TA/Prabhupada 1075 - நம்முடைய இந்த வாழ்க்கையின் செயல்களுக்கேற்ப நாம் மறுபிறவிக்கு தயார் செய்கிறோம்

Revision as of 18:08, 13 June 2018 by Vanibot (talk | contribs) (Vanibot #0019: LinkReviser - Revised links and redirected them to the de facto address when redirect exists)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


660219-20 - Lecture BG Introduction - New York

பகவான் கூறினார் அந்த காலே ச மாமேவ ஸ்மரன் முக்த்வா கலேவரம் (ப.கீ. 8.5). இந்த ஜட உடலை விட்டு செல்லும் ஒருவர், வெறுமனே பகவான் கிருஷ்ணரை, முழுமுதற் கடவுளை நினைவில் கொண்டால், அவர் உடனடியாக சச்சிதானந்த-விக்ரஹ (பிரச.5.1), ஆன்மீக உடலை பெறுவார். இந்த உடலை விட்டு நீங்கி இந்த ஜட உலகில் மறு உடலை பெறுவதற்கான முறைகள் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு மனிதர் மறுபிறவியில் எந்தவிதமான உடலை அடைவார் என்பது தீர்மானிக்கப்பட்ட பின்னரே மரணமடைகின்றார். ஆனால் அது உயர் அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. எவ்வாறு என்றால் நமது சேவைகளுக்கு ஏற்ப நாம் உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ இருப்போம். அதேபோல், நம் செயல்களுக்கு ஏற்ப நாம், இந்த வாழ்க்கையின் நடவடிக்கை, செயல்கள் மறுபிறவியின் அடித்தளத்திற்கான ஏற்பாடாகும். இந்த வாழ்க்கையின் செயல்களால் நாம் மறுபிறவிக்கு தயார் செய்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால் நம்முடைய இந்த வாழ்க்கையை பகவானின் ராஜ்யத்திற்குச் செல்ல உயர்வு பெற முயற்சி செய்தால், பிறகு நிச்சயமாக, வெளியேறியபின், இந்த ஜட உடலைவிட்டு வெளியேறியபின், பகவான் கூறுகிறார் யஹ ப்ரயாதி, போகும் ஒருவர், ஸ மத்பாவம் யாதி (ப.கீ. 8.5), மத்பாவம். அவருக்கு பகவானைப் போன்று ஆன்மீக உடல் அல்லது ஆன்மீக குணங்கள் கிடைக்கும். நாம் ஏற்கனவே மேலே விவரித்தது போல், இப்பொழுது பல விதமான ஆன்மீகவாதிகள் உள்ளனர். ப்ரமவாதீ, பரமாத்மவாதீ, மற்றும் பக்தர்கள். ஆன்மீக வெளியில் அல்லது ப்ரமஜோதியில் அங்கே ஆன்மீக கிரகங்கள் உள்ளன, எண்ணற்ற ஆன்மீக கிரகங்கள், நாம் ஏற்கனவே கலந்துரையாடினோம். இந்த கிரகங்களின் எண்ணிக்கை, பௌதிக உலகில் இருக்கும் ஆனைத்து அண்டங்களையும்விட பற்பல மடங்கு அதிகமானது. இந்த பௌதிக உலகம் எகாம்சேன ஸ்திதோ ஜகத் (ப.கீ. 10.42). இது சிருஷ்டியின் கால் பாகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிருஷ்டியின் முக்கால் பாகம் ஆன்மீக உலகமாகும் மேலும் அந்த கால் பாக சிருஷ்டியில் இது போன்ற பத்து இலட்சம் அண்டங்கள் உள்ளன இதை நாம் தற்சமயம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் ஒரு பிரபஞ்சத்தில் அங்கே கோடிக்கணக்கான கோளங்கள் உள்ளன. ஆகையால் அங்கே கோடிக்கணக்கான சூரியன், நட்சத்திரங்கள் மேலும் சந்திரனும் இந்த பௌதிக உலகம் அனைத்திலும் உள்ளன, ஆனால் இந்த பௌதிக உலகமும் மொத்த படைப்பின் ஒரு கால் பகுதியே கொண்டதாகும். முக்கால் பாகம் தோற்றம் ஆன்மீக உலகமாகும். இந்த மத்பாவம், பரமனுடன் ஐக்கியமாக விரும்பும் ஒருவர், அவர்கள் முழுமுதற் கடவுளின் ப்ரமஜோதியில் ஐக்கியமாகிறார்கள். மத்பாவம் என்றால் ப்ரமஜோதி அத்துடன் ப்ரமஜோதியில் இருக்கும் ஆன்மீக கோளங்கள். மேலும் பக்தர்கள், பகவானின் உறவில் ஆனந்தம் காண விரும்புபவர்கள், அவர்கள் வைகுண்ட கிரகத்தை அடைவார்கள். அங்கே கணக்கற்ற வைகுண்ட கிரகங்கள் உள்ளன, மற்றும் பகவானும், முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், தனது பூரண விஸ்தரிப்புக்களான நாராயணனாக, நான்கு கைகளுடன் பல வேறுபட்ட பெயர்களுடணும், ப்ரத்யும்னன், அநிருத்தா, மற்றும் மாதவ, கோவிந்த, இந்த நான்கு கரங்கள் கொண்ட நாராயாணனுக்கு பல கணக்கற்ற பெயர்கள் உண்டு. ஆகையால் கிரகங்களில் ஒன்று, அதுவும் மத்பாவம், அதுவும் ஆன்மீக இயற்கைக்குள் இருக்கிறது. எனவே எந்த ஆன்மீகவாதி தன் வாழ்க்கையின் இறுதி நேரத்தில், அவர் ப்ரமஜோதியை நினைத்தாலும் அல்லது பரமாத்மாவை நினைத்து தியானம் செய்தாலோ, அல்லது முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்தாலோ, இதில் எதுவானாலும், அவர்கள் ஆன்மீக வெளியை சென்றடைவார்கள். ஆனால் பக்தர்கள் மட்டும்தான், முழுமுதற் கடவுளுடன் அந்தரங்க தொடர்பு பயிற்சி பெற்றவர்கள்தான், அவர்கள் வைகுண்ட கிரகத்தினுள் செல்வார்கள் அல்லது கோலோக விருந்தாவன கிரகத்திற்குச் செல்வார்கள். பகவான் கூறுகிறார், யஹ ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய: (ப.கீ.8.5). இதில் சந்தேகமே இல்லை. ஒருவர் நம்பாமல் இருக்க கூடாது. அதுதான் கேள்வி. வாழ்நாள் முழுவதும் நீங்கள் பகவத்-கீதையை படிக்கிறிர்கள், ஆனால் பகவான் எதுவாகிலும் கூறினால், அது நம் கற்பனைக்கு பொருந்தவில்லை என்றால், நாம் அதை நிராகரிக்கிறோம். அது பகவத்-கீதையை படிப்பதன் செயல்முறை அல்ல. எவ்வாறு என்றால் அர்ஜுனர் கூறியது போல் சர்வம் ஏதாமிர்தம் மன்யே, "தாங்கள் சொல்லியிருப்பது எதுவாயினும், நான் அனைத்தையும் நம்புகின்றேன்." அதேபோல், கேட்பது, கேட்டுக் கொண்டிருப்பது. பகவான் கூறுகிறார் அதாவது சாகும் நேரத்தில், யாராயிருந்தாலும் அவரை நினைத்துக் கொண்டால், ப்ரமனாக, அல்லது பரமாத்மாவாக அல்லது முழுமுதற் கடவுளாக, நிச்சயமாக அவர் ஆன்மீக வெளிக்கு செல்வார். இதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை. ஒருவர் இதில் அவநம்பிக்கை கொள்ள கூடாது. மேலும் இதன் செயல்முறை, பொதுவான விதிகள் பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது, ஒருவர் ஆன்மீக ராஜ்யத்திற்குள் எவ்வாறு போக முடியும் எவ்வாறு சாத்தியமாகும் சாகும் நேரத்தில் வெறுமனே பரமனை நினைப்பதன் மூலம். ஏனென்றால் பொதுவான முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. யம் யம் வாபி ஸ்மரன்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் தம் தமேவைதி கெளந்தேய ஸதா தத்பாவ பாவித: (ப.கீ.8.6).