TA/Prabhupada 0783 - இந்த பௌதிக உலகிற்கு நாம் அனுபவிக்கும் திறனோடு வந்துள்ளோம் - ஆகையால் கீழே விழுந்துள்ளோ



Lecture on BG 1.21-22 -- London, July 18, 1973

இப்போது, ​​கிருஷ்ணர் இங்கே அச்சுதா என்று அழைக்கப்படுகிறார். ச்சுதா என்றால் விழுந்தது, மற்றும் அச்சுதா என்றால் விழாதது என்று பொருள். நாம் விழுந்ததைப் போல. நாம் வீழ்ந்த நிபந்தனைக்குரிய ஆத்மாக்கள் ஆவோம். இந்த பௌதிக உலகில் நாம் ஒரு அனுபவிக்கும் ஆவியுடன் வந்துள்ளோம். எனவே நாம் வீழ்ந்துவிட்டோம். ஒருவர் தனது நிலையை சரியாக வைத்திருந்தால், அவர் விழுவதில்லை. இல்லையெனில் அவர் இழிவுபடுத்தப்படுகிறார். அது வீழ்ந்த நிலை. எனவே இந்த பௌதிக உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், பிரம்மாவிலிருந்து தொடங்கி சிறிய சிறிய எறும்பு வரை, அவர்கள் அனைவரும் விழுந்தவர்கள், விழுந்த நிபந்தனை ஆத்மாக்கள். அவர்கள் ஏன் வீழ்ந்தார்கள்?

க்ருஷ்ண புலிய ஜீவ போக வஞ்ச கரே
பாஷதே மாயா தாரே ஜாபடியா தரே
(ப்ரேம-விவர்த)

வீழ்ச்சி என்பது இந்த பௌதிக ஆற்றலின் பிடிக்குள்ளே உயிரினங்கள் இருக்கும்போது. அது விழுந்தது என்று அழைக்கப்படுகிறது. ஒரு மனிதன் போலீஸ் காவலில் இருக்கும்போது, அவர் ஒரு குற்றவாளி, அவர் வீழ்ந்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் நல்ல குடிமகன் எனும் நிலையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதேபோல், நாம் அனைவரும் கிருஷ்ணரின் அங்க உறுப்புகள். மமைவாம்ஸோ ஜீவ-பூத (ப.கீ 15.7). எனவே ஒரு அங்க உறுப்பாக, க்ரிஷ்ணருடன் வாழ்வதே நம் இருப்பிடம். என் விரல் என் உடலின் பகுதி என்பது போலவே. விரல் இந்த உடலுடன் இணைந்திருக்க வேண்டும். இந்த விரல் துண்டித்து விழும்போது, அது விரல் என்றாலும், அது அதற்கு மேல் முக்கியமல்ல அது முன்பு இந்த உடலுடன் இணைக்கப்பட்டபோது இருந்தது போல். ஆகவே, உயர்ந்த இறைவனின் சேவையுடன் இணைக்கப்படாத எவரும் வீழ்ந்தவர் ஆவார். இதுதான் முடிவு.

ஆனால் கிருஷ்ணர் வீழ்ச்சியடையவில்லை. ஏனென்றால் அவர் நம்மை மீட்டெடுக்க வருகிறார்.

யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
(ப.கீ 4.7)

"இதில் முரண்பாடுகள் இருக்கும்போது நான் தோன்றுகிறேன்" என்று கிருஷ்ணர் கூறுகிறார், நான் சொல்வது, உயிரினங்களின் தொழில் கடமைகள்." தர்மஸ்ய க்லானிர் பவதி . நாம் தர்மத்தை "மதம்" என்று மொழிபெயர்க்கவில்லை. ஆங்கில அகராதியில் மதம், என்பது "ஒரு வகையான நம்பிக்கை." விசுவாசத்தை மாற்றலாம், ஆனால் தர்மம் என்பது மாற்ற முடியாத ஒரு சொல். அது மாற்றப்பட்டால், அதை செயற்கை என புரிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் போல. நீர் திரவம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில நேரங்களில் நீர், மிகவும் கடினமான, பனியாகவும் மாறும். அது தண்ணீரின் இயல்பான நிலை அல்ல. செயற்கையாக, அதிகப்படியான குளிர் காரணமாக அல்லது செயற்கை முறையில் நீர் திடமாகிறது. ஆனால் நீரின் உண்மையான நிலை திரவம்.

ஆகவே, நாம் இறைவனின் சேவையிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும்போது, இது இயற்கைக்கு மாறானது. இயற்கைக்கு மாறானது. இயற்கையான நிலைப்பாடு என்னவென்றால், நாம் இறைவனின் சேவையில் ஈடுபட வேண்டும். அதுவே நமது இயல்பான நிலை. ஆகையால், வைஷ்ணவ கவி, க்ருஷ்ண புலிய ஜீவ போக வஞ்ச கரே (ப்ரேம-விவர்த) என்று கூறுகிறார். ஒரு உயிரினம் கிருஷ்ணரை மறக்கும்போது, கிருஷ்ணரின் நிலையை மறந்துவிடும்போது... கிருஷ்ணரின் நிலை.....போக்தாரம் யஜ்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்வரம்: என்று கிருஷ்ணர் சொல்கிறார் (ப.கீ 5.29) "நான் உரிமையாளர், நான் அனுபவிப்பவன். " இது தான் கிருஷ்ணரின் நிலைப்பாடு. அவர் ஒருபோதும் அந்த நிலையில் இருந்து விழுவதில்லை. கிருஷ்ணர் அனுபவிப்பவர். அவர் எப்போதும் அந்த நிலையை கொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் கீழே விழுவதில்லை. அவர் ஒருபோதும் அனுபவிக்கப்படும் நிலைக்கு வரமாட்டார். அது சாத்தியமில்லை. நீங்கள் கிருஷ்ணரை அனுபவிக்கப்படும் நிலைக்கு கொண்டு வர விரும்பினால், நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள். அனுபவிக்கப்படுவது என்பது கிருஷ்ணரை முன்னால் வைத்திருப்பது, உணர்வு திருப்தியின் சில லாபத்தை நான் பெற விரும்புகிறேன் என்பது. அது நமது இயற்கைக்கு மாறான நிலைப்பாடு. கிருஷ்ணர் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். கிருஷ்ணர் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். கிருஷ்ணரை அனுபவிக்க முடியாது. அவர் எப்போதும் அனுபவிப்பவர். அவர் எப்போதும் உரிமையாளர். எனவே க்ருஷ்ண புலிய ஜீவ என்றால் கிருஷ்ணரின் இந்த நிலையை நாம் மறக்கும்போது, அவர் மிக உயர்ந்த அனுபவிப்பவர், அவர் மிக உயர்ந்த உரிமையாளர் என்பதை மறந்தால்... இது மறதி என்று அழைக்கப்படுகிறது. "நான் அனுபவிப்பவன், நான் உரிமையாளன்" என்று நினைத்தவுடன், இது எனது வீழ்ச்சியடைந்த நிலை. க்ருஷ்ண புலிய ஜீவ போக வஞ்ச கரே (ப்ரேம-விவர்த). அப்போது ஜாபடியா தரே - மாயா உடனடியாக நம்மை பற்றிக்கொள்கிறது.