TA/740626b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்ப-வ்ருʼக்ஷ-லக்ஷாவ்ருʼதேஷு ஸுரபீர் அபிபாலயந்தம் (Bs. 5.29). கிருஷ்ணர், அவர் எப்பொழுதும் மாடு மேய்க்கிறார். அவர் பெயர் மாட்டிடையன். கிருஷ்ணரின் விலங்காக வருவது மிக, மிக பெரிய பாக்கியம். அது சாதாரண விஷயமல்ல. கிருஷ்ணருடன் தோழமை கொண்ட ஏதேனும், அவருடைய மாட்டிடைய நண்பர்கள் அல்லது கன்று அல்லது பசு, அல்லது வ்ருʼந்தாவன மரங்கள், செடிகள், பூக்கள் அல்லது தண்ணீர், அவை அனைத்தும் கிருஷ்ணரின் பக்தர்கள். அவர்கள் கிருஷ்ணருக்கு வேறுபட்ட திறன்களில் சேவை செய்ய விரும்புகிறார்கள். யாரோ கிருஷ்ணருக்கு பழங்களாக மேலும் பூக்களாக, மரமாக, யமுனா நீராக, அல்லது அழகான மாட்டிடையர்களாக மேலும் பெண்குழந்தைகளாக அல்லது கிருஷ்ணரின் தந்தையாக, தாயாக, இன்னும் பல கிருஷ்ணருக்கு சேவை செய்கிறார்கள். கிருஷ்ணர் தனித்தன்மை மிக்கவர். எனவே அவருக்கு பல காதலர்கள் இருக்கிறார்கள். கிருஷ்ணரும் அவர்களை நேசிக்கிறார். எனவே அவருடைய மற்றொரு பெயர் பஶு-பால, பஶு-பால-பங்கஜ. அவர் விலங்குகளை பராமரிப்பவர்."
740626 - சொற்பொழிவு SB 02.01.01-5 - மெல்போர்ன்