TA/Prabhupada 0767 - தத: ருசி:. பிறகு சுவை காண்பது. இந்த சங்கத்தின் வெளியே வாழ விரும்பாத நிலை. சுவை மாரிவிடும்.



Lecture on SB 6.1.39 -- Los Angeles, June 5, 1976

ப்ரபுபாதா: கடவுளின்மீது நேசத்தை ஒரே விநாடியில் உண்டாக்க முடியாது. நீங்கள் கபடமற்றவராக இருந்து, கடவுளும் உங்கள்மீது மிக ப்ரஸன்னமாக இருந்தால், அது சாத்தியம். அவரால் தரமுடியும். அவரால் உடனையே தரமுடியும். அது சாத்தியம். ஆனால் அது அரிதானது. சாதாரணமாக, இது தான் செயல்முறை: ஆதௌ ஷ்ரத்தா தத: ஸாது ஸங்கோ. எப்படி நீங்கள் எல்லோரும் இங்கே இந்த கோவிலுக்கு வந்திருக்கிறீர்கள், அப்படி தான். நம் எல்லோரீலும் குஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. அது தான் ஷ்ரத்தா, ஆதௌ ஷ்ரத்தா. சுற்றுப்புறத்தில் ஆயிரக்க்ணக்காநோர் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் வருவதில்லை ? இது தான் ஆரம்பம். உங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கு, ஷ்ரத்தா. நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆதௌ ஷ்ரத்தா தத : ஸாதூ ஸங்கோ. பிறகு நீங்கள் தொடர்ந்து வந்தால்... நாம் என்ன செய்கிறோம் ? நாம் வேதங்களின் பாடங்களை கற்க சங்கம் ஏற்றுக் கொள்கிரோம். இது தான் ஸாதூ ஸங்க. குடி கடையில் ஒரு விதமான சங்கம் கொள்கிரோம், ஹோட்டலில் நாம் ஒரு வகையான சங்கம் செய்கிரோம், க்ளப்பில் சில உரவுகலள் வைக்கின்றோம், வெவ்வேரு இடங்களில். அதுபோல் இதுவும் ஒரு இடம், இங்கேயும் சங்கம் தான். இதற்கு பெயர் ஸாதூ ஸங்கம். பக்தர்களுடைய சங்கம். ஆதௌ ஷ்ரத்தா தத: ஸாதூ ஸங்கோ. (சை சரிதம் மத்திய பாகம் 23.14-15). பிறகு அதில் முதுமை அடைந்த உடன், ஒருவன் பக்திசாரமான பணிகளை செய்ய விரும்புகிரான். பஜன-க்ரியா. பிறகு எப்பொழுது பஜன க்ரியா நிலை அடைவீர்களோ, விரைவிலேயே, தேவையில்லாத முட்டாள்தனம் எல்லாம் காணாமல் போயிவிடும். கட்டடுப்பாடற்ற உடலுறவுகள் ஒழியும், போதைப் பழக்கம் ஒழியும், குடி போதை தொலையும், சூதாட்டப் பழக்கம் ஒழியும். எல்லாம் முடிந்துவிடும். எப்பொழுது "அநர்த்த-நிவ்ருத்தி ஸ்யாத் ", அப்பொழுது எல்லா கெட்ட குணங்களும் ஒழியும். பிறகு நிஷ்டா, திடமான நம்பிக்கை, எதனாலும் மனம் பாதிக்காமல் இருப்பது. ததோ நிஷ்டா தத: ருசி:. பிறகு சுவை காண்பது. இந்த சங்கத்தின் வெளியே வாழ விருப்பம் நிலை. சுவை மாரிவிடும். ததோ நிஷ்டா தத: ருசிஸ், ததாஸக்திஸ், பிறகு கவர்ப்படுவது. அகன்பிறகு பாவ. பாவ என்றால் பரவசம். " ஓ, க்ருஷ்ணா." பிறகு நேசம். வெவ்வேரு நிலைகள் உள்ளன. ஆகவே... நிஜமான தர்மம் எனறால் நேசம், கடவுளை எப்படி நேசிப்பது. அது தான் உண்மையான தர்மம்... என்ன அது? யதோ பக்திர்... ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6). வெவ்வேரு வகையான தர்மம் அதாவது மதங்கள் உள்ளன, ஆனால் உண்மையில் தர்மம் என்றால் நாம் எவ்வாறு கடவுளை நேசிக்க கற்றோம் என்பதே. அவ்வளவு தான். வேரு எதுவும் இல்லை. சடங்குகள் அல்ல, முறைகள் அல்ல, வேறு எதுவும் அல்ல. உன் இதயம் எப்பொழுதும் கடவுளுக்காக ஏங்கினால், அது மிக சரியான மதம். அது மிக சரியான மதம். அதனால் சைதன்ய மஹாப்ரபு கூருகிறார், ஷூன்யாயிதம் ஜகத் ஸர்வம் : " ஓ, க்ருஷ்ணர் இல்லாமல், இந்த உலகம் வெறுமையாக நான் உணர்கிறேன்." வெருமை, ஆம். எனவே நாம் அந்த நிலையை அடைய வேண்டும். நிச்சயமாக, நம் எல்லோராலும் இது சாத்தியம் அல்ல, ஆனால் சைதன்ய மஹாப்ரபு, எப்படி மிக சிறந்த தர்மத்திற்கு உட்பட்டவன் ஆகலாம் என்பதை நமக்கு காட்டி இருக்கிறார். என்னவென்றால் எப்பொழுதும், "ஓ, க்ருஷ்ணர் இல்லாமல் எல்லாம் வெருமை.", இவ்வாரு உணர்வதே. ஸூன்யாயிதம் ஜகத் ஸர்வம் கோவிந்த விரஹேன மே. அது தான் தர்மம், அது தான் கர்மம். ஆகவே விஷ்ணு தூதர்கள் யமதூதர்களை சோதித்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு தர்மத்தின் அர்த்தம் புரிகிறதா என்று. தர்மத்தை நம்மால் உருவாக்க முடியாது. தர்மம் என்றால் இந்து தர்மம், முஸ்லிம் தர்மம், கிரித்துவ தர்மம், இந்த தர்மம், அந்த தர்மம் கிடையாத. அது எல்லாம் நம்பிக்கை வேருபாடு கொண்ட தனிக் குழு சார்ந்தோரின் புரிதலாக இருக்கலாம். ஆனால் உண்மையில் தர்மம் என்றால் எவ்வாறு நாம் கடவுளை நேசிக்க கற்றுள்ளோம் என்பது தான். மிக்க நன்றி.

பக்தர்கள் : ஜய ப்ரபுபாதா.