TA/Prabhupada 0421 - மஹா-மந்திரம் உச்சாடனம் செய்யும் போது தவிர்க்க வேண்டிய பத்து குற்றங்கள் - 1-5



Lecture & Initiation -- Seattle, October 20, 1968

மதுவிஷ: ஸ்ரீலா பிரபுபாத? அந்த பத்து விதமான குற்றங்களை நான் படிக்க வேண்டுமா? பிரபுபாதர்: ஆம். மதுவிஷ: நாங்கள் அதை இங்கே வைத்திருக்கிறோம். பிரபுபாதர்: சும்மா பார். படித்துக் கொண்டிருங்கள். ஆம், நீ வாசி. மதுவிஷ: "மஹா-மந்திரம் உச்சாடனம் செய்யும் போது தவிர்க்க வேண்டிய பத்து குற்றங்கள். முதலாவது: பகவானின் பக்தர்களை தெய்வ நிந்தனை செய்வது." பிரபுபாதர்: இப்போது சும்மா புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பகவானின் எந்த பக்தரும் தெய்வ நிந்தனை செய்யப்படக் கூடாது. எந்த நாட்டில் இருந்தாலும் பரவாயில்லை. எவ்வாறு என்றால் பகவான் ஏசு கிறிஸ்து போல், அவர் அபாரமான பக்தர். மேலும் முகமது கூட, அவரும் ஒரு பக்தர். நாம் பக்தர், மேலும் அவர்கள் பக்தர் அல்ல என்பதற்காக அல்ல. அவ்வாறு நினைக்காதீர்கள். பகவானின் பெருமைக்குரிய சிறப்பை உபதேசிக்கும் எவரும், அவர் பக்தர் ஆவார். அவர் நிந்தனை செய்யப்படக் கூடாது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பிறகு? மதுவிஷ: "இரண்டாவது: பகவானையும் மற்ற தேவர்களையும் ஒரே நிலையில் நினைப்பது, அல்லது பல பகவான்கள் இருப்பதாக அனுமானம் செய்வது." பிரபுபாதர்: ஆம். எவ்வாறு என்றால் அங்கே பல முட்டாள்தனங்கள் உள்ளன, அவர்கள் கூறுகிறார்கள் அதாவது தேவர்கள்... நிச்சயமாக, உங்களுக்கு தேவர்களுடன் பிரச்சனை இல்லை. வேத சமயத்தில் அங்கே நூற்றுக் கணக்கான மேலும் ஆயிரக் கணக்கான தேவர்கள் இருக்கிறார்கள். அதிலும் இது நடந்துக் கொண்டிருக்கிறது அதாவது நீங்கள் கிருஷ்ணரை அல்லது சிவனை அல்லது கலியை வழிபட்டாலும், அது ஒன்றே. இது முட்டாள்தனம். நான் சொல்வதாவது, அவர்களை முழுமுதற் கடவுளுடன் ஒரே நிலையில் வைக்கக் கூடாது. பகவானைவிட எவரும் உயர்ந்தவரல்ல. பகவானைவிட யாரும் சமமானவர்கள் இல்லை. ஆகையால் இந்த சமத்துவம் தவிர்க்கப்பட வேண்டும். பிறகு? மதுவிஷ: "மூன்றாவது: ஆன்மீக குருவின் கட்டளையை உதாசீனப்படுத்துதல்." பிரபுபாதர்: ஆம். ஆன்மீக குருவின் கட்டளை உங்களுடைய வாழ்க்கையும் ஆன்மாவாகவும் இருக்க வேண்டும். பிறகு அனைத்தும் தெளிவாகிவிடும். பிறகு? மதுவிஷ: "நான்காவது: வேதத்தின் அத்தியாயங்களை குறைவாக்குதல்." பிரபுபாதர்: ஆம். அதிகாரமளிக்கப்பட்ட வேதத்தை யாரும் குறைக்கக் கூடாது. இதுவும் குற்றமாகும். பிறகு? மதுவிஷ: "ஐந்தாவது: பகவானின் தெய்வீகமான பெயர்களை மாற்றக் கூடாது." பிரபுபாதர்: ஆம். எவ்வாறு என்றால் இப்போது நாம் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்கிறோம், எவ்வாறு என்றால் அன்றொரு நாள் சில சிறுவர்கள்: "ஒரு சங்கேதக் குறிகளைப் பற்றிய கலை." அது சங்கேதக் குறிகள் அல்ல. கிருஷ்ண, நாம் உச்சாடனம் செய்கிறோம் "கிருஷ்ண," கிருஷ்ண என்று முகவரியிடுகிறோம். ஹரே என்றால் கிருஷ்ணரின் சக்தியை முகவரியிடுகிறோம், மேலும் நாம் வணங்குகிறோம், அது, "தயவுசெய்து என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்துங்கள்." அதுதான் ஹரே கிருஷ்ண. இதற்கு வேறு எந்த மேல்விளக்கமும் இல்லை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. இதன் ஒரே பிரார்த்தனை, "ஓ பகவானின் சக்தி, ஓ பகவான் கிருஷ்ண, ஓ பகவான் ராம, தயவுசெய்து என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்துங்கள்." அவ்வளவு தான். வேறு எந்த இரண்டாவது, மேல்விளக்கமும் இல்லை.