TA/670329b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 14:54, 26 December 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"விரஹ என்றால் பிரிவு. பிரிவு. "கிருஷ்ணா, தாங்கள் மிகவும் நல்லவர், தாங்கள் கருணை நிறைந்தவர், தாங்கள் அழகானவர். ஆனால் நான் அயோக்கியன், நான் பாவம் நிறைந்தவன், அதனால் தங்களை என்னால் பார்க்க முடியவில்லை. தங்களை பார்க்க எனக்கு தகுதியில்லை.
"ஆக இவ்வாறாக, ஒருவர் கிருஷ்ணரின் பிரிவை உணர்ந்தால், ஆதாவது "கிருஷ்ணா, நான் தங்களை பார்க்க வேண்டும், ஆனால் எனக்கு தகுதியில்லை அதனால் என்னால் பார்க்க முடியவில்லை," இந்த பிரிவின் ஏக்கம் உங்களை கிருஷ்ண உணர்வில் மேம்படுத்தும். பிரிவின் ஏக்கம். இதைவிடுத்து "கிருஷ்ணா, நான் தங்களை பார்த்துவிட்டேன். முடிந்துவிட்டது. அவ்வளவுதான். தங்களை புரிந்துக் கொண்டுவிட்டேன். அவ்வளவுதான். என் அனைத்து வேலை முடிந்துவிட்டது." இல்லை! நிலையாக உங்களை பற்றி நினைத்துப்பாருங்கள் அதாவது "எனக்கு கிருஷ்ணரை காண தகுதியில்லை." அது உங்களை கிருஷ்ண உணர்வில் மேம்படுத்தும்."
670329 - சொற்பொழிவு - சான் பிரான்சிஸ்கோ