TA/710110 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 15:28, 7 July 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பௌதிக வாழ்க்கை என்பது காம வாழ்க்கை. பௌதிக வாழ்க்கை என்பது அனுபவிப்பதற்கு ஆசைப்படுவது மட்டுமே. உண்மையில் அனுபவிப்பதற்கு ஒன்றுமில்லை. அதாவது... அங்கீகரிக்கப்பட்ட மூலத்திலிருந்து ராஸ லீலையைப் பற்றி கேட்போமானால் அதன் விளைவு நம்மை ஆன்மீக தளத்திலான கிருஷ்ணரின் பக்தி தொண்டிற்கு இட்டுச்செல்லும். அதனால் பௌதிக வியாதியான காம ஆசைகள் மறைந்து போகும். ஆனால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மூலங்களிலிருந்து கேட்பதில்லை. தொழில்ரீதியாக பேசுபவர்களை கேட்கிறார்கள் எனவே அவர்கள் காம சமாச்சாரங்கள் அடங்கிய பௌதிக வாழ்க்கையிலேயே இருந்துவிடுகின்றனர். சில சமயம் அவர்கள் சகஜீய மாக மாறுகின்றனர். கிருஷ்ணர் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் பிருந்தாவனத்தில் உங்களுக்கு தெரியுமா யுகல பஜனையில் ஒருவர் கிருஷ்ணராகவும் ஒருவர் ராதையாகவும் மாறுகின்றனர். இதுவே அவர்களின் தத்துவம். இதுபோல பல விஷயங்கள் அங்கு நடக்கின்றன."
710110 - சொற்பொழிவு SB 06.02.05-8 - கல்கத்தா