TA/690108c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:27, 19 June 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
" கிருஷ்ணர் இந்தியாவில் தோன்றினார் ஆகையினால் அவர் இந்தியர் அல்லது இந்து கடவுள் என்று நீங்கள் நினைக்க கூடாது. அது தவறாகும். கிருஷ்ணர் எல்லோருக்கும் சொந்தமானவர். கிருஷ்ணர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கருதக் கூடாது, அல்லது கிருஷ்ணர் இந்தியாவிற்கு சொந்தமானவர் அல்லது அவர் க்ஷத்ரியர் என்று கருதக் கூடாது. இல்லை. அவர் எந்த பௌதிக பதவிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் அனைத்திற்கும் மேலானவர். பகவத் கீதையில், பதினான்காவது அத்தியாயத்தில், அவர் வலியுறுத்துகிறார், ஸர்வ-யோநிஷு கௌந்தேய ஸம்பவந்தி மூர்தய꞉ (ப.கீ. 14.4). அங்கே 8,400,000 வகையான ஜீவாத்மாக்கள், மனிதர்களை சேர்த்து இருக்கின்றன. மேலும் கிருஷ்ணர் கூறுகிறார், அஹம்ʼ பீஜ-ப்ரத꞉ பிதா, "நான்தான் அவர்களுக்கு விந்து அளிக்கும் தந்தை." ஆகவே அவர் வலியுறுத்துகிறார் அவர் தந்தையாக, மனித சமுகத்திற்கு மட்டுமல்ல, விலங்கு சமூகம், மிருக சமூகம், பறவை சமூகம், பூச்சி சமூகம், நீர்வாழ் சமூகம், தாவர சமூகம், மரங்களின் சமூகம், - அனைத்து உயிர் இனங்களுக்கும். பகவான் எந்த ஒரு சமூகத்திற்கும் அல்லது வகுப்பிற்கும் சொந்தமானவர் அல்ல. அது தவறான கருத்து. பகவான் எல்லோருக்கும் சொந்தமானவர்."
690108 - சொற்பொழிவு BG 04.11-18 - லாஸ் ஏஞ்சல்ஸ்