TA/Prabhupada 0775 - குடும்பப் பற்று ஆன்மிக முன்னேற்றத்திற்கு பெரும் தடையானதாகும்



Lecture on SB 7.6.8 -- New Vrindaban, June 24, 1976

பிரபுபாதா: பொதுவாக, மக்கள் குடும்ப வாழ்க்கையில் அதிகம் ஈடுபட்டு இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இளைஞர்கள், அவர்கள் கிருஷ்ண உணர்வுக்கு வருகிறார்கள் என்று நான் சில சமயங்களில் சொல்கிறேன், அவர்களுடைய ஒரே ஒரு பெரிய சொத்து அவர்கள் குடும்ப வாழ்க்கையில் பந்தம் கொண்டிருக்க வில்லை. அது மிகவும் நல்ல தகுதி. ஏதோ ஒரு வழி அல்லது மற்றுமொரு வழி, அவர்கள் அவ்வாறு ஆகிவிட்டனர். எனவே கிருஷ்ணாவுடனான அவர்களின் இணைப்பு உறுதியானது. இந்தியாவில் அவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குடும்ப பந்தம் உள்ளது. அவர்கள் கிருஷ்ண பக்திக்கு ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் இப்போது பணத்திற்குப் பின் செல்கிறார்கள். நான் அனுபவித்திருக்கிறேன். ஆம்.

எனவே கிருஷ்ண உணர்வில் முன்னேறும் விஷயத்தில் குடும்ப பந்தம் மிகப் பெரிய தடையாக இருக்கிறது, ஆனால் முழு குடும்பமும் கிருஷ்ண உணர்வோடுடன் இருந்தால், அது மிகவும் அருமை. பக்திவிநோதா தாகுராவைப் போல. அவர் ஒரு குடும்ப மனிதர், ஆனால், அவர்கள் அனைவருமே- பக்திவிநோத தாகுரா, அவரது மனைவி, அவரது குழந்தைகள் ... மேலும் சிறந்த குழந்தை எங்கள் குரு மகாராஜா, சிறந்த குழந்தை அவர்... எனவே அவர் தனது அனுபவத்தால் பாடியுள்ளார், ஏ தினா கிருஹ பஜன தேகி கிருஹதே கோலாக பய. குடும்பமாக, எல்லோரும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்டிருந்தால், அது மிகவும் அருமை. அது சாதாரண குடும்பம் அல்ல. அந்த பந்தம் சாதாரண பந்தம் அல்ல. ஆனால் பொதுவாக மக்கள் பொருள் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளனர். அது இங்கே கண்டிக்கப்படுகிறது. ஷேஷம் கிருஹேஷு சக்தஸ்ய பிரமத்தஸ்ய அபயாதி ஹி (ஸ்ரீ பா 7.6.8). அவர்கள் பிரமத்த என்று அழைக்கப்படுகிறார்கள். எல்லோரும் "என் குடும்பம், என் மனைவி, என் குழந்தைகள், என் தேசம், என் சமூகம், அது தான் எல்லாமே. கிருஷ்ணா என்றால் என்ன?" என்று கேட்பார்கள். இது மாயாவால் திணிக்கப்பட்ட மிகப்பெரிய மாயை. ஆனால் யாரும் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது.

தேஹாபத்ய- களத்ராதிஸ்
வாத்மா- சைனியேஷ் அசத்ஸ் வபி
தேஷாம்ʼ ப்ரமத்தோ நித⁴னம்ʼ
பஶ்யன்ன் அபி ந பஶ்யதி
(ஸ்ரீ பா 2.1.4)

எல்லாம் முடிந்துவிடும். கிருஷ்ணரைத் தவிர வேறு எவரும் நமக்கு எந்த பாதுகாப்பும் அளிக்க முடியாது. மாயாவின் பிடியிலிருந்து நாம் விடுபட விரும்பினால் - ஜென்ம ம்ருத்யு ஜரா வியாதி (ப கீ 13.9) ஒரு ஆன்மீக குருவின் மூலம், கிருஷ்ணரின் பாத கமலங்களில் தஞ்சம் அடையவேண்டும், அதே நோக்கத்திற்காக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பக்தர்களுடன் வாழ வேண்டும். இது அழைக்கப்படுகிறது ... அந்த சரியான சொல் என்ன? சாகி அல்லது ஏதோ ஒன்று . இப்போது என் நினைவுக்கு வரமறுக்கிறது. ஆனால் அதே வகையில் நம் கிருஷ்ண பக்தியில் நாம் வாழ வேண்டும். பின்னர் இந்த தடைகள், கிருஹேஷு சக்தஸ்ய பிரமத்ஸய. யார் வேண்டுமானாலும் ... அனைத்து கர்மிகளும், அவர்கள் இந்த குடும்ப வாழ்க்கையுடன் பந்தம் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கையில், கிருஷ்ண பக்தியும் கூடியிருந்தால் அது மிகவும் நல்லது. கிருஹே வா வனதே தாகே, ஹா கவுராங்கா போலே தாகே. அவர் குடும்ப வாழ்க்கையிலோ அல்லது அவர் சன்யாசி வாழ்க்கையிலோ இருக்கலாம். பரவாயில்லை, அவர் ஒரு பக்தர் என்றால், அவரது வாழ்க்கை வெற்றிகரமாகும்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய பிரபுபாதா.