TA/Prabhupada 0604 - கிருஷ்ணரின் வழிநடந்தால் எனக்கு உன்னதமான தளத்தில் இடம் கிடைக்கும்

Revision as of 08:24, 19 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Vanisource:Lecture on SB 1.5.11 -- New Vrindaban, June 10, 1969

நிவ்ருத்த என்றால் ஏற்கனவே முடிந்தது, முழுமையாக முடிந்தது. அது என்ன முடிந்தது? திருஷ்ன. திருஷ்ன என்றால் ஏங்குதல் என்று பொருள் தனது பௌதிக ஏக்கத்தை முடித்தவர்கள், இறைவனின் இந்த உன்னத பெருமைகளை ஜபிக்க முடியும். மற்றவர்களால் முடியாது. நம் சங்கீர்த்தன இயக்கத்தில், நீங்கள் மிகவும் பரவசத்தையும், மகிழ்ச்சியையும் அடைவதைப் போல், மற்றவர்கள், "இந்த மக்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்பார்கள் பைத்தியம், ஆடுகிறார்கள், ஆடுகிறார்கள், பேரிகை கொட்டுகிறார்கள் என்று நினைப்பார்கள். பௌதிக இன்பத்திற்கான அவர்களின் வேட்கை முடிவடையாததால் அவர்கள் அப்படி உணருவார்கள். எனவே நிவ்ருத்த.

உண்மையில், கிருஷ்ணரின் (கடவுளின்) இந்த உன்னதப் பெயரை விடுவிக்கப்பட்ட நிலையில் ஜபிக்கலாம். எனவே நாங்கள் பரிந்துரைக்கிறோம், ஜபிக்கும்போது, ​​மூன்று நிலைகள் உள்ளன. அபராதங்களுடன்கூடிய நிலை, விடுவிக்கப்பட்ட நிலை, மற்றும் உண்மையில் கடவுள் மீதான அன்பின் நிலையில் அது ஜபித்தல் மூலம் ஏற்படும் முழுமையான நிலை. ஆரம்பத்தில் அபராதங்களுடன் ஜபிக்கிறோம் - பத்து வகையான குற்றங்கள். ஆனால் நாம் ஜபிக்க கூடாது என்று அர்த்தமல்ல. குற்றங்கள் இருந்தாலும் கூட, நாம் ஜபிப்போம் அந்த ஜபம் எல்லா குற்றங்களிலிருந்தும் வெளியேற எனக்கு உதவும். நிச்சயமாக, நாம் குற்றங்களைச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே பத்து வகையான குற்றங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். குற்றமற்ற நிலையில் செய்யும் ஜபமானது விடுவிக்கப்பட்ட நிலை. அது விடுவிக்கப்பட்ட நிலை. விடுவிக்கப்பட்ட நிலைக்குப் பிறகு, ஜபிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், ஏனென்றால் அது உன்னத நிலையில் இருப்பதால், கிருஷ்ணரின் (கடவுளின்) உண்மையான அன்பை பெற்று ஆனந்தம் அடையலாம். ஆனால் அதே விஷயம் ... ஜபிப்பது. அபராதங்களுடம்கூடிய நிலையில் ஜபிப்பது, விடுவிக்கப்பட்ட நிலையில் ஜபிப்பது, ஆனால் முதிர்ந்த நிலையில் ஜபிப்பது, ... ரூப கோஸ்வாமியைப் போல, அவர் சொல்வார் "நான் ஒரு நாவால் என்ன ஜபிக்க முடியும், இரண்டு காதுகளால் நான் என்ன கேட்க முடியும்? என்னிடம் பல லட்சகணக்கான காதுகள் இருந்தால், என்னிடம் பல லட்சகணக்கான நாக்கு இருந்தால், நான் ஜபிக்கவும் கேட்கவும் முடியும்." ஏனென்றால் அவை விடுவிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

ஆனால் அந்த நோக்கத்திற்காக நாம் சோர்வடையக்கூடாது. நாம் விடாமுயற்சியுடன் தொடர வேண்டும். உத்ஸாஹாத் தைர்யாத். உத்சாஹாத் என்றால் உற்சாகத்துடன், மற்றும் தைரியாத் , தைரியாத் என்றால் விடாமுயற்சி, பொறுமை. உத்சாஹாத். நிஷ்சயாத். நிஷ்சயாத் என்பது உறுதியுடன் என்று பொருள் "ஆம், நான் ஜபிக்கத் தொடங்கிவிட்டேன், ஒருவேளை குற்றங்கள் இருக்கலாம், ஆனால் நான் தொடர்ந்தால், என்னை உன்னத நிலையில் வைப்பதில் கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைவார் இந்த ஹரே கிருஷ்ண ஜபத்தை நான் எப்போது சுவைத்து மகிழ்வேன். " பழுத்த, பழுக்காத மாம்பழத்தை பற்றி விஷ் வநாத சக்ரவர்த்தி சொன்னதை போல. பழுக்காத நிலை, அது கசப்பானது, ஆனால் அதே மாம்பழம், அது முழுமையாக பழுத்தவுடன், அது இனிமையானது, இனிப்பு. இந்த நிலைக்கு நாம் காத்திருக்க வேண்டும், நாம் குற்றங்களைச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பின்னர், நிச்சயமாக, நாம் வருவோம் ஒரு நோயுற்ற நோயாளியைப் போலவே, அவர் மருத்துவர் வழங்கிய விதிமுறைகளைப் பின்பற்றி மருந்து எடுத்துக்கொண்டால், பின்னர் நிச்சயமாக அவர் குணப்படுவார்.