TA/Prabhupada 0617 - புதிய சூத்திரம் எதுவிமில்லை - இது அதே வியாச பூஜை - அதே தத்துவம்



His Divine Grace Srila Bhaktisiddhanta Sarasvati Gosvami Prabhupada's Disappearance Day, Lecture -- Hyderabad, December 10, 1976

பிரபுபாதர்: நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. 1922 இல் இருந்ததைப் போலவே எனக்கு நினைவிருக்கிறது, இன்னும் அதே விஷயம்தான் நடக்கிறது. புதிதாக எதுவும் இல்லை. நாம் புதிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. வெறுமனே உள்ளதை உள்ளபடியே முன்வைப்போம்; அது வெற்றிகரமாக இருக்கும். நீங்கள் பார்க்கிறீர்கள். எனது எழுத்தின் உள்நோக்கம் ஒன்றே. "நாங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறோம், அனைவரும் வழிதவறுகிறார்கள்." ஆன்மாவைக் கொல்லும் இந்த நாகரிகம் நம்மை தவறாக வழிநடத்துகிறது. இது மிகவும் தவறாக வழிநடத்தும் நாகரிகம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். நம்முடைய ஆன்மீக அடையாளத்தைப் புரிந்துகொள்வதே வாழ்க்கையின் உண்மையான நோக்கம். இறைவனாகிய கிருஷ்ணருடனான நமது உறவைத் தேடுங்கள், அதுதான் நம்முடைய உண்மையான கடமை. ஆனால் இந்த நவீன நாகரிகம் வெவ்வேறு வழிகளில் நம்மை தவறாக வழிநடத்துகிறது. ஆகவே நான் எழுதினேன், "தவறாக வழிநடத்தப்பட்ட நாங்கள் அனைவரும் வழிதவறுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள், பிரபோ, எங்கள் தீவிர பிரார்த்தனை. எங்கள் முகத்தைத் திருப்ப, தங்களின் பாதங்களைத் தொழ, தாங்கள் கையாளும் வழிகளோ எத்தனை ஆச்சரியம், தெய்வத் திருவாளரே." இந்த பகுதியை அவர் மிகவும் பாராட்டினார்.

எனவே, எவ்வாறு நீரோட்டத்தை திருப்புவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். தற்போதைய நீரோட்டம்

புலனின்பம் ஆகும். பௌதிக வாழ்க்கை என்பது நீரோட்டமாக புலனின்பம் இருப்பதுவாகும். இந்த நீரோட்டம் மாற்றப்பட வேண்டும் - கிருஷ்ணரின் புலனின்பமாக. புலனின்பம் இருக்கிறது, ஆனால் பௌதிக நாகரிகத்தில் (தவறாக வழிநடத்தப்பட்ட நாகரிகத்தில்), புலன்களை திருப்திப்படுத்துதல் தனிப்பட்ட முறையில்செய்யப்படுகிறது. புலன்களை திருப்திப்படுத்துதல் கிருஷ்ணரை நோக்கி திருப்பப்படும்போது, ​​நம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். கோபியர்களைப் போல. மேலோட்டமாகப் பார்த்தால் கோபியர்கள் இளம்பையனான கிருஷ்ணரால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர்களின் புலன் திருப்திக்காக கிருஷ்ணருடன் நட்பை ஏற்படுத்தினர் என்று தெரிவது உண்மை அல்ல. உண்மை என்னவென்றால், கோபியர்கள் நன்றாக உடுத்திக் கொள்வார்கள், ஏனென்றால் அவர்களைப் பார்ப்பதன் மூலம் கிருஷ்ணர் திருப்தி அடைவார் என்பதற்காகவே, மாறாக அவர்களின் புலன் திருப்திக்காக அல்ல. பையனின் கவனத்தை ஈர்க்கவே பொதுவாக இளம் பெண்ணொருத்தி நன்றாக உடுத்திக் கொள்வாள். அதே விஷயம்தான் இங்கும் உள்ளது, ஆனால் அது கிருஷ்ணரின் புலன் திருப்திக்காகவேயொழிய, கோபியர்களினதுக்காக அல்ல. கோபியர்கள் எதையும் விரும்பவில்லை. மாறாக கிருஷ்ணர் திருப்தி அடைய வேண்டும். அதுதான் காமத்துக்கும் பிரேமைக்கும் உள்ள வித்தியாசம். பிரேமை இருக்கிறது, ஆனால், அது கிருஷ்ணரை நோக்கித் திருப்பப்படும்போது மட்டுமே சாத்தியமாகும். அதுதான் பிரேமை. அதையும் மீறி - அதற்கு அப்பால் அல்ல, அதற்குக் கீழே - எல்லாம் காமம். எனவே இதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். புலன்கள் நிறுத்தப்படுவதில்லை, ஆனால் புலன்களின் திருப்தி கிருஷ்ணரை நோக்கி செலுத்தப்படும்போது, ​​அதுவே பக்தி அல்லது பிரேமை. புலன் திருப்தி தன்னை நோக்கி செலுத்தப்படும்போது, ​​அது காமம். இது காமத்துக்கும் பிரேமைக்கும் உள்ள வித்தியாசம். ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரர் இந்த கலையை அறிந்திருந்தார், கிருஷ்ணரின் திருப்திக்காக நம் செயற்பாடுகளை எவ்வாறு திருப்புவது என்பதை. இதுவே கிருஷ்ண உணர்வு இயக்கம். எனவே நான்... எங்கள் முகத்தைத் திருப்ப, தங்களின் பாதங்களைத் தொழ, தாங்கள் கையாளும் வழிகளோ எத்தனை ஆச்சரியம், தெய்வத் திருவாளரே."

"கிருஷ்ணரை மறந்த வீழ்ந்த ஆத்மாக்கள் நாம்." நாம் ஏன் வீழ்ந்தோம்? ஏனென்றால் நாம் மறந்துவிட்டோம். கிருஷ்ணருடனான நம் உறவு நித்தியமானது. அது நித்தியமானதாக இல்லாவிட்டால், மேற்கத்திய மக்களாகிய தாங்கள் எப்படி கிருஷ்ணரின் பக்தராக இருக்க முடியும்? செயற்கையாக கிருஷ்ணரின் பக்தராக இருக்க முடியாது. உறவு நித்தியமாக இருக்கிறது. நித்ய-ஸித்₃த₄ க்ருஷ்ண-ப₄க்தி. செயல்முறை மூலம் அது இப்போது விழித்திருக்கிறது. ஷ்₂ரவணாதி₃-ஷு₂த்₃த₄-சித்தே கரயே உத₃ய (CC Madhya 22.107). அது விழித்திருக்கிறது. இளைஞனுக்கும் யுவதிக்கும் இடையிலான காதல், அது செயற்கையானது அல்ல. அது இருக்கிறது. ஆனால் சில சூழ்நிலைகளில், காதல் வெளிப்படுகிறது. இதேபோல், கிருஷ்ணர் மீதான நமது பிரேமை, கிருஷ்ணருடனான உறவு நித்தியமானது. ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய க்ருஷ்ண-தா₃ஸ (Cc. Madhya 20.108-109). ஆனால் நித்திய உறவு விழித்துக்கொள்ள வேண்டியதொரு சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். அதுதான் கலை. அதுவே விரும்பப்படுகிறது. "கிருஷ்ணரை மறந்துவிட்டு, வீழ்ந்த ஆத்மாக்களாகிய நாம், மாயையினால் மிக அதிக விலை கொடுக்கிறோம்." கிருஷ்ணரை மறந்துவிட்டதால், நாம் அதிக அதிகமாக வரி செலுத்துகிறோம். அந்த வரிவிதிப்பு என்ன? வரிவிதிப்பு என்பது நிவர்தந்தே ம்ருத்யு-ஸம்ஸார-வர்த்மநி (BG 9.3). இந்த மனித வாழ்க்கை கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதற்காகவே, ஆனால் கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக ஜட விஞ்ஞானம் எனப்படுவதை புலன் திருப்திக்காக புரிந்துகொள்கிறோம். இதுதான் நம் நிலைமை. கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதற்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆற்றல், புலன் திருப்திக்காக எதையாவது தயாரிப்பது எப்படி என்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதுதான் நடக்கிறது. இது மாயை. எனவே "மாயையினால் மிக அதிக விலை கொடுக்கிறோம்." கட்டண வரி. கிருஷ்ணரை மறந்துவிட்டதால் நாம் செலுத்துகிறோம். இப்போது அணு ஆயுதத்தை தயாரித்துள்ளோம் - ரஷ்யா, அமெரிக்கா, நீங்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் ஏற்கனவே அதிக விலை கொடுக்கிறார்கள். ஆயுத தயாரிப்பு நடக்கிறது. நாட்டின் வருமானத்தில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானவை இப்போது இந்த ஆயுதத்திற்காக செலவிடப்படுகின்றன..., பெரிதும். மற்ற நோக்கங்களுக்குப் பதிலாக, அது ஒவ்வொரு நாட்டினதும் இராணுவ பலத்திற்காக செலவிடப்படுகிறது. எனவே அதிக விலை கொடுக்கிறோம். மேலும் போர் நிகழும்போது இதற்கு வரம்பே இல்லை, இந்த அழிவுக்காக நாம் எவ்வளவு செலவு செய்கிறோம். ஏன்? ஏனென்றால் நாம் கிருஷ்ணரை மறந்துவிட்டோம். இது ஒரு உண்மை.

இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கியுள்ளனர், தேவையில்லாமல் நாய்களைப் போல சண்டையிடுகிறார்கள். இது பிரச்சினைகளை தீர்க்காது. இந்த பிரச்சனை தீரும், ஒரு தீர்மானத்தை வெளியிடுவார்களெனின், அதாவது, முழு உலகமும், இந்த உலகம் மட்டுமல்ல... கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-லோக மஹேஷ்₂வரம் (BG 5.29). கிருஷ்ணர்தான் உரிமையாளர், எனவே ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? உண்மையில் அவர்தான் உரிமையாளர். இந்த கிரகத்தை உருவாக்கியவர் யார்? நாம் படைத்தோமா நம் தந்தை படைத்தாரா? இல்லை கிருஷ்ணர் படைத்தார். ஆனால், நாம் கூறுகிறோம் "இந்த பகுதி அமெரிக்கா, இந்த பகுதி இந்தியா, இந்த பகுதி பாகிஸ்தான்" என்று. தேவையற்றது. இந்த உரிமைகோரலின் மதிப்பு என்ன? ஐம்பது அல்லது அறுபது அல்லது நூறு ஆண்டுகளுக்கு நாம் அதைக் கோரலாம், அதன் பிறகு, ஒரு உதை: "வெளியேறு." உங்கள் உரிமைகோரல் எங்கே? ஆனால் அவர்களுக்கு இந்த தத்துவம் புரியவில்லை. அவர்கள் சண்டையிடுகிறார்கள், அவ்வளவுதான், "இது என்னுடையது, இது எனது நிலம்," "இது எனது நிலம்." அவர்களுக்கு தெரியாது. கிருஷ்ணர் கூறினார், ததா₂ தே₃ஹாந்தர ப்ராப்தி꞉ (BG 2.13). "நீங்கள் இன்று அமெரிக்கர். எனவே நாளை, அமெரிக்காவிற்குள் கூட நீங்கள், ஒரு அமெரிக்க மாடாக அல்லது அமெரிக்க விலங்காக ஆகலாம். யாரும் உங்களை கவனிக்கப் போவதில்லை. உங்கள் அரசியலை யாரும் கவனிக்கப் போவதில்லை." ஆனால் இந்த கலை அவர்களுக்குத் தெரியாது. இந்த அறிவியல் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் மாயையின் கீழ் உள்ளனர். "நான் தொடர்ந்து அமெரிக்கனாக இருப்பேன்," என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், எனவே அமெரிக்க நலனுக்காக எனது நேரத்தை வீணடிக்கிறேன், போலி நலன். எந்த நலனும் இருக்க முடியாது. ப்ரக்ருதே꞉ க்ரியமாணாநி கு₃ணை꞉ கர்மாணி ஸர்வஷ₂꞉ (BG 3.27). எல்லாமே இயற்கையால் செய்யப்படுகின்றன, நாம் வெறுமனே தவறாக சிந்திக்கிறோம், அஹங்கார-விமூடா₄த்மா கர்தாஹம் இதி மந்யதே. இந்த மாயைதான் இருக்கிறது. "கிருஷ்ணரை மறந்துவிட்டு, வீழ்ந்த ஆத்மாக்களாகிய நாம், மாயையினால் மிக அதிக விலை கொடுக்கிறோம்." நாம் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். "சுற்றி இருள், ஒன்றுமே தெரியவில்லை. ஒரே நம்பிக்கை, தெய்வத்திருவாளரே தாங்கள்தான்." இந்த செய்தி. வெறுமனே நாம் இருளில் இருக்கிறோம்.

எனவே பின்னர் மீண்டும் கலந்துரையாடுவோம். இப்போது தான்... இப்போது நேரம் என்ன? ஹ்ம்?

பக்தர்கள்: 08:45.

பிரபுபாதர்: ஆம். எனவே மீண்டும் கலந்துரையாடுவோம். அதே விஷயம்தான், அது கிருஷ்ணரால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது, பரம்பரை அமைப்பு மூலம் இந்த தத்துவத்தை நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது₃꞉ (BG 4.2). எனவே இந்த பரம்பரை அமைப்பை வைத்திருங்கள். இந்த வியாச-பூஜை என்பது பரம்பரை அமைப்பு. வியாச-பூஜை என்றால் இந்த பரம்பரை அமைப்பை ஏற்றுக்கொள்வது. வியாசர். குரு வியாசதேவரின் பிரதிநிதி, ஏனெனில் அவர் எதையும் மாற்றுவதில்லை. வியாச-பூஜை என்றால்... வியசாதேவர் சொன்னதை தான், உங்கள் குருவும் சொல்வார். "பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துவிட்டன; எனவே நான் உங்களுக்கு ஒரு புதிய சூத்திரத்தை தருகிறேன் என்றில்லை. ஒரு புதிய சூத்திரமும் இல்லை. அதே வியாச-பூஜை, அதே தத்துவம். வெறுமனே நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், பின்னர் நம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய! (முடிவு)