய-சித்ஹாவாகும். கெளறான்கேர சண்கி கனே நித்திய-சித்ஹா பொலி மானே. சைதன்ய மஹா பிரபு, அவர் வந்த போது.... அவர் மட்டும் அல்ல, மற்றவர்களும் கூட. எவ்வாறு என்றால் கிருஷ்ணருடன் பல பக்தர்கள், அவர்கள் தோன்றினார்கள், அர்ஜுன் போல. அர்ஜுன் நித்திய-சித்ஹா ஆவார், நித்திய-சித்ஹா நண்பன். கிருஷ்ணர் கூறிய போது அதாவது "பகவத் கீதையின் தத்துவத்தை நான் சூரிய பகவானிடம் உரையாடினேன்," இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் (ப.கீ. 4.1) அது பல பத்து இலட்சம் வருடங்களுக்கு முன்பு. அந்த சங்கதியை தெளிவுபடுத்த, அர்ஜுன் விசாரித்தார் அதாவது "கிருஷ்ணா, நீங்கள் என் வயதை உடையவர். நான் எவ்வாறு நம்புவது அதாவது பல பத்து இலட்சம் வருடங்களுக்கு முன்பு நீங்கள் உரையாடினீர்கள் என்று?" ஆகையால் கிருஷ்ணர் என்ன பதிலளித்தார், உங்களுக்கு தெரியுமா, அதவாது "என் அன்புள்ள அர்ஜுன, நம் இருவரும் நீயும் நானும், நாம் பற்பல முறை தோன்றியுள்ளோம். இதன் வித்தியாசம் என்னவென்றால் நீ மறந்துவிட்டாய். அப்படியென்றால் அந்த நேரத்தில் நீயும் இருந்தாய், ஏனென்றால் நீ என்னுடைய நித்திய-சித்ஹா நண்பன். நான் தோன்றும் போதெல்லாம், நீயும் தோன்றுவாய். ஆனால் நீ மறந்துவிட்டாய்; நான் மறக்கவில்லை." அதுதான் ஜீவாவிற்கு இடையில் உள்ள வித்தியாசம், அல்லது பகவான், அதாவது நாம் பரம புருஷனின் மிகச் சிறிய அங்க உறுப்பு; ஆகையினால் நாம் மறந்துவிடலாம். ஆனால் கிருஷ்ணர் மறப்பதில்லை. அதுதான் வித்தியாசம். ஆகையால் நித்திய-சித்ஹா. பிரகலாத மஹாராஜாவும் நித்திய என்று புரிந்துக் கொள்ளப்படுகிறது, மஹா-பாகவத, நித்திய-சித்ஹா. அவர்கள் கிருஷ்ண லீலாவை பூர்த்தி செய்ய தோன்றினார்கள். ஆகையால் நாம் பிரகலாத மஹாராஜாவை போல் நடந்துக் கொள்ள முயற்சி செய்ய கூடாது. அது நல்லதல்ல. மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:, நான் நேற்று விளக்கமாக குறிவிட்டேன். பிரகலாத மஹாராஜ் மஹாஜனங்களில் ஒருவர், அங்கீகாரம் பெற்றவர், அங்கீகாரம் பெற்ற பக்தர். நாம் அவரை பின்பற்ற முயற்சிக்க வேண்டும். மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:. ஆகையால் ஷ்ருதயோ விபின்னா:. தர்கோ ப்ரதிஷ்ட: ஷ்ருதயோ விபின்னா: நாசௌ முனிர் யஸ்ய மதம் ந பின்னம் தர்மஸ்ய தத்வம்' நிஹிதம் குஹாயாம் மஹாஜனோ யேன கத: ஸ பந்தா: (சி.சி. மத்திய 17.186) உங்களால் பகவானை தர்க்கத்தாலும் விவாதங்களாலும் புரிந்துக் கொள்ள முடியாது. அது தீர்வை அடையாது. அங்கு பல மாயாவாதிகள் உள்ளன, அவர்கள் வேண்டுமென்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் "பகவான் என்றால் என்ன?" நெத்தி நெத்தி: "இது இல்லை, இது இல்லை, இது இல்லை. ப்ரம்மன் என்றால் என்ன?" ஆகையால் அந்த செயல்முறையால் பகவான் என்றால் என்ன என்று உங்களால் புரிந்துக் கொள்ளவே முடியாது. ஜானே ப்ரயாஸே உதபாஸ்ய நமன்த ஏவ. சைதன்ய மஹாபிரபு இந்த சூத்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். அறிவால், உங்களுடைய பகுத்தறிவுடைய பாண்டித்தியத்தால், நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் - நீங்கள் மிகுந்த உயர்ந்த-தரத்தை உடைய கல்விமானாக இருக்கலாம் - ஆனால் அந்த தகுதி பகவானைப் புரிந்துக் கொள்வதற்கானதல்ல. அது தகுதி அல்ல. நீங்கள் உங்களுடைய வறட்டுப் பெருமையை விட்டுவிட வேண்டும் அதாவது "நன் பணக்காரன்," "நன் மிகவும் கற்றறிந்தவன்," "நான் மிகவும் அழகாக இருக்கிறேன்," "நான் மிகவும்...," மேலும், மேலும். அவைகள் ஜன்மைஸ்வர்ய ஸ்ருத ஸ்ரீ (ஸ்ரீ.பா.1.8.26) இவை தகுதி அல்ல. குந்தி தேவி கூறியுள்ளார், அகிஞ்சன கோசரஹ: கிருஷ்ண, நீங்கள் அகிஞ்சன கோசர." அகிஞ்சன. கிஞ்சன என்றால் யாராவது நினைத்தால் அதாவது "நான் இதை வைத்திருக்கிறேன்; ஆகையினால் என்னால் கிருஷ்ணரை வாங்க முடியும்," ஓ, முடியாது, அதுவல்ல. அது சாத்தியமே இல்லை. நீங்கள் வெற்றிடமாகிவிடுவீர்கள், அகிஞ்சன கோசர:.