TA/Prabhupada 0319 - கடவுளை ஏற்றுக் கொள், கடவுளின் தொண்டனாகி, கடவுளுக்கு தொண்டு செய்



Room Conversation with Sanskrit Professor, other Guests and Disciples -- February 12, 1975, Mexico


விருந்தினர் (4): தரமம் என்றால் மதத்தில் உள்ள நம்பிக்கையா அல்லது கடமை என்று பொருளா?


பிரபுபாதர்: இல்லை, தரமம் என்றால் கடமை, வர்ணாஸ்ரம தர்மம். அதவும் கைவிடப்பட்டிருக்கிறது. ஆகையால் ஒரே தரமம் என்றால் கிருஷ்ண உணர்வுடையவன் ஆவது. அவர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய. தொடக்கத்தில் அவர் கூறியிருந்தார், தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய. ஆம். யுகே யுகே ஸம்பவாமி. இப்போது அவர் கூறுகிறார், "தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.." ஆக கடைசி கட்டத்தில் அவர் கூறுகிறார் ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய. அப்படி என்றால் தரமம் அல்லது மதத்தின் பெயரில் இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் எதுவும் மெய்யானது அல்ல. ஆகையால் பாகவதமும் கூறுவது என்னவென்றால்,


தர்ம: ப்ரோஜ்ஹித-கைடவோ அத்ர (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2)


அதாவது "எல்லா வகையான போலியான மதங்களும் இங்கு நிராகரிக்க படுகிறது." போலியான மதம் என்றால் என்ன? போலியான... உதாரணமாக தங்கம். தங்கம் என்றால் தங்கம். அந்த தங்கம் ஒரு இந்துவின் கையில் இருந்தால் அதை இந்து தங்கம் என்பீர்களா? அதுபோலவே மதம் என்றால் கடவுளை வணங்குவது. ஆக இந்து மதம் என்றால் என்ன? கிரிஸ்துவ மதம் என்றால் என்ன? முஸ்லிம் மதம் என்றால் என்ன? கடவுள் எங்கும் இருக்கிறார் மற்றும் நமது இருப்பின் உத்தேசம் வெறும் அவர் சொல்படி நடப்பது. அது தான் ஒரே மதம், கடவுளுக்கு கீழ்ப்படிவது. எதற்காக இந்த இந்து மதம், கிரிஸ்துவ மதம், முஸ்லிம் மதம், இந்த மதம், அந்த... எல்லாத்தையும் உற்பத்தி செய்கிறார்கள்? ஆகையால் இவையெல்லாம் போலி மதங்கள். உண்மையில் மதம் என்றால் கீழ்ப்படிதல்...


தரமம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீமத் பாகவதம் 6.3.19)


சட்டத்தை போல்தான். அரசாங்கத்தால் சட்டம் அமைக்கப்பட்டுகிறது. சட்டம் என்பது இந்து சட்டம், முஸ்லிம் சட்டம், கிரிஸ்துவர் சட்டம் என்றெல்லாம் இருக்கமுடியாது. சட்டம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். அரசாங்கத்துக்கு கீழ்ப்படிவது. அது தான் சட்டம். அதுபோலவே, மதம் என்றால் கடவுளுக்கு கீழ்ப்படிவது. பிறகு யாரொருவருக்கு கடவுளின் இருப்பின் கருத்தே இல்லையோ, கடவுளை பற்றி எந்த அறிவும் இல்லையோ, அதுக்கு மதம் என்று பெயரா? அது போலியான மதம். ஆகையால் பாகவதத்தில் நீங்கள் அறியலாம்,


தர்ம: ப்ரோஜ்ஹித கைடவோ அத்ர (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2)


"எல்லா வகையான போலியான மதங்களும் நிராகரிக்க படுகின்றன". மேலும் கிருஷ்ணரும் அதைத்தான் கூறுகிறார்,


ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய (பகவத்-கீதை 18.66)


"நீ எல்லா வகையான போலி மதங்களையும் விட்டுவிடு. நீ வெறும் என்னிடம் சரணடை. அது தான் உண்மையான மதம்." போலியான மதத்தின் மேல் சிந்தனை செய்து என்ன பயன். அது தர்மமே அல்ல. போலி சட்டத்தை போல் தான். சட்டம் போலியாக இருக்கமுடியாது. சட்டம் என்பது அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது. அதுபோலவே, தர்மம் என்பது கடவுளின் கட்டளை. அது தான் தர்மம். நீ பின்பற்றினால், நீ மதத்துக்கு பணிந்தவன். பின்பற்ற மறுத்தால், நீ அரக்கன். கருத்துகளை எளிதாக வைத்திருக்க வேண்டும். பிறகு அது எல்லோரின் மனத்தையும் தொடும் வகையில் இருக்கும். ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது, விஷயங்களை எளிதாக்குவதற்காக. கடவுளை ஏற்றுக் கொள், கடவுளின் தொண்டனாக உன் நிலையை ஏற்றுக்கொண்டு கடவுளுக்கு தொண்டு செய். அவ்வளவுதான், மூன்றே வார்த்தைகளில்.