TA/Prabhupada 0171 - நல்ல அரசாங்கம் ஏற்பட வர்ணாஸ்ரம தர்மம் வேண்டும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 TAMIL Pages with Videos Category:Prabhupada 0171 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(No difference)

Revision as of 13:34, 4 July 2016



Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.2.28-29 -- Vrndavana, November 8, 1972

ஆகையால் , வர்ணாஸ்ரமதர்மத்தில் பயிற்றுவிக்கப்பட்ட வேண்டும். சிறந்த பிராமணர்கள் ஆவதற்குரிய பயிற்சி கண்டிப்பாக வேண்டும். சில மக்கள் க்ஷத்திரியர்களாவதற்கும், சிலர் வைசியர்களாவதற்கும் பயிற்றுவிக்கப்படவேண்டும். மேலும் சூத்திரர்களாவதற்கு எந்த பயிற்சியும் தேவை இல்லை..அனைவருமே சூத்திரர்களே.. . ஜனமன ஜெயதே சூத்ரா பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்களே.. Saṁskārād bhaved dvijaḥ , பயிற்சியின் மூலமே , ஒருவர் வைசியராகவும் , ஒருவர் சூத்திரராகவும் , ஒருவர் பிராமணராகவும் ஆகிறார்கள் ஆனால் அந்த பயிற்சி தரப்படாமல் அனைவரும் சூத்திரர்களாகவே இருக்கிறோம். சூத்திரர் அரசனாக இருக்கும் போது நல்ல அரசாங்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது.? சூத்திரர்கள் அனைவரும் எப்படியாவது வாக்குகளை பெற்று, அரச பதவியையும் பெற்றுக் கொள்கிறார்கள்.. முக்கியமாக இந்த கலியுகத்தில் அவர்களின் நோக்கம் mlecchā rājanya-rūpiṇaḥ ஆகும். உண்பது மற்றும் அருந்துவது...அதாவது இறைச்சியை உண்பதும் மதுவை அருந்துவதும் ஆகும்.. மிலேச்சர்களும் யவனர்களும் அரச பதவியை ஏற்றுக்கொண்டால், எவ்வாறு நல்ல அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியும்? வர்ணாஸ்ரம தர்மம் தோற்றுவிக்கப்பட்டாலொழிய, எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆனாலும் நல்ல அரசாங்கம் ஏற்படாது. அதுவரை நல்ல அரசாங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு அரசன் என்பவன் பரீக்ஷித் மஹாராஜாவைப் போன்று மிகச் சிறந்த, தகுதிவாய்ந்த க்ஷத்திரியனாக இருக்க வேண்டும். அவர் நகர் வலம் வரும்போது , ஒரு கருப்பு மனிதன் ஒரு பசுவை சித்திரவதை செய்து கொலை செய்ய முயற்சிப்பதைக் கண்டவுடன்... தான் வாளை உடனே எடுத்து:" கொடியவனே! யார் நீ?" என்று தட்டிக் கேட்டு தடுத்தான். இதுவே க்ஷத்ரிய லக்ஷணம். பசுக்களை பராமரித்து பாதுகாக்கும் கடமை வைசியர்களுக்குரியது. Kṛṣi-go-rakṣya-vāṇijyaṁ vaiśya-karma svabhāva-jam (BG 18.44). அனைத்தும் தெளிவாக இருக்கிறது. இந்த கலாச்சாரம் எங்கே போனது?

எனவே தான், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் முக்கியமாகும். இந்தா சமூகத்தின் தலைவர்கள் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில்... நீங்கள் எவ்வாறு உலக சமுதாய சூழலை மேம்படுத்துவது என்பதே.. இங்கு மட்டும் அல்ல..அனைத்து இடங்களிலும்...சமூகம் அறியாமையாலும் மாயையாலும் சிக்கித் தவிக்கின்றது.. அதைப்பற்றி தெளிவான தீர்வில்லாமல் இருக்கின்றது. ஆனால் தெளிவான தீர்வு வேதத்தில் உள்ளது: vāsudeva-parā vedāḥ. இதுவே வேத அறிவு...ஆனால் நீங்கள் கற்கும் கல்வியில் வாசுதேவரைப்பற்றியோ கிருஷ்ணரைப்பற்றியோ பாடம் இல்லை. பகவத்கீதை தடை செய்யப்பட்டுள்ளது. வாசுதேவர் தன்னைப் பற்றி தானே சொல்லும் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது. யாராவது படித்தாலும் , அவன் மூடனாக இருந்தால் கிருஷ்ண பக்தியை மறந்து ஏதோ அர்த்தம் கற்பிக்கிறான். பகவத் கீதை படித்து கிருஷ்ண பக்தியை மறந்தால், இது முட்டாள் தனமான செயல். இந்தமாதிரியான முட்டாள்களின் சமுதாயத்தில் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. மனித வாழ்வின் உண்மையான நோக்கம் vāsudeva-parā vedā vāsudeva-parā makhāḥ, vāsudeva-parā yogāḥ.ஆகும் இந்தக்காலத்தில் பல யோகிகள் இருக்கின்றனர். என்னால் இதை உறுதியாக சொல்லமுடியும்... அவர்கள் வாசுதேவரைப்பற்றியோ, யோகத்தைப் பற்றியோ கூறாமல் வெறும் மூக்கை அழுத்திக்கொண்டு இருக்கின்றனர். இது உண்மையான யோகம் அல்ல..