TA/Prabhupada 0546 - இயன்ற அளவு அதிக புத்தகங்களை வெளியிட்டு - உலகம் முழுக்க விநியோகம் செய்க



His Divine Grace Srila Bhaktisiddhanta Sarasvati Gosvami Prabhupada's Appearance Day, Lecture -- Mayapur, February 21, 1976

பிரபுபாதர்: எவ்வளவு காலம் உயிர்வாழி இந்த பௌதீக உலகில் இருக்கிறாரோ, அவர் பௌதீக இயற்கையின் முக்குணங்களுடன் தொடர்புகொள்ள வேண்டும். அதே உதாரணம். நெருப்பு தீப்பொறி தரையில் கீழே விழுவது போல. எனவே தரையில், அவர்களுக்கு வெவ்வேறு நிலைமை காத்திருக்கிறது. ஒன்று உலர்ந்த புல், ஒன்று ஈரமான புல், மேலும் ஒன்று வெறும் தரை. ஆக இதேபோல், மூன்று நிலைகள் உள்ளன: சத்வ-குணம், ரஜோ-குணம், தமோ-குணம். சத்வ-குணம் என்றால், உலர்ந்த புல் மீது தீப்பொறி விழுவது போல், அது உலர்ந்த புல்லை எளிதில் பற்றவைக்கிறது. எனவே சத்வா-குணத்தில், பிரகாஷாவில், எளிதில் தீப்பற்றக்கூடிய குணம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தண்ணீரில், ஈரமான தரையில் விழுந்தால், அது முற்றிலும் அணைக்கப்படும். மூன்று நிலைகள். இதேபோல், நாம் இந்த பௌதீக உலகத்திற்கு வரும்போது, நாம் சத்வ-குணத்துடன் இணைந்தால், ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது. நாம் ராஜோ-குணத்தோடு இருந்தால் எந்த நம்பிக்கையும் இல்லை, மற்றும் தமோ-குணமும், எந்த நம்பிக்கையும் இல்லை. ரஜஸ்-தமஹ. ரஜஸ்-தமோ-பாவ காம- லோபாதயாஷ் சா யே. ரஜஸ்-தமஹ. நாம் ரஜோ-குணம் மற்றும் தமோ-குணத்துடன் இணைந்தால், நம் ஆசைகள் காமமாகவும் பேராசையாகவும் இருக்கும். காமா-லோபாதையஸ் சா. ததோ ரஜஸ்-தமோ-பாவ காம-லோபாதையஸ் சா மேலும் நம் சத்வ-குணம் தரத்தை அதிகரித்தால், இந்த காமா-லோபாதயா, இந்த இரண்டு விஷயங்களும் நம்மைத் தொடாது. காமா-லோபாவிலிருந்து நாம் சற்று ஒதுங்கியிருக்கலாம். எனவே சத்வ-குணத்தில் இருந்தால் ... இது ஸ்ரீமத்-பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது:

ஸ்ரீந்வாதாம் ஸ்வ - கதாஹ் கிருஸ்ணஹ்
புண்ய ஷ்ரவண கீர்த்தனஹ
ஹ்ரிதிய அந்தத் ஸ்தோ ஹை அபத்திராணி
விதுனோதி சுஹ்ரட்சதாம்
([[Vanisource:SB 1.2.17|SB 1.2.17)

எனவே இந்த மூன்று குணங்களையும் நாம் கடக்க வேண்டும், சத்வ-குணம், ரஜோ-குணம், தமோ-குணம், குறிப்பாக ரஜோ-குணம், தமோ-குணம். நாம் அதை செய்ய முயற்சிக்கவில்லை என்றால், ஆன்மீக முக்திக்கோ, அல்லது பௌதீகச் சிக்கலிலிருந்து விடுதலைக்கோ வாய்ப்பேயில்லை. ஆனால் கலி-யுகத்தில் நடைமுறையில் சத்வ-குணம் இல்லை, வெறுமனே ரஜஸ், ரஜோ-குணம், தமோ-குணம், குறிப்பாக தமோ-குணம். ஜகன்யா-குண-விருத்தி-சத்ஹ (BG 14.18). கலாவு ஸுத்ர -சம்பவஹ். எனவே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தை பரப்பினார், ஹரே கிருஷ்ண மந்திரம் கோஷமிட்டு கொண்டு.

எனவே இந்த இடத்திலிருந்து ஸ்ரீ சைதன்ய மகாபிரபு இந்த இயக்கத்தைத் தொடங்கினார், கிருஷ்ண உணர்வு இயக்கம், முழு இந்தியா முழுவதும், அவர் விரும்பியது பிரதிவிதே ஆச்சே யத நகராதி கிராம: "எனவே பல நகரங்களும் கிராமங்களும் இருப்பதால், இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் பரவ வேண்டும்." ( CB Antya-khaṇḍa 4.126) ) எனவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் இப்போது உங்கள் கையில் உள்ளது. நிச்சயமாக, 1965 இல் (1922), பக்திசித்தாந்த சரஸ்வதி தாக்கூர், இந்த தொடர்பில் நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பினார். அவர், அவருடைய எல்லா சீஷர்களிடமிருந்தும் விரும்பினார். குறிப்பாக அவர் "நீங்கள் இதைச் செய்யுங்கள்" என்று பல முறை வலியுறுத்தினார். நீங்கள் என்ன கற்றுக்கொண்டாலும், நீங்கள் ஆங்கில மொழியில் விரிவாக்க முயற்சியுங்கள். " 1933 இல், அவர் ராதா-குண்டத்தில் இருந்தபோது, எனது வணிக வாழ்க்கை தொடர்பாக நான் அந்த நேரத்தில் பம்பாயில் இருந்தேன். எனவே நான் அவரைப் பார்க்க வந்தேன், ஒரு நண்பர் பம்பாயில் சிறிது நிலம் கொடுக்க விரும்பினார், பம்பாய் கௌடிய மடத்தைத் தொடங்குவதற்காக. அவர் என் நண்பர். அது ஒரு நீண்ட கதை, ஆனால் அதை விவரிக்க விரும்புகிறேன், பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமியின் பணி. எனவே அந்த நேரத்தில் எனது ஆன்மிக சகோதரர் ஒருவர் கூட இருந்தார். எனது நண்பரின் நன்கொடை பற்றி அவர் எனக்கு நினைவூட்டினார், பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் பிரபுபாதர் உடனடியாக நிலத்தை பெற்றுக் கொண்டார். அவர் தொடர்ந்தார், "பல கோயில்களை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. நாம் சில புத்தகங்களை வெளியிடுவது அதை விட நல்லது." என்று கூறினார். அவர் கூறினார், "நாங்கள் எங்கள், கௌடிய மடத்தை உல்டடங்காவில் தொடங்கினோம். வாடகை மிகவும் குறைவாக இருந்தது, எங்களால் 2 முதல் 250 ரூபாய் வரை சேகரிக்க முடிந்தால், அது மிகவும் நல்லது. ஆனால் இந்த ஜே.வி. தத்தா இந்த கல், பளிங்கு கல் தாகூர்பாரியை கொடுத்ததனால், சீடர்களுக்கிடையில் எங்கள் போட்டி அதிகரித்துள்ளது, எனவே, எனக்கு அதில் விருப்பமில்லை. மாறாக, பளிங்கு கல்லை எடுத்து அதை விற்று சில புத்தகங்களை வெளியிட விரும்புகிறேன். " எனவே நான் அந்த விஷயத்தை எடுத்துக் கொண்டேன், அவரும் எனக்கு குறிப்பாக அறிவுறுத்தினார் "உங்களுக்கு பணம் கிடைத்தால், புத்தகங்களை வெளியிட முயற்சிக்க வேண்டும்" என்று . எனவே அவரது ஆசீர்வாதத்தால், உங்கள் ஒத்துழைப்பால் மிகவும் வெற்றிகரமாகிவிட்டது. இப்போது நம் புத்தகங்கள் உலகம் முழுவதும் விற்கப்படுகின்றன, அது மிகவும் திருப்திகரமான விற்பனையாகும். எனவே பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவதரித்த இந்த குறிப்பிட்ட நாளில், அவரது வார்த்தைகளை நினைவில் வைக்க முயற்சி செய்யுங்கள், நமது தத்துவத்தைப் பற்றி பல புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார், அது ஆங்கிலம் அறியும் பொதுமக்களுக்கு குறிப்பாக வழங்கப்பட வேண்டும், ஏனெனில் ஆங்கில மொழி இப்போது உலக மொழியாக உள்ளது. நாம், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம். எனவே எங்கிருந்தாலும் நாம் ஆங்கிலம் பேசுகிறோம், சில இடங்களைத் தவிர, இது புரிந்து கொள்ளப்படுகிறது. எனவே இந்த நாளில், குறிப்பாக, பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் அவதார நாளில், என்னுடன் ஒத்துழைக்கும் என் சீடர்களை நான் குறிப்பாகக் கோருகிறேன். அதாவது முடிந்தவரை புத்தகங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் விநியோகிக்க வழி செய்யுங்கள். அது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவையும், பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரையும் திருப்திப்படுத்தும். மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய ஸ்ரீல பிரபுபாதா.