TA/670320 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 14:41, 19 December 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பௌதிக உலகில் நிரந்திரமாக இருப்பதற்காக நாம் பல திட்டங்களை செய்கிறோம், ஆனால் துரதிருஷ்டமாக நாம் எதிர் விளைவுகளை சந்திக்கின்றோம். இங்கு ஒரு வைஷ்ணவ கவிஞரால் பாடப்பட்ட அருமையான பாடல் ஒன்று உள்ளது. அவர் கூறுகிறார், ஸுகேரே லகிய ஏ பரோ பகினு அனலே புரிஅ கேலா: "நான் இந்த வீட்டை சந்தோஷமாக வாழ நிறுவினேன். துரதிருஷ்டமாக, அது தீக்கு இரையாகிவிட்டது, ஆகையால் அனைத்தும் முடிந்துவிட்டது." இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த பௌதிக உலகில் வசதியாக, அமைதியாக, நிரந்தரமாக வாழ்வதற்காக நாம் பல திட்டங்களை செய்கிறோம், - ஆனால் அது சாத்தியமல்ல. மக்கள் இதை புரிந்துக் கொள்வதில்லை. அவர்கள் பார்க்கிறார்கள், அனுபவிக்கிறார்கள், சாஸ்திரத்தில்; வேதங்களில் நாம் போதனைகளை பெறுகிறோம் அதாவது எதுவும் அழிந்துபோகாமல் இருக்காது. இந்த பௌதிக உலகில் அனைத்தும் அழிவைக்காணும். மேலும் நாம் உண்மையிலேயே பார்க்கிறோம் அதாவது அழிவின் பிரதிநிதி எப்போழுதும் தயாராக இருக்கிறார்கள்."
670320 - சொற்பொழிவு SB 07.07.40-44 - சான் பிரான்சிஸ்கோ