TA/Prabhupada 0269 - மொழிபெயர்ப்பு, பகவத் கீதாவை போக்கிரிகளின் சுயஅர்த்தம் முலம் நீங்கள் கற்க முடியாது



Lecture on BG 2.10 -- London, August 16, 1973

ஆகையால் கிருஷ்ணரை ஹிருஷிகேஷாவாக புரிந்துக் கொள்ள முயலுங்கள். ஆகையால் ஹிருஷிகேஷ, கிருஷ்ணர், சிரிக்க தொடங்கினார், அதாவது "அவர் என் நண்பர், நிரந்தரமாக இணைந்தவர், இருந்தும் இத்தகைய பலவீனம். அவர் முதலில் தன்னுடைய தேரை ஓட்ட ஆர்வமுடன் என்னிடம் கேட்டார்,


ஸேனயோருபயோர் மத்யே. இப்போது விஷிதந்தன்,


இப்போது அவர் புலம்புகிறார்." ஆகையால், நாம் எல்லோரும் அவரைப் போன்ற முட்டாள்கள். அர்ஜுனா முட்டாள் அல்ல. அர்ஜுனா குடாகெஸ என்று வர்ணிக்கப்பட்டுள்ளார். அவர் எவ்வாறு முட்டாள் ஆவார். ஆனால் அவர் ஒரு முட்டாள் போல் வேஷம் போடுகிறார். அவர் ஒரு முட்டாள் போல் வேஷம் போடவில்லை என்றால், ஸ்ரீ கிருஷ்ணர் வாயிலிருந்து எவ்வாறு இந்த பகவத் கீதை வந்திருக்கும்? அவர் பக்தர் ஆனதால், அவர் சரியாக கிருஷ்ணர் வழிமுறைகளை சொல்லும் அளவிற்கு நேர்த்தியாக நடந்துக் கொள்கிறார். ஆகையால் நேர்த்தியான குருவும் நேர்த்தியான சீடரும், அர்ஜுனா நாம் அவர்களிடமிருந்து கற்க... நம் நிலை... அர்ஜுனா நம்மைப் போல சாதாரண மனிதராக பிரதிநிதிக்கிறார், மேலும் கிருஷ்ணர் ஹிருஷிகேஷ ஆவார், அவருடைய அறிவுரையை கொடுக்கிறார், நேர்த்தியான அறிவுரை. நாம் ஏற்றுக் கொண்டால், நாம் பகவத் கீதையை அர்ஜுனைப் போல் புரிந்துக் கொள்ளக் கூடிய சக்தியுடன் படித்தால், அந்த நிறைவான சீடர், மேலும் நாம் நேர்த்தியான குரு கிருஷ்ணரின், அறிவுரையும் புத்திமதியையும் ஏற்றுக் கொண்டால், பிறகு நாம் அறிந்துக் கொள்வோம், அதாவது நாம் பகவத் கீதையை புரிந்துக் கொண்டோம் என்று. என் மனயூகத்தின்படி, போக்கிரிகளின் சுய அர்த்தம் கற்பித்தல், ஒருவருடைய பாண்டித்யத்தை காண்பிப்பதின் மூலம், நீங்கள் பகவத் கீதையை புரிந்துக் கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. தாழ்மை உணர்வு. ஆகையினால் பகவத் கீதையில் அது சொல்லப்பட்டிருக்கிறது.


தத்வித்தி பரணிபாதேன பரிப்ரஸ்னென ஸேவயா (பகவத் கீதை 4.34)


ஆகையால் நாம் அர்ஜுன் போல் சரணடைய வேண்டும், அவர் சரண் அடைந்தார்...


சிஷ்யஸ்தே'ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம் (பகவத் கீதை 2.7)


"நான் தங்களிடம் சரணடைகிறேன். நான் தங்கள் சீடனாகிறேன்." சீடனாவது என்றால் சரணடைவதாகும், மனமுவந்து விதிமுறைகளை, அறிவுரைகளை, ஆன்மீக குருவின் கட்டளைகளை, ஏற்றுக் கொள்வது. ஆகையால் அர்ஜுனா ஏற்கனவே அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். அவர் ந யோட்ஸியே என்று கூறியிருந்தாலும்,"கிருஷ்ண, நான் போரிடமாட்டேன்." ஆனால் எஜமானர், அவர் அனைத்தையும் விளக்கினால், அவர் போரிடுவார். எஜமானரின் கட்டளை. போரிட மறுப்பது, அது அவருடைய சொந்த நிறைவு. மேலும் போரிடுவது, அவருக்கு விருப்பம் இல்லை என்ற போதிலும், அது எஜமானரின் மன நிறைவுக்காக ஆகும். இதுதான் பகவத் கீதையின் மொத்தப் பொருள். ஆகையால் கிருஷ்ணர், அர்ஜுனைப் பார்த்துக் கொண்டு, விஸீதந்தம மிகவும் வேதனையடைந்து, புலம்பிக் கொண்டிருக்கிறான், அதாவது அவன் தன் கடமையை செய்ய தயாராக இல்லை. ஆகையினால் அடுத்த பதத்தில் அவர் தொடர்கிறார், அதாவது:


அஸோச்யானன் வஸோசஸ்த்வம் ப்ரக்ஞவாதாம்ஸ்ச பாஷஸே (பகவத் கீதை 2.11)


"என் அன்புள்ள அர்ஜுனா, நீ என்னுடைய நண்பன். பரவாயில்லை, மாயா மிகவும் வலிமை உடையது. நீ என் தனிப்பட்ட, நண்பனாக இருப்பினும், பொய்யான கருணையினால் அதிகமாக போங்கி வழிகிராய். ஆகையால் சும்மா நான் சொல்வதை உற்றுக்கேள்." ஆகையினால் கிருஷ்ணர் கூறினார், அஸோச்யான. "நீ நன்மையே அளிக்காத ஒரு காரியத்திற்கு புலம்பிக் கொண்டிருக்கிறாய்.அஸோச்யான.ஸோச்யா என்றால் புலம்பிக் கொண்டிருப்பது, மேலும் அஸோச்யான என்றால் ஒருவரும் புலம்பக் கூடாது. அஸோச்யா. ஆகையால்

அஸோச்யானன் அன்வச்கோஸ் ப்ரக்ஞவாதாம்ஸ்ச பாஷஸே.


ஆனால் நீ மிகவும் கற்றறிந்த கல்விமான் போல் பேசிக் கொண்டிருக்கிறாய்.ஏனென்றால் அவன் பேசினான். ஆனால் அந்த விஷயங்கள் சரியானதே. அர்ஜுன் கூறியது என்னவென்றால், அதாவது வர்ண-சண்கரா, பெண்கள் மாசுபடுத்தபட்டால், அந்த ஜனத்தொகை வர்ண-சண்கர ஆகும், அது உண்மையே. போரை தவிர்க்கும் நோக்கத்தோடு அர்ஜுனா கிருஷ்ணரிடம் எதைக் கூறினாரோ, அந்த விஷயங்கள் சரியானதே. ஆனால் ஆன்மீக தளத்திலிருந்து...அந்த காரியங்கள் சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம், ஆனால் ஆன்மீக தளத்திலிருந்து, அவை மிகவும் கடுமையானதாக கருதப்படாது. ஆகையினால், அஸோச்யானன் அன்வசொச்சஸ். ஏனென்றால் அவனுடைய புலம்பல் வாழ்க்கையின் சரீரம் சார்ந்த எண்ணமாக இருந்தது. அந்த வாழ்க்கையின் சரீரம் சார்ந்த எண்ணம், கிருஷ்ணரின் விதிமுறைகளில்ஆதி தொடக்கத்திலிருந்து, கண்டிக்கப்பட்டது.


அஸோச்யானன் வஸோசஸ்த்வம் (பகவத் கீதை 2.11)


"நீ வாழ்க்கையின் சரீரம் சார்ந்த எண்ணத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறாய்." ஏனென்றால் வாழ்க்கையின் சரீரம் சார்ந்த எண்ணத்தில் இருக்கும் எவரும், மிருகத்திற்குச் சமமானவர்கள்.