TA/Prabhupada 0350 - நாங்கள் மக்களை, கிருஷ்ணரை பார்க்க தகுதி பெற்றவராக ஆக்க முயல்கிறோம்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0350 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(No difference)

Revision as of 13:50, 26 April 2018



Lecture on BG 7.2 -- Nairobi, October 28, 1975


பிரம்மாநந்தன்: அவன் கூறுவது என்னவென்றால், கிருஷ்ணர் எல்லையற்றவர் என்பதை நாம் வேதங்களிலிருந்து அறிவோம், குறிப்பாக அவர் கோபியர்களுடன் தனது ராச-லீலையை நிகழ்தியப்போழுது அதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆக கிருஷ்ணர் எல்லையற்றவர் என்றால் பிறகு எதற்காக அவர்...?


இந்தியன்: எல்லா உயிர்வாழிகளும் கடவுளின் திருவீட்டிற்கு திரும்பி செல்வதற்கு சமமான வாய்ப்பை அளிக்கும் வகையில் இந்த உலகம் முழுவதிலும் தன்னை எதற்காக வெளிப்படுத்தவில்லை ?


பிரம்மாநந்தன்: எல்லா உயிர்வாழிகளும் கடவுளின் திருவீட்டிற்கு திரும்பி செல்வதற்கு சமமான வாய்ப்பை அளிக்கும் வகையில் இந்த உலகம் முழுவதிலும் தன்னை எதற்காக வெளிப்படுத்தவில்லை ?


பிரபுபாதர்: ஆம். அவர் உலகம் முழுவதிலும் தோற்றம் அளிக்கிறார் அனால் உனக்கு தான் அவரைக் காண்பதற்கு கண்கள் இல்லை. அது உனது குறைபாடு. கிருஷ்ணர் எங்கும் இருப்பார். உதாரணமாக, இப்போது சூரியன் வானத்தில் இருந்தாலும், எதற்காக உன்னால் அதை தற்போது காணமுடியவில்லை ? ஆம்? இதற்கு பதிலை கூறுங்கள். சூரியன் வானத்தில் இல்லை என்று நினைக்கிறீர்களா? மொட்டை மாடிக்கு சென்று சூரியனை பாருங்கள். (சிரிப்பு) "இல்லை, இல்லை, சூரியன் எல்லாம் ஒன்றும் கிடையாது" என்று எதற்காக தன்னை அயோக்கியனாக நிரூபிக்க வேண்டும்? அறிஞர்களால் இது அங்கீகரிக்கப்படுமா ? உன்னால் சூரியனை காணமுடியாதனால் சூரியனே கிடையாதா? இதை எந்த பண்டிதனாவது ஏற்றுக் கொள்வானா? இரவில் சூரியனை காணமுடியாததால், விஷயம் தெரிந்த பண்டிதனிடம், "இல்லை, இல்லை, சூரியன் எல்லாம் ஒன்றும் கிடையாது," என்றால் அவன் அதை ஏற்றுக் கொள்வானா? அவன், "சூரியன் இருக்கிறது. அடேய் அயோக்கிறனே, உன்னால் தான் பார்க்க முடியவில்லை." எனக் கூறுவான். அவ்வளவு தான். "நீ உனது அயோக்கியத்தனத்தை விட்டுவிடு. பிறகு நீ காணலாம்."

நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோக-மாயா-ஸமாவ்ருத (BG 7.25)


என கிருஷ்ணர் கூறினார். அவர் அயோக்கியர்களுக்கு தோன்றுவதில்லை ஆனால் விஷயம் அறிந்தவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.


ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி யம் ஷ்யாமஸுந்தரம் அசிந்த்ய-குண (பிரம்ம சம்ஹிதை 5.38)


பக்தர்கள் எப்பொழுதும் கிருஷ்ணரை காண்பார்கள். அவனுக்கு கிருஷ்ணர் எப்பொழுதும் தோன்றுகிறார். மற்றும் அயோக்கியர்களுக்கு அவர் தோற்றம் அளிப்பதில்லை. அது தான் வித்தியாசம். ஆக முதலில் நீ யோக்கியமானவன் ஆகவேண்டும்; பிறகு உன்னால் காணமுடியும்.


ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே (அ)ர்ஜுன திஷ்டதி (BG 18.61)


ஒவ்வொருவரின் இதயத்திலும் கிருஷ்ணர் இருக்கிறார். ஆனால் அது உனக்கு தெரியுமா? உன்னால் காணமுடிகிறதா? உன்னால் அவருடன் பேசமுடிகிறதா? அவர் உன் இதயத்திலேயே இருக்கிறார். ஆனால் அவர் யாருடன் பேசுவார்?


தேஷாம் ஸதத-யுக்தானாம் பஜதாம் ப்ரீதி-பூர்வகம் ததாமி புத்தி-யோகம் தம் (BG 10.10)


அவரது தொண்டில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஈடுபட்டிருக்கும் பக்தனுடன் அவர் பேசுவார். இவை எல்லாம் பகவத்-கீதையில் கூறப்படுகின்றன. நீ பகவத்-கீதையை படிப்பதில்லயா? ஆக அனைத்துக்கும் தகுதி தேவை. இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நாங்கள் மக்களை, கிருஷ்ணரை பார்க்க தகுதி பெற்றவராக ஆக்க முயல்கிறோம். தகுதி பெற்றிருக்காமல் எப்படி உன்னால் பார்க்கமுடியும்? அதற்கு தகுதி தேவை.