TA/Prabhupada 0237 - ஹரே கிருஷ்ண, என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் கிருஷ்ணருடன் தொடர்பில் இருப்போம்



Lecture on BG 2.3 -- London, August 4, 1973

ப்ரத்யும்னன்: மொழிபெயர்ப்பு - ப்ருதாவின் மகனே, இந்த இழிவான இயலாமைக்கு இடம் கொடுக்காதே. இது உனக்கு அழகல்ல. அர்த்தமில்லாத உள்ளத்தின் இந்த பலவீனத்தை கைவிட்டு எழுந்து நில், எதிரிகளை தண்டிப்பவனே. பிரபுபாதர் : ஆக பகவான் கிருஷ்ணர் ஊக்கம் அளிக்கிறார், க்ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம். "இல்லை, இல்லை, என்னால் என் உறவினரை கொல்ல இயலாது. நான் என் ஆயுதங்களை கைவிடுகிறேன்," என ஒரு க்ஷத்ரியனின் கூறுவது வெறும் கோழைத்தனம், பலவீனம். எதற்காக இப்படியெல்லாம் செய்கிறாய்? க்ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம். "இப்படிப்பட்ட இரக்ககுணம், ஒரு க்ஷத்ரியனாக உன் கடமையை நீ செய்ய மறுப்பது, அது இதயத்தின் பலவீனம். இது அர்த்தமற்றது." க்லைப்யம் மா ஸ்ம தமஹ பார்த நைதத் த்வயி உபபத்யதே. "குறிப்பாக நீ. நீ என் நண்பன். மக்கள் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள்? இந்த பலவீனத்தை கைவிட்டு எழுந்திரு, தைரியமாக இரு. ஆக கிருஷ்ணர், அர்ஜுனரை போரிட எப்படி தூண்டுகிறார் என்பதை பாருங்கள். மக்கள் அறியாமையால் சிலசமயம் குற்றங்கூறுவார்கள், அதாவது "கிருஷ்ணர் தான் அர்ஜுனரை இப்படி தூண்டி விடுகிறார். அர்ஜுனர் மிகவும் பண்புள்ளவர், வன்முறையற்றவர் மற்றும் கிருஷ்ணர் தான் அவரை சண்டையிடச்சொல்லி தூண்டி விடுகிறார்." இதற்கு பேர் தான் ஜட-தர்ஷன. ஜட-தர்ஷன என்றால் பௌதிக பார்வை. எனவே சாஸ்திரம் கூறுவது என்னவென்றால், அதஹ ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்திரியைஹி (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 17.136). ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி. ஹரே கிருஷ்ண என்று அவர் திருநாமத்தை ஜெபிப்பதால் நாம் கிருஷ்ணருடன் தொடர்பு கொள்கிறோம். கிருஷ்ணருடன் நம்முடைய தொடர்பு இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. நாமாதி. எனவே சாஸ்திரம் கூறுவது என்னவென்றால், அதஹ ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி. ஆதி என்றால் ஆரம்பம். தற்போது கிருஷ்ணருடன் நமக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நாம் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஜெபித்தால், உடனேயே கிருஷ்ணருடன் தொடர்பு கொள்வதற்கான முதல் வாய்ப்பு கிடைக்க தொடங்குகிறது. ஆக அதை பயிற்சி செய்யவேண்டும். நினைத்தவுடன் கிருஷ்ணரை உணர்வது சாத்தியம் அல்ல. அது சாத்தியம் அல்ல. ஆனால் ஒருவர் ஏற்கனவே மிகவும் பக்குவம் அடைந்தவராக இருந்தால், அப்பேர்ப்பட்டவருக்கு உடனடியாக இது சாத்தியமாக இருக்கலாம். எனவே ஸ்ரீ க்ருஷ்ண-நாமாதி. நாம என்றால் பெயர். கிருஷ்ண என்றால் பெயர் மட்டுமல்ல, அவரது திருமேனி, அவரது செயல்கள் எல்லாம் குறிக்கிறது மற்றும் ஆதி என்றால் ஆரம்பம். ஷ்ரவணம் கீர்த்தனம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.23). ஷ்ரவணம் கீர்த்தனம் என்றால் கிருஷ்ணரது புகழைப் பாடுவது, அவரை வர்ணிப்பது... அவருக்கென்று ஒரு வடிவம் உள்ளது. நாம என்றால் பெயர் மற்றும் ரூப என்றால் வடிவம். நாம, ரூப... லீலா என்றால் லீலைகள்; குண என்றால் குணங்கள்; அவரது துணைமையர்; எல்லாம்... அதஹ ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் (சைதன்ய சரிதாம்ருதம் 17.136). ந பவேத் க்ராஹ்யம் இந்திரியைஹி. சாதாரண புலன்களால் நம்மால் புரிந்துகொள்ள முடியாது... அவர் பெயரையும் புரிந்துகொள்ள முடியாது... நம் காதால் கிருஷ்ணரின் திருநாமத்தை கேட்கிறோம், ஆனால் நம் கேட்பதை நாம் புனிதமாக வைக்க தவறினால்... மேன்மேலும் கேட்பதால் தான் அது புனிதம் அடையும் என்பதும் உண்மை தான். ஆனால் நாமும் அதை உதவ வேண்டும். உதவி என்றால் அபராதங்களை தவிர்ப்பது, பத்து வகையான அபராதங்கள். புனிதப்படுத்தும் அந்த செய்முறையை நாம் இவ்வாறு உதவ வேண்டும். உதாரணத்திற்கு, நான் தீப்பற்றவைக்க விரும்பினால், விறகு கட்டையை காய வைத்து எரிதலை நான் உதவ வேண்டும். பிறகு உடனே தீப்பற்றிக் கொள்ளும். அதுபோலவே, நாம வெறும் ஜெபம் செய்தால் அது நமக்கு உதவும், ஆனால் சற்று தாமதமாகத்தான். ஆனால் நாம் அபராதங்களை தவிர்த்தால், வெகு வேகமாக புனிதம் அடைவோம். அந்த திருநாம ஜெபம் வேகமாக செயல்படும்.