TA/740705 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கோவிந்தா, ஏனென்றால் அவர் இந்த பிரபஞ்சத்திற்குள் வந்துவிட்டார், ஆகையினால், பிரபஞ்சத் தோற்றம் சாத்தியமானது. இல்லையென்றால் அது அவ்வாறு நடக்காது. எவ்வாறு என்றால் நான் ஒரு ஆன்மா, நீங்களும் ஒரு ஆன்மா. நீங்கள் இந்த உடலில் புகுந்துவிட்டீர்கள் அல்லது நான் இந்த உடலில் புகுந்துவிட்டேன், ஆகையினால் இந்த உடலில் இயக்கம் சாத்தியமாகிறது. நீங்கள் அல்லது நான் இந்த உடலைவிட்டு வெளியானால், அது மந்தமாகிறது, இயக்கம் இல்லை. இது மிக எளிதில் புரியக்கூடியது. அதேபோல், பிரபஞ்சத்தின் தோற்றம் எவ்வாறு இயங்குகிறது, விஞ்ஞானி என்று அழைக்கப்படுகிறவர்கள், தத்துவவாதி, போக்கிரிகள், அவர்களுக்கு புரியவில்லை, ஏனென்றால் கிருஷ்ணர் வந்துவிட்டார். இது மிக எளிதில் புரியக்கூடியது. நான் கிருஷ்ணரின் அங்க உறுப்பு, மிகவும் துள்ளியமான பகுதி. இருப்பினும், நான் இந்த உடலினுள் நுழைந்துவிட்டேன், ஆகையினால் இந்த உடல் இயங்குகிறது, உடலின் செயல்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இது புரிந்துக் கொள்ள கடினமாக இருக்கிறதா? எனவே, யாரேனும் புரிந்துக் கொள்ள முடியும் அதாவாது இந்த திரண்ட முலப் பொருள், பெரிய பிரபஞ்சத் தோற்றம், என்னை போல் ஒரு விஷயம், ஆன்மா, அங்கிருக்கும் வரை, அது எவ்வாறு நன்றாக நடக்கிறது என்று."
740705 - சொற்பொழிவு SB 01.08.19 - சிக்காகோ