TA/740626 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவேளை இந்த பிறவியில் நான் மனிதனாக இருந்தால்; அடுத்த பிறவியில் நான் மனிதனாக இல்லாமல் போகலாம். இந்த அறிக்கை செய்தித்தாள் நபருக்கு பிடிக்கவில்லை. (சிரிப்பொலி) அடுத்த பிறவியில் அவன் விலங்காக வரலாம் என்று சொல்லப்பட்டது, எனவே அவன் என் பெயரில் வெளியிட்டான், ' அந்த ஸ்வாமீ விலங்காக வரலாம்'. மேலும் அந்த ஸ்வாமீயும் விலங்காக வரலாம், ஸ்வாமீ என்று அழைக்கப்படுபவர், அவர்கள் விலங்காக மாறுவார்கள். (சிரிப்பொலி) எனவே அது தவறல்ல. ஆனால் நாம் பக்தர்கள், நாம் விலங்காக மாறுவதில் பயப்படவில்லை. நம் ஒரே லட்சியம் நாம் கிருஷ்ண பக்தராக வேண்டும். எனவே விலங்குகள், பசுக்கள் மேலும் கன்றுகள், அவை கிருஷ்ண பக்தி... நீங்கள் கிருஷ்ணரின் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம். எனவே நாம் கிருஷ்ணரின் விலங்குகளாக வருவது நல்லதுதான் (சிரிப்பொலி). எனவே அதில் ஒன்றும் தவறில்லை. நாம் கிருஷ்ணரின் விலங்காக வந்தால் கூட, அதுவும் மிகவும் மதிப்பு வாய்ந்ததுதான். அது சாதாரணமான விஷயமல்ல."
740626 - சொற்பொழிவு SB 02.01.01-5 - மெல்போர்ன்