TA/740620 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஜெர்மனி இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:57, 16 May 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - ஜெர்மனி {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"து꞉காலயம் அஶாஶ்வதம் (BG 8.15). து꞉க. து꞉க என்றால் துன்பம். ஆலயம். ஆலயம் என்றால் இடம். எனவே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய, பூரண பகவான், அவர் கூறுகிறார், 'இது துன்பப்படுவற்கான இடம்', மேலும் அது ம்ருʼத்யு-லோக, என்று அழைக்கப்படுகிறது, 'மரணத்திற்கு', 'மரணத்திற்கான கிரகம்', 'இறப்பதற்கான பிரபஞ்சம்'. அப்படியென்றால் நித்தியமான ஆன்மாவிற்கு இறப்பு இயற்கைக்கு மாறானது. ஆனால் இந்த பௌதிக உலகில் நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், நீங்கள் மரணமடைவீர்கள். அதுதான் பௌதிக உலகம். நீங்கள் ப்ரஹ்மாவாக அல்லது ஒரு சிறிய பூச்சி, எறும்பாக வாழ்ந்தாலும், நீங்கள் இறக்க வேண்டும். பூத்வா பூத்வா ப்ரலீயதே (BG 8.19): இறப்பு, மேலும் மீண்டும் பிறவி எடுத்து, இறப்பு, மேலும் மீண்டும் பிறவி எடுத்து. ஆனால் இந்த போக்கிரிகளுக்கு, அது தெரியவில்லை. இது இயற்கை, அவ்வளவுதான், அதாவது ஒருவர் இந்த இறப்பு மேலும் பிறப்பை தடுக்க முடியும், அவர்களுக்கு அறிவில்லை. இருப்பினும், அவர்கள் பெரிய அறிஞர்கள்."
740620 - காலை உலா - ஜெர்மனி