TA/Prabhupada 0835 - பன்றி - நாயைப்போல கடுமுழைப்பை ஏற்பதால், நவீன அரசியல்வாதிகள் கடமையில் மன அழுத்தம் கொள்க



Lecture on SB 5.5.33 -- Vrndavana, November 20, 1976

பிரபுபாதர்: த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (ப.கீ 4.9). கிருஷ்ண தத்துவத்தை புரிந்துக் கொண்டவர் க்ருஷ்ண தத்த்வத:, அவர் உடனடியாக விடுவிக்கப்பட்ட நபர். அவர் ஆன்மீக உலகிற்கு மாற்றப்படுவதற்கு தகுதியானவர். த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி. புனர் ஜன்ம... கிருஷ்ணரைப் புரிந்து கொள்ளாத ஒருவர், அவர் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும். நிவர்தந்தே ம்ருத்யு-ஸம்ஸார-வர்த்மனி (ப.கீ 9.3). நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ளாவிட்டால்- ஹரிம் வினா ந ம்ருதிம் தரந்தி - நீங்கள் மரணம், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோயிலிருந்து தப்ப முடியாது. அது சாத்தியமில்லை.

எனவே உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக வெற்றிபெற விரும்பினால், நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவே கிருஷ்ண பக்தி இயக்கம். பின்னர் உங்கள் வாழ்க்கை வெற்றி பெறுகிறது. கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள, வேறு எந்த முறையும் உங்களுக்கு உதவாது. கிருஷ்ணர் சொன்னார், பக்த்யா மாம் அபிஜாநாதி (ப.கீ 18.55). "யோக செயல்முறை அல்லது கர்மா, ஜ்ஞான மூலம்" என்னை புரிந்து கொள்ள முடியும்" என்று ஒருபோதும் சொல்லவில்லை. நவீன அரசியல்வாதிகள், அவர்கள் கர்மாவை வலியுறுத்துகிறார்கள் ஏனென்றால் அவர்கள் பன்றிகள் மற்றும் நாய் போன்ற கடினமாக உழைக்க விரும்புகிறார்கள். அவர்கள் கர்ம-யோகா பற்றி நினைக்கிறார்கள் ... எனவே கர்ம-யோகா நல்லது, ஆனால் கர்மிகள் மூடஹாக்கள். உணர்வு திருப்திக்காக இரவும் பகலும் வெறுமனே உழைப்பவர்கள், அவர்கள் பன்றிகள் மற்றும் நாய்களை விட சிறந்தவர்கள் அல்ல. அவர்கள் நல்லன அல்ல. ஆனால் கர்ம-யோகா வேறு விஷயம். கர்ம-யோகா என்றால் எதையாவது தயாரிப்பது, ஏதாவது வேலை செய்வது போன்றவற்றில் பந்தம் கொண்டிருப்பது. எனவே கிருஷ்ணர் சொன்னார் "ஆம், நீங்கள் செய்ய முடியும், ஆனால்," யத் கரோஷி யஜ் ஜுஹோஷி யத் அஷ்நாஸி யத் தபஸ்யஸி குருஷ்வ தத் மத்... (ப.கீ. 9.27), "இதன் பலன்களை நீங்கள் எனக்குக் அளிக்க வேண்டும். " அனாஷ்ரித: கர்ம-பலம் கார்யம் கர்ம கரோதி ய:, ஸ ஸந்ந்யாஸீ (ப.கீ. 6.1).

ஆகவே, அவரது கர்மாவின் பலனை எடுத்து கொள்ளாத எவரும் சந்நியாசி. நீங்கள் சம்பாதித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம் ... நீங்கள் ஒரு தொழிலதிபர், நீங்கள் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளீர்கள் - ஆனால் அதை கிருஷ்ணருக்கு கொடுங்கள். அனாஷ்ரித: கர்ம-பலம். இல்லையெனில், இந்த இரண்டு லட்சம் ரூபாயை நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அதை எடுக்கவில்லை என்றால், அதை தூக்கி எறிவீர்களா? "இல்லை, நான் ஏன் அதை வீச வேண்டும்? இது கிருஷ்ணருக்கு பயன்படுத்தப்பட வேண்டும்." எனவே அவற்றை விடுங்கள் ... இந்த பௌதிக உலகில் பணம் சம்பாதிக்க மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். நாம் நடைமுறையில், குறிப்பாக மேற்கத்திய உலகில் பார்க்கலாம். ஆனால் அவர்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தைத் தூண்டுவதற்காக தங்கள் லாபத்தை உபயோகித்தால், பின்னர் அவர்களின் பணம் இனி அணுகுண்டை வெளியிடுவதில் பயன்படாது. இல்லையெனில் அது அணுகுண்டை வெளியிட பயன்படும். நான் உன் தலையை உடைப்பேன், நீ என் தலையை உடைப்பாய். நாம் இருவரும் முடிந்து போவோம்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய பிரபுபாதா.