TA/690525 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:55, 1 September 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒரு ப்ராஹ்மண தகுதி யாதெனில் உண்மைத்தன்மை, தூய்மை, சத்தியம், ஷௌசம். சம, மனத்தின் சமநிலை, எவ்விதமான தொந்தரவும் இல்லாமல், எந்த கவலையும் இல்லாமல். ஸத்யம்ʼ ஷௌசம் ஷமோ தம. தம என்றால் புலன்களை கட்டுப்படுத்துவது. ஷமோ தம திதிக்ஷ. திதிக்ஷ என்றால் சகிப்புத்தன்மை. எனவே இந்த பௌதிக உலகில் பல காரியங்கள் நிகழும். நாம் சகித்துக் கொள்ள பயிற்சி செய்ய வேண்டும். தாம்ʼஸ் திதிக்ஷஸ்வ பாரத. கிருஷ்ணர் கூறுகிறார், "நீங்கள் சகிப்புத்தன்மையை கற்றுக் கொள்ள வேணடும். ஸுக-து꞉க, மகிழ்ச்சி, துன்பம், அவை பருவகால மாற்றங்கள் போல வரும்." எவ்வாறு என்றால் சில நேரங்களில் மழையும், சில நேரங்களில் பனி பொழிவும், சில நேரங்களில் சுட்டெரிக்கும் வெப்பமும் இருக்கும். உங்களால் எவ்வாறு போராட முடியும்? அது சாத்தியம் அல்ல. சகித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அவ்வளவுதான்."
690525 - சொற்பொழிவு Initiation Brahmana - New Vrindaban, USA