TA/Prabhupada 0842 - கிருஷ்ண உணர்வு இயக்கம் பலபேருக்கு நிவ்ருத்தி மார்க்கத்தை பயிற்றுவித்துள்ளது

Revision as of 07:27, 28 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


761214 - Lecture BG 16.07 - Hyderabad

இது அசுர வாழ்க்கையின் தொடக்கமாகும், ப்ரவ்ருத்தி மற்றும் நிவ்ருத்தி. ப்ரவ்ருத்தி என்றால், ஊக்கம்... ஒரு சர்க்கரை துகள் உள்ளது, எறும்புக்கு சர்க்கரை துகள் இருப்பது தெரியும். அது அதை நோக்கி ஓடுகிறது. அது ப்ரவ்ருத்தி. நிவ்ருத்தி என்பதன் பொருள் "நான் என் வாழ்க்கையை இந்த வழியில் கழித்துவிட்டேன், ஆனால் அது உண்மையில் எனது வாழ்க்கையின் முன்னேற்றம் அல்ல. நான் இந்த வாழ்க்கை முறையை நிறுத்த வேண்டும். நான் ஆன்மீகத்தை உணர வேண்டும்." அது நிவ்ருத்தி-மார்க₃. இரண்டு வழிகள் உள்ளன: ப்ரவ்ருத்தி மற்றும் நிவ்ருத்தி. ப்ரவ்ருத்தி என்றால் நாம் மிகவும் இருண்ட பகுதிக்குச் செல்கிறோம். அதா₃ந்த-கோ₃பி₄ர் விஷ₂தாம் தமிஸ்ரம் (SB 7.5.30). ஏனென்றால், நம்முடைய புலன்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, அதாந்த... அதாந்த என்றால் கட்டுப்பாடற்றது, மேலும் கோ என்றால் புலன்கள் என்று பொருள். அதா₃ந்த-கோ₃பி₄ர் விஷ₂தாம் தமிஸ்ரம். நாம் வெவ்வேறு ஜீவராசிகளை பார்ப்பது போல, நரகத்திலும் வாழ்க்கை இருக்கிறது, தமிஸ்ர. எனவே, ஒன்று நீங்கள் நரக வாழ்வுக்குச் செல்வீர்கள் அல்லது முக்திக்கான பாதையில் செல்வீர்கள், இரு வழிகளும் உங்களுக்காகத் திறந்திருக்கின்றன. ஆகவே, நீங்கள் நரக வாழ்க்கைக்குச் சென்றால், அது ப்ரவ்ருத்தி-மார்க₃ எனப்படுகிறது, முக்தியின் பாதையை நோக்கிச் சென்றால், அது நிவ்ருத்தி-மார்க₃.

எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கம் நிவ்ருத்தி-மார்கத்திற்கான பயிற்சி, அடிப்படைக் கொள்கைகள், பல "இல்லைகள்". "இல்லை" என்றால் நிவ்ருத்தி. தவறான பாலுறவு இல்லை, இறைச்சி சாப்பிடுவதில்லை, சூதாட்டம் இல்லை, மது பாவனை இல்லை. எனவே இதுவே "இல்லை" மார்க்கம். இது அவர்களுக்குத் தெரிவதில்லை. பல "இல்லைகளை" நாம் கூறும்போது, ​​அது மூளைச் சலவை என்று அவர்கள் நினைக்கிறார்கள். மூளை சலவை அல்ல. இது உண்மையானது. ஆன்மீக வாழ்க்கையை முன்னேற்ற விரும்பினால், பல தொல்லைகளை நிறுத்த வேண்டும். அதுவே நிவ்ருத்தி-மார்க₃. அசுரர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியாததால், நிவ்ருத்தி-மார்க₃, "இல்லை" என்ற பாதை பரிந்துரைக்கப்படும்போது, ​​அவர்கள் கோபப்படுகிறார்கள்.

உபதே₃ஷோ ஹி மூர்கா₂ய
ப்ரகோபாய ந ஷா₂ந்தயே
பய꞉-பாநம் பு₄ஜங்கா₃நாம்
கேவலம் விஷ-வர்த₄நம்
(நீதி ஷா₂ஸ்த்ர)

அயோக்கியர்களிடம், முட்டாள்களிடம் அவர்களது வாழ்க்கைக்கு உதவும் விடயத்தைப் பற்றி பேசினால் அவர் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்; அவர் கோபப்படுவார். உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது, பய꞉-பாநம் பு₄ஜங்கா₃நாம் கேவலம் விஷ-வர்த₄நம். எப்படியெனில், ஒரு பாம்பைக் கேட்டால் "நான் தினமும் ஒரு கிண்ணம் நிறைய பால் தருகிறேன். தேவையற்ற முறையில் மற்றவர்களைக் கடித்து, இந்த தீங்கான வாழ்க்கை வாழ வேண்டாம். நீ இங்கு வந்து, ஒரு கிண்ணம் நிறைய பாலைக் குடித்து நிம்மதியாக வாழு", அதனால் முடியாது. அந்த பாலைக் குடிப்பதன் மூலம், அதன் விஷம் அதிகரிக்கும், விஷம் அதிகரித்தவுடன்-இது மற்றொரு அரிப்பு உணர்வு- அது கடிக்க விரும்பும். அது கடிக்கும். எனவே இதன் விளைவாக இருக்கப்போவது பய꞉-பாநம் பு₄ஜங்கா₃நாம் கேவலம் விஷ-வர்த₄நம். அவை அதிகமாக பட்டினி கிடப்பது, அவைகளுக்கு நல்லது, ஏனென்றால் விஷம் அதிகரிக்காது. இயற்கையின் சட்டம் உள்ளது.

ஒருவர் ஒரு பாம்பைப் பார்த்தவுடன், உடனடியாக அனைவரும் பாம்பைக் கொல்ல தயாராகி விடுகிறார்கள். இயற்கையின் சட்டத்தால் ... கூறப்படுகிறது என்னவெனில். "ஒரு சிறந்த சாது கூட, ஒரு பாம்பு கொல்லப்படும்போது புலம்புவதில்லை." மோதே₃த ஸாது₄ர் அபி ஸர்ப, வ்ருஷ்₂சிக-ஸர்ப-ஹத்யா (SB 7.9.14). பிரகலாத மஹாராஜர் கூறினார். அவரது தந்தை கொல்லப்பட்டாலும், நரசிம்மர் இன்னும் கோபமாகவே இருந்தார், எனவே அவர் பகவான் நரசிம்மரை சாந்தப்படுத்தினார், "எம்பெருமானே, இப்போது தாங்கள் தங்கள் கோபத்தை விட்டுவிடலாம், ஏனென்றால் என் தந்தை கொல்லப்பட்டதால் யாரும் கவலையடையவில்லை." "நானும் கவலையடையவில்லை, நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனென்றால் என் தந்தை ஒரு பாம்பையும் தேளையும் போன்றவர். எனவே ஒரு தேளோ பாம்போ கொல்லப்படும்போது ஒரு சிறந்த சாது கூட மகிழ்ச்சியடைகிறார்." யாராவது கொல்லப்படுகையில் அவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை. ஒரு எறும்பு கொல்லப்பட்டால் கூட, ஒரு துறவி துக்கமடைகிறார். ஆனால் ஒரு பாம்பு கொல்லப்படுவதைக் காணும்போது, ​​அவர் மகிழ்வடைகிறார்.

ஆகவே, நாம் ஒரு பாம்பின் வாழ்வைப் பின்பற்றக்கூடாது, ப்ரவ்ருத்தி-மார்க₃. மனித வாழ்க்கை என்பது நிவ்ருத்தி-மார்க்கத்திற்கானது. நமக்கு பல கெட்ட பழக்கங்கள் உள்ளன. இந்த கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவதுதான் மனித வாழ்க்கை நம்மால் அதைச் செய்ய முடியாவிட்டால், ஆன்மீக வாழ்க்கையில் நாம் எந்தவித முன்னேற்றத்தையும் அடையப் போவதில்லை. உங்களுக்கு சிறிது ஆசை இருக்கும் வரை புலன் திருப்திக்காக பாவ காரியங்கள் செய்வதற்காக, நீங்கள் அடுத்த உடலை ஏற்றாக வேண்டும். ஒரு ஜடவுடலை ஏற்றுக்கொண்டு, நீங்கள் துன்பத்திற்குள்ளாவீர்கள்.