TA/Prabhupada 0799 - முழுமையான சுதந்திரம் - நிரந்தரமான இருப்பு, சந்தோஷம் மற்றும் நிறைவான அறிவு



Arrival Speech -- Stockholm, September 5, 1973

என்னைக் கருணையுடன் வரவேற்றமைக்கு நான் உங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த ஸ்வீடன் நாட்டிற்கு நான் வருகை தந்திருப்பது இதுவே முதல் முறை. இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் படிப்படியாக உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் பொருளை புரிந்து கொள்வது சிறிது கடினம் தான். காரணம் இது முழுமையாக ஆன்மீகத் தளத்தில் அமைந்துள்ளது. பொதுவாக மக்கள் ஆன்மீகத் தளம் என்றால் என்ன என்று புரிந்துகொள்வதில்லை. நாம் இரு விஷயங்களின் கலவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் என்பதைப்போல உயிர்வாழிகளாகிய நாம் ஒவ்வொருவரும், தற்போதைய நொடியில் ஆன்மீகம் மற்றும் பௌதிகம் இவற்றின் கலவையே. பௌதிகத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் தொடர்ந்த பௌதிக சகவாசத்தின் காரணமாக, நம்மால் ஆன்மீகம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியும். அதுதான் ஒரு உயிரற்ற உடலையும் உயிர் வாழியையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. அதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு மனிதன் இறந்து விட்டால்... என் தந்தை அல்லது வேறு யாரோ என் உறவினர் இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். " என் தந்தை இனி இல்லை. அவர் போய் விட்டார்" என்று நாம் புலம்புகிறோம். ஆனால் அவர் எங்கு போனார்? தந்தை இன்னும் படுக்கையில் தான் படுத்து உள்ளார். பிறகு ஏன் நீங்கள் " என் தந்தை போய்விட்டார்" என்று கூறுகிறீர்கள்? யாராவது "உங்கள் தந்தை படுக்கையில் தான் படுத்திருக்கிறார். நீங்கள் ஏன் உங்கள் தந்தை போய்விட்டதாக அழுது கொண்டிருக்கிறீர்கள்? அவர் போகவில்லை. அவர் அங்கே தான் படுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்தத் தூக்கம், நாம் சாதாரணமாக தூங்கும் தூக்கம் அல்ல. அந்தத் தூக்கம் என்றால் நிரந்தரமான தூக்கம். எனவே உண்மையில், யார் நம் தந்தை என்று பார்க்கக்கூடிய கண்கள் நம்மிடம் இல்லை என் தந்தை உயிரோடு இருந்தபோது, யார் என் தந்தை என்பதே எனக்கு தெரியவில்லை; எனவே உண்மையான தந்தை போனபிறகு, ""என் தந்தை போய்விட்டார் என்று நாம் அறிகிறோம்." எனவே அதுதான் ஆத்மா. இந்த உடலிலிருந்து யார் வெளியே சென்றாரோ அவர் தான் ஆத்மா; இல்லை என்றால் ஏன் அவர் "என் தந்தை போய்விட்டார்" என்று கூற வேண்டும். அந்த உடல் இங்கேயே இருக்கிறது.

எனவே நாம் முதலில் ஆன்மீக ஆத்மாவிற்கும், பௌதிக உடலுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் ஆன்மீக ஆத்மா என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டோமானால், பிறகு நாம் இந்த ஆன்மீக இயக்கம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளலாம். இல்லையென்றால், வெறுமனே நம்முடைய பௌதிக புரிதலை கொண்டு ஆன்மீக வாழ்க்கை அல்லது ஆன்மீகத் தளம் என்றால் என்ன என்று புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஆனால் இது உள்ளது. தற்போதைய நொடியில் நாம் வெறுமனே உணரத்தான் முடியும். ஆனால் ஆன்மீக உலகம் ஆன்மீக வாழ்க்கை என்பது உள்ளது. மேலும் இந்தப் ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன?. பூரண விடுதலை. பூரண விடுதலை. நித்தியம், ஆனந்தம் மற்றும் பூரண அறிவு. இதுதான் ஆன்மீக வாழ்க்கை. வாழ்வின் உடல் தளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆன்மீக வாழ்க்கை என்றால் நித்தியம், பூரண அறிவு மற்றும் ஆனந்தமான வாழ்க்கை. மேலும் இந்த பௌதிக வாழ்க்கை என்றால் தற்காலிகமான, அறியாமையில் உள்ள முழுவதும் துன்பத்தில் உள்ள வாழ்க்கை. இந்த உடல் என்பதன் பொருள், இது நிரந்தரமாக இருக்காது, மேலும் இது எப்பொழுதும் துன்பத்தில் இருக்கும். மேலும் அதில் எந்த ஆனந்தமும் இல்லை.