TA/Prabhupada 0897 - நீ கிருஷ்ண பக்தியில் தொடர்ந்து இருந்தால், அது உனக்கு நற்பலனை தரும்



730417 - Lecture SB 01.08.25 - Los Angeles

பெயரளவில் தண்டனை அளிப்பது போல் தான். சிலசமயம் நீதி மன்றத்தில், ஓரு செல்வாக்குள்ளவன் குற்றவாளியாக இருப்பான். ஒருவேளை நீதிபதி 1,00,000 ரூபாய் கேட்டால் அவன் உடனேயே தரக்கூடியவன். ஆனால் அவர் அவனிடம் "நீ ஒரு பைசா கொடுத்தால் போதும்." என்பார். ஏனென்றால் அதுவும் தண்டனை தான் ஆனால் குறைவானது. அதுபோலவே நாம் கடந்தகாலத்தில் செய்த செயல்களின் பலனாக நாம் துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அது உண்மை. நம்மால் அதை தவிர்க்க முடியாது. கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பீஜம் (பிரம்ம ஸம்ஹிதா 5.54). ஆனால் பக்தி தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள், துன்பங்கள் குறைக்கப்படுகின்றன. உதாரணமாக கொலை செய்யப்படவேண்டியன் மரணம் அடைவதற்கு மாறாக, கத்தியால் விரலில் ஒரு சிறிய காயத்தை மற்றும் பெறுகிறான். இவ்வாறு, கர்மாணி நிர்தஹதி கிந்து ச... பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள்: அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி (பகவத் கீதை 18.66). கிருஷ்ணர் உறுதி அளிக்கிறார்: "பாவங்கள் நிறைந்த வாழ்வின் எதிர்வினைகளிலிருந்து நான் உனக்கு அபயம் அளிப்பேன்." ஆக மிக கொடூரமான குற்றங்கள் காரணமாக இருந்தாலும்... சிலசமயம் அப்படி நிகழ்கிறது. தூக்குதண்டனைக்கு பதிலாக, அவன் விரல் மட்டும் கத்தியால் சிறிதளவு துண்டிக்கப்படுகிறது. இது தான் நிலைமை. ஆக நாம் எதற்காக அபாயத்தைக் கண்டு பயப்பட வேண்டும்? நாம் வெறும் கிருஷ்ண உணர்வை நம்பி இருக்கவேண்டியது தான். ஏனென்றால் நாம் எந்த சூழ்நிலையிலும் கிருஷ்ண உணர்வுடன் வாழ்ந்தால், என் நற்பலன் என்னவென்றால் நான் இந்த ஜட உலகத்திற்கு திரும்ப வரப்போவதில்லை. மீண்டும் மீண்டும் கிருஷ்ணரை நினைப்பதால், காண்பதால், கிருஷ்ணரைப்பற்றி படிப்பதால், கிருஷ்ணருக்காக உழைப்பதால், எதாவது ஒரு விதத்தில், நீ கிருஷ்ண உணர்வில் இருந்தால், அது உனக்கு நற்பலனை தரும். பிறகு அந்த நற்பலன் உன்னை இந்த ஜட உலகில் மீண்டும் பிறப்பதிலிருந்து காக்கும். அது தான் சிறந்த நற்பலன். அதுக்கு மாறாக நான் வேறு எந்த கடமை என்றழைக்கப்படும் செயலில் சுகமாக ஈடுபட்டிருந்து, கிருஷ்ணரை மறந்துவிட்டால் நான் மீண்டும் பிறவி எடுக்கவேண்டி இருக்கும், பிறகு எங்கே என் நற்பலன்? நாம் இதைப்பற்றி வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.