TA/690218 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:52, 20 July 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் உங்கள் மனதை கிருஷ்ணர் மீது கவனம் செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள், மேலும் உங்கள் மனம் திசை திருப்பப்பட்டுவிட்டது, எங்கோ சில திரைப்படத்திற்கு செல்லுகிறது. எனவே நீங்கள் அதை திருப்ப வேண்டும், "அங்கு செல்ல வேண்டாம். தயவுசெய்து இங்கிரு." இது யோகாவின் பயிற்சி: மனதை கிருஷ்ணரைவிட்டு போகவிடக் கூடாது. இதை உங்களால் வெறுமனே பயிற்சி செய்ய முடிந்தால், மனதை கிருஷ்ணரைவிட்டு போகவிடக் கூடாது... நம் மனதை ஓர் இடத்தில் கிருஷ்ணர் மீது நிலை நிறுத்த முடியாவிட்டால், அதற்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது. ஒரு இடத்தில் அமர்ந்து எப்பொழுதும் மனதை கிருஷ்ணர் மீது நிலை நிறுத்துவது, அது சுலபமான வேலையல்ல. அதில் பயிற்சி செய்யாத ஒருவர், அவன் வெறுமனே போலியாக பின்பற்றினால், பிறகு அவன் குழப்பமடைவான். நாம் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் அனைத்தும் கிருஷ்ணருடன் இணைக்கப்பட வேண்டும். நம்முடைய வழக்கமான செயல்கள்

அனைத்தும் கிருஷ்ணருக்கு தொடர்புடையதாக வார்க்கப்பட வேண்டும். பிறகு உங்கள் மனம் கிருஷ்ணர் மீது நிலைத்திருக்கும்."

690218 - சொற்பொழிவு BG 06.25-29 - லாஸ் ஏஞ்சல்ஸ்