TA/740607 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஜெனிவா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் கிருஷ்ணரை பூரண அதிகாரியாக ஏற்றுக் கொண்டிருந்தால், மேலும் அதில் எந்த ஐயமும் இல்லை என்று கிருஷ்ணர் கூறினால், பிறகு நான் ஏன் சந்தேகப்பட வேண்டும்? நான் ஏன் கிருஷ்ணர் மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டும்? இதுதான் அதன் செயல்முறை. ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள். எப்பொழுதும் கிருஷ்ணரை நினையுங்கள். மேலும் இறப்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம். இந்த நேரத்தில் நீ இறப்பாய் என்று உத்தரவாதம் இல்லை. எந்த நேரத்திலும், நீ இறக்கலாம். இறப்பு, அதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் நீங்கள் இறக்க வேண்டும் என்பது உத்தரவாதம் ஆகும். அது உத்தரவாதமாகும். ஆனால் எப்பொழுது நீங்கள் இறப்பீர்கள், அதற்கு உத்தரவாதம் இல்லை. ஆகையினால் எந்த நேரத்திலும் நாம் இறப்பிற்கு தயாராக இருக்க வேண்டும். ஆகையினால் ஒரு பக்தன் இறப்பிற்கு பயப்படுவதில்லை. இறப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்று அவனுக்குத் தெரியும்."
740607 - சொற்பொழிவு BG 08.01 - ஜெனிவா