TA/Prabhupada 0480 - கடவுள் ஒரு நபர் அல்லாதவர் அல்ல - ஏனென்றால் நாம் அனைவரும் நபர்கள்.



Lecture -- Seattle, October 7, 1968

மிருக வாழ்வில் புலன் இன்பத்தை தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது அதற்கு சக்தி கிடையாது. அதன் உணர்வு வளர்ச்சியடையவில்லை. க்ரீன் லேக் பார்க்கில் இருப்பது போல், அங்கே பல வாத்துக்கள் உள்ளன. யாரேனும் சிறிது உணவுடன் அங்கே சென்றவுடன், அவை கூட்டமாக கூடிவிடும். "க்வாக், க்வாக், க்வாக்!” அவ்வளவு தான். உண்ட பின், உடலுறவை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன அவ்வளவு தான். ஆக, இதேபோல், புனைகளையும், நாய்களையும், மேலும் இந்த மிருகங்களைப் போல், மனித வாழ்க்கையும் அவ்வாறே இருக்கும் இந்த கேள்வி இல்லையன்றால் "நான் யார்?" அவர்கள் வெறுமனே புலன்களின் தூண்டுதலால் பணி புரிந்தால், அவர்கள் இந்த வாத்துக்களையும், நாய்களையும் விட மேம்பட்டவர்களாக முடியாது. ஆகையினால், முதல் ஆறு அத்தியாயங்களில் அது தீர்மானிக்கப்பட்டுள்ளது, அதாவது ஜீவாத்மாக்கள் ஆன்மீக தீப்பொறி என்று. அந்த தீப்பொறி எங்கு இருக்கிறது என கண்டறிவது மிகவும் கடினம், ஏன் என்றால் அது மிகவும் சிறியது, சிறுதுணிக்கை. அதனை கண்டுபிடிக்க பூதக் கண்ணாடியோ அல்லது இயந்திரங்கலோ இல்லை. ஆனால் அது இருக்கிறது. அது இருக்கிறது. அதன் அறிகுறி இருக்கிறது, ஏனென்றால் அது என் உடலில் உள்ளது, உங்கள் உடலிலும் உள்ளது, ஆகையினால் நீங்கள் நகருகிறீர்கள், பேசுகிறீர்கள், திட்டமிடுகிறீர்கள், பல செயல்கள் செய்கிறீர்கள் - வெறுமனே அந்த ஆன்மீக தீப்பொறியினால். ஆகையால் நாம் அந்த நித்தியமான ஆன்மாவின் மிகச் சிறிய தீப்பொறி. எவ்வாறென்றால் சூரிய ஒளியில் சிறு துகள்கள் இருப்பது போல், பிராகசிக்கும் துகள்கள். பிரகாசிக்கும், இந்த பிரகாசிக்கும் துகள்கள், ஒன்றாய் கலக்கப்படும் போது, அதுவே சூரிய வெளிச்சம். ஆனால் அவைகள் மூலக்கூறுகள். அவை தனிப்பட்ட, அணு முலக்கூறுகள். அதேபோல், பகவானுக்கும் நமக்கும் உள்ள உறவில், நாமும் பகவானின் மிகச் சிறிய துகள்கள், பிராகாசிக்கிறோம். பிராகாசிப்பது என்றால் நமக்கு அதே இயற்கையான மனப் பாங்கு இருக்கிறது, சிந்தித்தல், உணர்தல், விரும்புதல், உருவாக்குதல், அனைத்தும். எவையெல்லாம் உன்னிடம் இருப்பதை காண்கிறாயோ, அது பகவானிடம் இருக்கிறது. ஆகையால் பகவான் உருவமற்றவராக இருக்க முடியாது, ஏனென்றால் நாம் எல்லோரும் தனிநபர்கள். எனக்கு பல இயற்கையான மனப் பாங்கு உள்ளது - அது மிகச் சிறிய அளவு. அதே இயற்கையான மனப் பாங்கு கிருஷ்ணரிடம், அல்லது பகவானிடம் உள்ளது, ஆனால் அது மிகவும் அபாரமானது, வரையறையற்றது. இது தான் கிருஷ்ண உணர்வு கற்றல். வெறுமனே மகத்துவமானது, என் நிலை மிகவும் சிறிது. மேலும் நாம் மிகவும் சிறியது, அற்பமானது; இருப்பினும், நாமக்கு பல இயற்கையான மனப் பாங்கு உள்ளது, பல ஆசைகள், ஆக பல செயல்கள், முளைக்கு பல வேலைகள். கற்பனை செய்து பாருங்கள் மூளைக்கு எவ்வளவு பெரிய வேலை, எதிர்பார்ப்பு, மேலும் இயற்கையான மனப் பாங்கு பகவானிடம் இருக்கிறது, ஏனென்றால் அவர் அபாரமானவர். அவருடைய மகத்துவம் என்றால் இந்த அனைத்து காரியங்களும், உன்னிடம் என்ன இருக்கிறது, அவை அனைத்தும் பகவானிடம் மகத்துவமாக இருக்கிறது. அவ்வளவுதான். தன்மையால், நாம் ஒன்று, ஆனால் அளவால், நாம் வேறுபட்டவர்கள். அவர் உயர்ந்தவர் நாம் சிறியவர்கள். அவர் அளவிடமுடியாதவர், நாம் மிகவும் நுட்பமானவர்கள். ஆகையினால், இதன் இறுதிச் சுருக்கம் என்னவென்றால், அளவில்லா நெருப்பின், தீப்பொறிகள் போல், அவை நெருப்பில் உள்ள போது, நெருப்புடன் தீப்பொறிகளுடனும் பார்ப்பதற்கு மிக அழகாக தோன்றும். ஆனால் அந்த தீப்பொறிகள் நெருப்புக்கு வெளியே சென்றால், அவை அணைந்துவிடும். பிறகு நெருப்பு இருக்காது. அதேபோல், நாம் கிருஷ்ணர் அல்லது பகவானின் , தீப்பொறிகள. நாம் பகவானுடன் தொடர்பு கொள்ளும் பொது, பிறகு நம்முடைய, அந்த ஒளியைத் தூண்டும் சக்தி, நெருப்பு, புதுப்பிக்கப்படுகிறது. இல்லையென்றால், நாம் அணைந்துவிடுவோம். நீங்கள் தீப்பொறியானாலும், இந்த நிகழ்கால வாழ்வில், இந்த பௌதிக வாழ்க்கை, திரையிடப்பட்டுள்ளது. இந்த தீப்பொறி திரையிடப்பட்டுள்ளது, அல்லது கிட்டத்தட்ட அணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இது அணைக்கப்பட முடியாது. அது அணைக்கப்பட்டால், நாம் நமது வாழ்க்கையின் நிலையை எவ்வாறு வெளிப்படுத்துவது? அது அணைக்கபடுவதில்லை, ஆனால் திரையிடப்பட்டுள்ளது. எவ்வாறென்றால் நெருப்பு மூடப்பட்டாலும், அதன் சூட்டை மூடியில் நம்மால் உணரமுடிகிறது, ஆனால் உங்களால் நெருப்பை நேராக காணமுடியாது. அதேபோல், இந்த ஆன்மீக தீப்பொறி அவருடைய பௌதிக ஆடையால் திரையிடப்பட்டுள்ளது; ஆகையினால் நம்மால் பார்க்க இயலாது. மருத்துவர் கூறுகிறார், “ஓ, உடலின் இயக்கம் செயலிழந்துவிட்டது; ஆகையால் இதயம் செயலிழந்துவிட்டது. அவர் இறந்துவிட்டார்.” ஆனால் இதயம் ஏன் செயலிழந்தது என்று அவருக்கு தெரியவில்லை. இதை கணக்கிட, மருத்துவ விஞ்ஞானம் அங்கு இல்லை. அவர்கள் பல காரணங்கள் சொல்வார்கள், அதாவது "ஏனென்றால் இரத்தத்தில் உள்ள அணுக்கள், சிவப்பு அணுக்கள் இயக்கத்தை நிறுத்திவிட்ட்து, அவை வெள்ளையாகிவிட்டது; ஆகையினால் அது... " இல்லை. இது சரியான பதில் அல்ல. இரத்தம் சிவப்பாக ஆக்கப்படலாம்.... அல்லது சிவப்புத் தன்மை என்பது உயிரல்ல. இங்கே பல இயற்கைப் பொருள்கள், இயற்கையாகவே சிவப்பாக இருக்கிறது. அதனால் அதற்கு உயிருள்ளது என்று பொருள்படாது.