TA/670416 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 08:17, 30 December 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
நமது காந்தியை போன்று: அவர் பகவத் கீதையிலிருந்து அகிம்சையை நிரூபிக்க விரும்பினார். போர்க்களத்தில் உபதேசிக்கப்பட்டதால் பகவத்கீதை முழுமையாக வன்முறையே. எப்படி அவரால் நிரூபிக்க முடியும்? எனவே அவர் அவரது சொந்த கற்பனை மூலம் அர்த்தத்தை உருவாக்குகிறார். அது தொந்தரவு மிகுந்தது, அத்தகைய வியாக்கியானத்தை படிக்கும் எவரும் அழிந்தனர். காரணம், பகவத் கீதை கிருஷ்ண உணர்வை தட்டி எழுப்பவே உள்ளது. அது தட்டி எழுப்பப்படாவிட்டால், அது வெறும் பயனற்ற நேர விரயமே. சைதன்ய மகாபிரபு, ஒரு பாமர ஆனால் பகவத் கீதையின் சாராம்சமான பகவானுக்கும் அவரது பக்தருக்கும் இடையிலான உறவை எடுத்துக்கொண்ட பிராமணரை கட்டி அணைத்தார். அதனால், எந்தவொரு இலக்கியத்தினதும் உண்மையான சாராம்சத்தை எடுத்துக் கொள்ளாவிட்டால்… அது வெறும் நேர விரயமே."
670416 - சொற்பொழிவு CC Adi 07.109-114 - நியூயார்க்