TA/Prabhupada 1013 - அடுத்த மரணம் வருவதற்கு முன்பு நாம் மிக வேகமாக முயற்சி செய்ய வேண்டும்



750620c - Arrival - Los Angeles

ராமேஸ்வரா: உங்கள் புத்தகங்கள் அனைத்தும் வெளியிடப்படும் வரை பதிப்பகத்தில் உள்ள பக்தர்கள் நன்றாக உணர மாட்டார்கள்.

பிரபுபாதர்: ம்ம். அது நல்லது. (சிரிப்பு)

ஜயதீர்தா: அவர்கள் இப்போது இரவு ஷிப்டுகளிலும் வேலை செய்கிறார்கள்.

பிரபுபாதர்: ஓ.

ராமேஸ்வரா:: இருபத்தி நான்கு மணி நேரம்.

ஜயதீர்தா: இயந்திரத்தில் இருபத்தி நான்கு மணி நேரம், இதனால் இயந்திரங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பிரபுபாதர்: மற்றும் ஹயக்ரீவ பிரபு, நீங்கள் எத்தனை காகிதங்களை முடிக்கிறீர்கள்? நீங்கள் குறைந்தபட்சம் ஐம்பது காகிதங்களை முடிக்க முடியும்? ஹயக்ரீவ: நான் முயற்சி செய்கிறேன். ஒரு மணி நேரத்திற்கு ஒரு டேப்.

ராதா-வல்லபா: ஹயக்ரீவா இன்று மத்திய-லீலை ஆறாவது தொகுதியை முடித்தார்.

பிரபுபாதர்: ஹூ?

ராதா-வல்லபா: ஹயக்ரீவா இன்று மத்திய-லீலை ஆறாவது தொகுதியைத் தொகுத்து உள்ளார்.

பிரபுபாதர்: ஓ, காண்டம் ஆறு, சைதன்ய-சரிதாம்ருத?

ராதா-வல்லபா: ஆம். ஒன்பது காண்டங்களில், ஹயக்ரீவா மத்திய-லீலை ஆறு தொகுதிகள் முடித்துள்ளார்.

பிரபுபாதர்: ஒட்டுமொத்தமாக ஒன்பது காண்டங்கள் இருக்கும்?

ராமேஸ்வரா: மத்திய-லீலையில்.

ஜயதீர்தா: மத்திய-லீலையில், ஒன்பது காண்டங்கள்.

ராதா-வல்லபா: மேலும் நான்கு காண்டங்கள் அந்த்ய-லீலா.

ஜெயதீர்த்தா: மொத்தம் பதினாறு காண்டங்கள்.

பிரபுபாதர்: நம் கர்கமுனி எங்கே?

பாவானந்தா: அவர் கிழக்கில் இருக்கிறார். புஃபாலோ.

பிரபுபாதர்: பிரசங்கிக்கிறாரா?

பாவானந்தா: ஆம்.

பிரபுபாதர்: அப்படியானால் நீங்கள் அவருடன் இருக்கிறீர்களா, ஸுதாமா?

ஸுதாமா: ஆம், ஸ்ரீல பிரபுபாதா.

பிரபுபாதர்: எல்லாம் நன்றாக நடக்கிறதா?

ஸுதாமா: ஆம்.

ஜயதீர்தா: ... முழு சைதன்ய-சரிதாம்ருத, தொகுப்பு ஆகஸ்ட் இறுதிக்குள் முடிவடையும் என்று என்னிடம் கூறினார்.

பிரபுபாதர்: ஹ்ம்?

ஜயதீர்த: சைதன்ய-சரிதாம்ருத தொகுப்பு அனைத்தும் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்கப்படும்.

பிரபுபாதர்: அவர்களும் வருகிறார்கள், நிதாய் ...?

ஜயதீர்தா: நிதாய் மற்றும் ஜகந்நாதா வரப்போகிறார்கள் ...

ராமேஸ்வரா: சுமார் மூன்று நாட்களில்.

ஜயதீர்தா:: ஜூலை இறுதிக்குள் அவர்கள் ..... எனவே இப்போது அது மிக வேகமாக செல்கிறது.

பிரபுபாதர்: மிகவும் நல்லது. தூர்ணம் யதேத (ஸ்ரீ.பா 11.9.29) அடுத்த மரணம் வருவதற்கு முன்பு நாம் மிக வேகமாக முயற்சி செய்ய வேண்டும். மேலும் மரணம் வரும். அடுத்த மரணம் வருவதற்கு முன்பு நாம் முயற்சி செய்ய வேண்டும், நாம் நமது கிருஷ்ணா பக்தியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி - கடவுளிடம் திரும்புவோம். த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (ப.கீ 4.9). இது முழுமை. ஏனென்றால், நாம் இன்னொரு பிறப்புக்காகக் காத்திருந்தால், நமக்கு கிடைக்காமல் போகலாம். பாரத மஹாராஜா கூட, அவர் நழுவினார். அவர் ஒரு மான் ஆனார். எனவே "இந்த வாய்ப்பை, மனித வாழ்க்கை வடிவத்தை நாம் பெற்றுள்ளோம்" என்று நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம், வீட்டிற்குச் செல்வதற்கு - , கடவுளிடம் திரும்புவதற்கு தகுதியுள்ளவர்களாக இருப்போம்." அது புத்திசாலித்தனம். "சரி, அடுத்த பிறப்பில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்." என்பதல்ல. அது மிகவும் நல்ல கொள்கை அல்ல. தூர்ணம். தூர்ணம் என்றால் மிக விரைவாக முடித்தல். தூர்ணம் யதேத அனும்ருத்யும் பதேத் யாவத் (ஸ்ரீ.பா 11.9.29). ஸ்டுடியோவுக்கு எதிரில் கராத்தே பயிற்சி செய்யும் ஆண்களின் ஒலி முழு அறை உரையாடலின் பின்னணியில் பரவியுள்ளது) இந்த மக்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்பது போல நேரத்தை வீணடிக்கிறார்கள். (உள்ளூர சிரிப்பு) இந்த கார... காரா?.. பயன் என்ன ...?

ஜயதீர்த: கராத்தே.

பிரபுபாதர்: கராத்தே. இது மெக்சிகோவில் மிகவும் பிரபலமானது.

ஜயதீர்த: எல்லா இடங்களிலும்.

பிரபுபாதர்: ஆனால் அந்த முறை மரணத்திலிருந்து காப்பாற்றுமா? மரணம் வரும்போது, "போ!" (சிரிப்பு) ஒலி அவர்களைக் காப்பாற்றுமா? இது முட்டாள்தனம். ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுவதற்குப் பதிலாக, அவர்கள் சில ஒலிகளை எழுப்புகிறார்கள், அந்த ஒலி அவரைக் காப்பாற்றும் என்று நினைத்து. இது முட்டாள்தனம், மூடஹா என்று அழைக்கப்படுகிறது. (கராத்தே ஆண்கள் மிகவும் சத்தமாக கத்த ஆரம்பிக்கிறார்கள்; பக்தர்கள் சிரிக்கிறார்கள்) பிஷாசீ பாஇலே ஜனே மதி-ச்சன்ன ஹய (ப்ரேம-விவர்த). நீங்கள் அவர்களிடம், "நீங்கள் ஏன் இவ்வளவு சத்தமாக ஒலிக்கிறீர்கள்?" என்று கேட்டால். அவர்கள் சிரிப்பார்கள். (உள்ளூர சிரித்தல்)

விஷ்ணுஜன: ஸ்ரீல ப்ரபுபாத, "நான் போகிறேன், என் வேலை முடிக்கப்படவில்லை" என்று பக்திவிநோத டாகுர சொன்னபோது என்ன அர்த்தம்?

பிரபுபாதர்: ஹ்ம்?

விஷ்ணுஜன: பக்திவிநோத டாகுர தனது வேலையை முடிக்காமல் இந்த கிரகத்தை விட்டு வெளியேறுவதாகக் கூறியபோது?

பிரபுபாதர்: பிறகு நாம் முடிப்போம். நாம் பக்திவிநோத டாகுர வம்சாவளி. எனவே அவர் முடிக்கப்படாமல் வைத்திருந்தார், அதனால் அதை முடிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும். அதுவே அவருடைய கருணை. அவர் உடனடியாக முடித்திருக்கலாம். அவர் வைஷ்ணவர் ; அவர் எல்லாம் வல்லவர். ஆனால் "முட்டாளே, நீங்களும் வேலை செய்யுங்கள்" என்று அவர் நமக்கு வாய்ப்பு அளித்தார். அதுவே அவருடைய கருணை