TA/Prabhupada 0555 - ஆன்மிக புரிதல் விசயத்தில் உறங்குதல்



Lecture on BG 2.62-72 -- Los Angeles, December 19, 1968

பிரபுபாதர்: நமது கொள்கை தத் -பரத்வென நிர்மலம் (சை சரி மத்ய 19.170). கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவதால், புலன்களின் செயல்பாடுகளை நீங்கள் சுத்திகரிக்க முடியும். பிறகு புலன்கள் உங்களைத் தொந்தரவு செய்யாது. நீங்கள் புலன்களைக் கட்டுப்படுத்த விரும்பினால், முதலில் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். பிறகு நீங்கள் மற்ற புலன்களை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும். எனவே உங்கள் நாக்கை- ஹரே கிருஷ்ணா கோஷமிடுவதற்கும், கிருஷ்ணா பிரசாதத்தை ருசிப்பதற்கும் ஈடுபடுத்தவும் - உங்கள் பிற புலன்கள் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நீங்கள் காண்பீர்கள். இது நமது புலன்களைக் கட்டுப்படுத்தும் திறவுகோல், நாக்கு. நீங்கள் நாக்குக்கு முன்னுரிமையையும் சலுகையும் கொடுத்தால், நீங்கள் ஒருபோதும் புலன்களைக் கட்டுப்படுத்த முடியாது. இது புலன்களைக் கட்டுப்படுத்தும் ரகசியம். மேலே படிக்கவும்.

தமால் கிருஷ்ணா: "எல்லா மனிதர்களுக்கும் இரவு என்பது, சுய கட்டுப்பாட்டில் உள்ளோருக்கு, விழிப்புணர்வு நேரம், எல்லா மனிதர்களுக்கும் விழித்திருக்கும் நேரம் உள்நோக்க முனிவருக்கு இரவாகும்." பொருளுரை: "அறிவார்ந்த ஆண்களில் இரண்டு வகுப்புகள் உள்ளன. பௌதிக நடவடிக்கைகளில் புத்திசாலி, புலன்களின் திருப்திக்காக உழைக்கிறான், மற்றொருவர், உள்நோக்கமும் விழிப்பும் கொண்டு சுய-உணர்தலை வளர்கிறான். உள்நோக்க முனிவர் அல்லது சிந்தனைமிக்க மனிதனின் செயல்பாடுகள் பொருளில் ஊறிய நபர்களுக்கு இரவு. சுய-உணர்தல் பற்றிய அறியாமையால் ஜடச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் அத்தகைய இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், உள்நோக்கு முனிவர், ஜடச் செயல்களில் ஈடுபட்ட மனிதனின் அந்த இரவில், எச்சரிக்கையாக இருக்கிறார்."

பிரபுபாதர்: இரவு என்றால் மக்கள் தூங்கும் போது, ​​பகல் என்பது அவர்கள் விழித்திருக்கும்போது. இது பகல் மற்றும் இரவு பற்றிய புரிதல். எனவே ஒரு ஜடச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள், அவர்களின் ஆன்மீக புரிதல் விஷயத்தில் தூங்குகிறார்கள். ஆகவே, ஜடச் செயல்களில் ஈடுபட்ட நபரின் நடவடிக்கைகள் பகல் நேரத்தில் இருந்தாலும், உண்மையில் அது இரவுதான். ஆன்மீக நபரைப் பொறுத்தவரை, இந்த மக்கள் மனித வாழ்க்கை வடிவமான சுய-உணர்தல் வசதியைப் பெற்றுள்ளனர். அவர்கள் எப்படி தூங்குவதன் மூலம் அதனை வீணடிக்கிறார்கள். மாறாக, ஜடச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள், அவர்களும் பார்க்கிறார்கள். "ஓ, இந்த கிருஷ்ண உணர்வுள்ள சிறுவர்கள், அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள், அவர்கள் ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுகிறார்கள். எவ்வளவு முட்டாள்தனம். அவர்கள் தூங்குகிறார்கள். " நீங்கள் பார்க்கிறீர்களா? எனவே ஜடச் செயல்களில் ஈடுபட்ட நபரின் பார்வையில், இந்த நடவடிக்கைகள் இரவு பொழுது போல், தூக்கம். ஆன்மாஞானம் உணரப்பட்ட நபருக்கு, இந்த நடவடிக்கைகள் தூங்குவதற்கு நிகர். நீங்கள் பார்க்கிறீர்களா? அதற்கு நேர்மாறானது. அவர்கள் கிருஷ்ண உணர்வுள்ள நபரை நேரத்தை வீணடிப்பதாக பார்க்கிறார்கள், மேலும் கிருஷ்ண உணர்வுள்ள நபர் அவர்களை நேரத்தை வீணடிப்பதாக பார்க்கிறார். இதுதான் நிலை. மேலே போகவும்.

தமால் கிருஷ்ணா: "அத்தகைய முனிவர்கள் ஆன்மீக கலாச்சாரத்தின் படிப்படியான முன்னேற்றத்தில் ஆழ்நிலை மகிழ்ச்சியை உணர்கிறார்கள், "அத்தகைய முனிவர்கள் ஆன்மீக கலாச்சாரத்தின் படிப்படியான முன்னேற்றத்தில் ஆழ்நிலை மகிழ்ச்சியை உணர்கிறார்கள்,"

பிரபுபாதர்: ஆம். அவர்கள் கனவு காண்கிறார்கள். "இப்போது நாம் இதைச் செய்வோம். அடுத்த முறை, இதை நான் பெறுவேன். அடுத்த முறை, நான் இதை வைத்திருப்பேன். அடுத்த முறை, நான் அந்த எதிரியைக் கொல்வேன். அடுத்த முறை, நான் இதை செய்வேன். அவர்கள் அப்படி திட்டமிடுகிறார்கள். மேலே போகவும்.

தமால் கிருஷ்ணா: "...அவரது தூக்க நிலையில் சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும் சில சமயங்களில் மன உளைச்சலுடனும் உணர்கிறார். உள்நோக்கமுள்ள மனிதன் எப்போதும் ஜடச் செயல்களில் ஈடுபட்ட மற்றும் துயரங்களுக்கு நடுநிலைமையாக இருப்பான். "

பிரபுபாதர்: சுய உணர்தலுக்கு சார்ந்து இருக்கும் உள்நோக்க மனிதர், அவருக்கு நன்றாகத் தெரியும், "எதிர்காலத்தில் இதுபோன்ற பெரிய வணிகங்களை நான் செய்தால், ... அத்தகைய பெரிய வானளாவிய வீட்டை என்னால் கட்ட முடியும். " ஆனால் அவர் உள்நோக்கத்துடன் இருப்பதால், "இவை அனைத்தையும் நான் என்ன செய்வேன்? நான் மனித வாழ்க்கையில் இருந்து வெளியேறியவுடன், எல்லாம் இங்கேயே இருக்கும், நான் உடலின் மற்றொரு வடிவத்தை எடுத்துக்கொள்கிறேன, மற்றொரு வாழ்க்கையைத் தொடங்குகிறேன்." அது உள்நோக்கம்.