TA/Prabhupada 0729 – சன்னியாசி சிறு தவறு செய்தாலும், அது ஆயிரம் மடங்கு பெரியதாய் கருதப்படும்



Arrival Address -- London, March 8, 1975

பிரபுபாதர்: எனவே பக்தி வினோத தாக்கூர் ஜய் ஸகல் பிபோத்... என்று பாடியுள்ளார். (பக்கத்தில்), இது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஜாய் ஸகல்'பிபோத், காஇ பக்திவிநோத், ஜகோன் அமி ஓ-நாம் கை, ராதா-க்ரு'ஷ்ண போலோ போலோ, போலோ ரே ஸோபாஇ. எல்லோரையும் ஹரே கிருஷ்ண மந்திரம் அல்லது ராதா - கிருஷ்ணா என்று ஜபிக்க வேண்டி சைதன்ய மஹாபிரபு பிரச்சாரம் செய்கிறார். எனவே பக்தி வினோத தாக்கூர், " நான் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கும் போது எல்லா ஆபத்துகளும் விலகிவிடுகிறது" என்று கூறுகிறார். ஆக, இந்த இடம், இந்த ஜட உலகம் ஆபத்தான இடம். பதம்' பதம்' யத் விபதாம். விபதம் என்றால் ஆபத்து, பதம் பதம் என்றால் ஒவ்வொரு அடியிலும். ஜட உலகத்தில் அமைதியான நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்க்க முடியாது. அது சாத்தியமல்ல. மேலும் ஒரே தீர்வு கிருஷ்ணரின் தாமரை பாதங்களின் அடைக்கலத்தை எடுத்துக் கொள்வதுதான்... முராரி. முராரி என்றால் கிருஷ்ணர்.

ஸமாஷ்ரிதா யே பத-பல்லவ-ப்லவம்'
மஹத்-பதம்' புண்ய-யஷோ முராரே:
பவாம்புதிர் வத்ஸ-பதம்' பரம்' பதம்'
பதம்' பதம்' யத் விபதாம்' ந தேஷாம்
(ஸ்ரீ.பா. 01.14.58)

எனவே எப்போதுமே..... நீங்கள் ஒரு நல்ல படகில் இருந்தால் கூட, அது தண்ணீரில் உள்ளதால், படகு அமைதியாக எந்த தொந்தரவும் இன்றி இருக்கும் என்று நீங்கள் நினைக்க முடியாது. எனவே ஜட உலகம் எப்போதும் சச்சரவுகள் நிறைந்த இடம். எனவே நாம் நம்மை எப்போதும் நம்முடைய நிலையில், தொடர்ந்து ஹரே கிருஷ்ணா ஜபம் செய்து வந்தால், பிறகு ஆபத்துகள் முடிந்துவிடும். ஆபத்துகள் கூட நிரந்தரமானதல்ல. அவையும் கால மாற்றத்தைப் போல வந்து செல்லும். சில சமயம் மிகவும் வெப்பமாக இருக்கிறது; சில சமயம் மிகுந்த குளிராக இருக்கிறது. எனவேதான் கிருஷ்ணர் அறிவுறுத்தியுள்ளார் -ஆகமாபாயினோ 'நித்யாஸ் தாம்'ஸ் திதிக்ஷஸ்வ பாரத (ப.கீ 2.14). எனவே ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை உச்சரிப்பதில் இருந்து திசை திரும்பாது இருங்கள். மேலும் சில ஆபத்துகள் உள்ளன எனும் காரணத்தால் அச்சம் கொள்ளாதீர்கள் (தெளிவாக கேட்கவில்லை) கிருஷ்ணரின் தாமரைப் பாதங்ளில் அடைக்கலம் கொண்டு, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்வீர், பிறகு எல்லா ஆபத்தும் முடிந்து போகும்.

ஆனால் நாம் ஆபத்தான் நிலைகளை உருவாக்கக் கூடாது. ஏற்கனவே இங்கு ஆபத்து இருக்கிறது. ஏனெனில், சைதன்ய மகாபிரபு கூட ஆன்மீக வாழ்க்கையை பற்றி வெகு கவனமாக இருந்தார். ஸந்ந்யாஸீர அல்ப சித்ர பாஹு கோரி மனே. பிறர் வேண்டுமானால் சட்டத்தை மீறலாம், மேலும் பலர் பாவச் செயல்களையும் செய்யலாம். ஆனால் யாரும் அதை பெரிதாக கருதுவதில்லை. ஆனால் ஒரு ஆன்மீக இயக்கமோ அல்லது ஒரு சன்னியாசியோ, சிறிய அபராதம் செய்தால் கூட, அது ஆயிரம் மடங்கு பெரிதாக பார்க்கப்படும். எனவே நாம் எந்த அபராதத்தையும் செய்து விடாதபடி மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அவை பொது மக்களின் கண்களுக்கு பெரிதாக படலாம். காரணம் நாம் பிரச்சாரம் செய்கிறோம். நாம் பிரச்சாரம் செய்கிறோம் மேலும் ஒரு அசுரத்தனமான கட்சியும் எப்போதும் உண்டு, அவர்கள் நம்மை கஷ்டப்படுத்த பார்ப்பார்கள். இது இயல்புதான். இரண்யகசிபு கூட, பிரகலாத மகாராஜாவின் தந்தையாக இருந்த போதும், அவரை கஷ்டத்தில் ஆழ்த்தினான். ஆனால் நாம் உண்மையாக தொடர்ந்து ஜபத்தில் ஈடுபட்டோம் என்றால் , இந்த ஆபத்துகள் முடிந்துவிடும். பயப்படாதீர்கள். ஒழுக்கக் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதையும், தினசரி பக்தி நடவடிக்கைகளை, நிகழ்ச்சிகளையும் நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்த அதனைச் செய்யுங்கள். கிருஷ்ணர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், படிப்படியாக எல்லாம் சரியாகும்.

எனவே, இன்றைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். இப்போது நேரம் முடிந்து விட்டது. விக்ரகங்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். நாம் தள்ளிப் போடக்கூடாது. சரி ஹரே கிருஷ்ண.

பக்தர்கள்: ‌ ஜெய பிரபுபாதா.