TA/Prabhupada 0486 - பௌதிக உலகில் காமமாய் இருக்கும் சக்தி, ஆன்மிக உலகில் அன்பாய் இருக்கிறது.



Lecture -- Seattle, October 18, 1968

விருந்தினர்: யோகமாயாவை நாம் எவ்வாறு அடையாளம் காணலாம்? பிரபுபாதர்: உங்கள் கேள்வி என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தமால கிருஷ்ணன்: யோகமாயாவை நாம் எவ்வாறு அடையாளம் காணலாம், நமக்கு எப்படித் தெரியும் என்பதை அவர் அறிய விரும்புகிறார். பிரபுபாதர்: யோகமாயா? யோகமாயா என்றால் உங்களை இணைப்பது என்று பொருள். யோகா என்றால் இணைப்பு. நீங்கள் படிப்படியாக கிருஷ்ண உணர்வில் முன்னேறும்போது, ​​அதுதான் யோகமாயாவின் செயல். நீங்கள் படிப்படியாக கிருஷ்ணரை மறக்கும்போது, ​​அது மஹாமாயாவின் செயல். மாயா உங்கள் மீது செயல்படுகிறார். ஒருவர் உங்களை இழுத்துச் செல்கிறார், ஒருவர் உங்களை எதிர் வழியில் தள்ளுகிறார். யோகமாயா. உதாரணம் என்னவெனில், நீங்கள் எப்போதும் அரசாங்கத்தின் சட்டங்களின் கீழ் இருக்கிறீர்கள். அதனை நீங்கள் மறுக்க முடியாது. "அரசாங்கத்தின் சட்டங்களை பின்பற்ற நான் ஒப்புக்கொள்ளவில்லை" என்று நீங்கள் சொன்னால், அது சாத்தியமில்லை. ஆனால் நீங்கள் குற்றவாளியாக இருக்கும்போது, ​​நீங்கள் போலீஸின் சட்டங்களின் கீழ் இருக்கிறீர்கள், நீங்கள் பண்புள்ளவராக இருக்கும்போது, ​​நீங்கள் குடியியற்சட்டங்களின் கீழ் இருக்கிறீர்கள். சட்டங்கள் உள்ளன. எந்தவொரு சூழ்நிலையிலும், நீங்கள் அரசாங்கத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் ஒரு பண்புள்ள குடிமகனாக இருந்தால், நீங்கள் எப்போதும் குடியியற்சட்டத்தால் பாதுகாக்கப்படுவீர்கள். ஆனால் நீங்கள் அரசுக்கு எதிரானவுடன், குற்றவியல் சட்டம் உங்கள் மீது செயல்படும். எனவே மஹாமாயை, குற்றவியல் சட்டங்களைப் போன்றது, எப்போதும் மூவகைத் துன்பங்கள். எப்போதும் ஏதாவதொரு துன்பத்தில் தள்ளும். கிருஷ்ணரின் குடியியற் சட்டத் துறை, ஆனந்தாம்புதி- வர்தனம். நீங்கள் மகிழ்ச்சிப் பெருங்கடலில் ஆழ்ந்து கொண்டே இருப்பீர்கள். ஆனந்தாம்புதி- வர்தனம். அதுதான் வித்தியாசம், யோகமாயா மற்றும் மஹாமாயா. யோகமாயை என்பது ... யோகமாயை, உண்மையான யோகமாயை, கிருஷ்ணரின் அந்தரங்க சக்தி. அதுதான் ராதாராணி. மஹாமாயா என்பது பகிரங்க சக்தி, துர்கை. இந்த துர்கை, பிரம்மா-சம்ஹிதாவில் விளக்கப்பட்டுள்ளது, ஷ்ரிஷ்டி - ஸ்திதி - ப்ரளய - சாதனா - சக்திர் ஏகா சயெவா யஸ்ய புவனானி பிபர்த்தி துர்கா (பிரம்ம சம்ஹிதை 5.44) இந்த முழு பௌதிக உலகின் அதிகாரி துர்கையாவார். எல்லாம் அவளுக்குக் கீழ், அவளது கட்டுப்பாட்டில் நிகழ்கிறது. பிரகிருதி, பிரகிருதி என்பது சக்தி.. சக்தி, பெண்பால் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த பௌதிகவாதிகளைப் போலவே, அவர்களும் சில சக்தியின் கீழ் செயல்படுகிறார்கள். அந்த சக்தி என்ன? பாலுறவு வாழ்க்கை. அவ்வளவுதான். அவர்கள் மிகவும் தொந்தரவுக்குள்ளாகிறார்கள்: "ஓ, இரவில் நான் பாலுறவைப் பெறுவேன்." அவ்வளவுதான். அதுதான் சக்தி. யான் மைத்துனாதி - க்ரிஹமேதி - சுகம் ஹி துச்சம் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.45) அவர்களின் வாழ்க்கை பாலுறவை அடிப்படையாகக் கொண்டது. அவ்வளவுதான். அனைவரின் கடின உழைப்பும், உடலுறவில் உச்சம் பெறுகிறது. அவ்வளவுதான். இதுவே பௌதிக வாழ்க்கை. எனவே சக்தி. பௌதிக சக்தி என்றால் பாலுறவு. எனவே அதுவே சக்தி.. தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர், நீங்கள் பாலுறவை நிறுத்தினால், அவரால் வேலை செய்ய முடியாது. மேலும் அவர் பாலுறவை அனுபவிக்க முடியாதபோது, ​​அவர் போதைப்பொருளை எடுத்துக்கொள்கிறார். இதுவே பௌதிக வாழ்க்கை. எனவே சக்தி இருக்க வேண்டும். இங்கே பௌதிக உலகில், பாலுறவு தான் சக்தி, ஆன்மீக உலகில் அன்புதான் சக்தி. இங்கே அன்பு, பாலுறவாகத் தவறாக சித்தரிக்கப்படுகிறது. அது காதல் அல்ல; அது காமம். கிருஷ்ணரிடம் மட்டுமே அன்பு சாத்தியம், வேறு எங்கும் இல்லை. வேறு எங்கும் காதல் சாத்தியமில்லை. அது அன்பின் தவறான சித்தரிப்பு. அது காமம். எனவே காதலும் காமமும். காதல் என்பது யோகமாயா, காமம் என்பது மஹாமாயா. அவ்வளவுதான். சரியா?